Monday, September 03, 2007

கிருஷ்ண ஜெயந்தி

பொதுவா நமக்கு பண்டிகைகள் நினைவுக்கு இருக்கோ இல்லியோ, அந்தந்த பண்டிகைக்கு செய்யும் பக்க்ஷனங்கள் எல்லாம் அத்துபடி.

கிருஷ்ணர் என்னிக்குமே ஸ்பெஷல்.


உப்பு சீடை, வெல்ல சீடை, புழுங்கல் அரிசி முறுக்கு, முள்ளு முறுக்கு,தட்டை, தேங்குழல், அப்பம், அதிரசம்.
ஸ்ஸ்ஸ்ப்பா! இதேல்லாம் கிருஷ்ணர் அமுக்கினாரோ இல்லையோ அவர் பெயரை சொல்லி நாம அமுக்கறோம்.
வீட்டுல இருக்கற நம்ம கீதா பாட்டி மாதிரி பெரியவங்க இதையேல்லாம் செய்யறத்துக்கு ஒரு ரகசிய பார்முலா எல்லாம் வெச்சு இருப்பாங்க.

முறுக்கு கடமுடனு வரணும்னா இவ்ளோ அரிசிக்கு இவ்ளோ தண்ணி, இந்த பததுல அரைக்கனும்னு ஒரு ஜிஸெல்வி ராக்கட் விடற ரேஞ்சுக்கு முந்தைய நாளே கவுன் டவுன் எல்லாம் ஆரம்பிச்சுடும்.
சேட்டை பண்ணூம் குழந்தைகளை அந்த ஏரியாவிலிருந்து அப்புறபடுத்துதல், நடுவில் கவுரவ ஆலோசனை சொல்ல துடிக்கும் ரங்குவை "உப்பு வாங்கிண்டு வாங்க! பெருங்காயம் வாங்கிண்டு வாங்க! வெல்லம் பத்தலை!"னு சாக்கு சொல்லி டிரில்(பழி) வாங்கும் படலம் எல்லாம் இனிதே நிறைவேறும்.

உம்மாச்சி கும்பிட்டு முடிஞ்சதும், பக்கத்து வீடு, எதிர் வீடு, அடுத்த வீடு என டிஸ்ட்ரிபியூஷன் அழகா நடக்கும். எல்லோருக்கும் குடுக்கனும்! என்ற நல்ல எண்ணத்தை விட, "முறுக்குனா இப்படி தான் இருக்கனும்!"னு அந்த பரிமளா தெரிஞ்சுக்கட்டும், பெருசா போன கிருஷ்ண ஜெயந்தில உப்பில்லாத முறுக்கை பண்ணிட்டு என்ன பீத்து பீத்தினா அவ! என பீர்(peer not beer) பிரஷர் எல்லாம் தலைகேறும்.

இதுல தெரியாதனமா, "பரிமளா மாமி வீட்டு அதிரசத்துக்கும் மணமுண்டு!"னு ரங்கு திருவாய் மலர்ந்தருளினால் போச்சு!

அன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி ரங்குவுக்கு மட்டும் சிவ ராத்திரியாக மாறி விடிய விடிய லக்க்ஷார்சனை, சகஸ்ர நாமாவளி எல்லாம் ஜோரா நடைபெறும்.

அப்புறம் அந்த ஜென்மத்துக்கு ரங்குவிற்கு அதிரசத்தை பார்த்தாலே அலர்ஜியாகி விடும்.

இப்படி ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்தாலும் பண்டிகைகள் என்றுமே இனிமையானது தானே! (மாரல் ஆஃப் தி பதிவு சொல்லிட்டோம்ல).
happy Birthday krishna! :)))

31 comments:

Karthik Sriram said...

Ambi, Ipdi oru post pottu, orey feelings kilapitiye? Inge US la naanga kaanju pona bread-um and cereals sapidaradha partha orey erichala varadhu..

anyways enjoys maadi!

LKS

மெளலி (மதுரையம்பதி) said...

அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்குள் ஒரு கிருஷ்ணன் வர வாழ்த்துக்கள் அம்பி

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி பக்ஷ்ணம் இருக்கட்டும் அந்த கிருஷ்ணன் பிஞ்சு கால்களை மாவுகோலத்தில்(மாவுகோலம் போட்டுதான் எனக்கு மாவுகட்டு போட்டு விட்டார்கள்)போடுவார்களே எவ்வளவு அழகாக இருக்கும் அடுத்த வருஷம் பையன் கலை வைத்தே கோலம் போடலாம்

Avial said...

Happy thalai Krishan jayanthi Ambi .

துளசி கோபால் said...

ராக்கெட் ரகசியங்களை எதுக்கு வீணாசொல்லித்தரணுமுன்னு
இப்ப கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & அடையார் ஆனந்த பவன்
ரெண்டுபேரும் போட்டி போட்டுக்கிட்டு பண்டிகை பக்ஷணம்
பாக்கெட் போட்டாச்சுன்னு பேப்பர்லே பார்த்துட்டு................

ஹூம்.......... ஏட்டுச் சுரைக்காய்............ உதவாது

நம்ம வீட்டு கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 'குலாப் ஜாமூன்'



எங்க கோயிலிலும் இன்னைக்குத்தான் கொண்டாட்டம்.

கி.ஜெ. வாழ்த்து(க்)கள்.

ambi said...

//Ipdi oru post pottu, orey feelings kilapitiye? Inge US la naanga kaanju pona bread-um//

@karthik, அடடா சாரிப்பா! நான் வேணும்னா ஈமெயிலில் பக்ஷ்ணம் எல்லாம் அனுப்பவா? :p

//அடுத்த கிருஷ்ண ஜெயந்திக்குள் ஒரு கிருஷ்ணன் வர வாழ்த்துக்கள் அம்பி //
@maduraimpathi, ஆஹா! இப்படி எல்லாம் கூட வாழ்த்தலாமா? :)

//அந்த கிருஷ்ணன் பிஞ்சு கால்களை மாவுகோலத்தில்//
@trc sir, அடடா! ஆமாம், நான் சொல்ல மறந்துட்டேனே! மேடம் சிங்கபூரில், அதனால உங்க கிட்ட பக்ஷ்ணம் பத்தி எதுவும் கேக்க முடியாது. :p

//அடுத்த வருஷம் பையன் கலை வைத்தே கோலம் போடலாம்
//
நீங்களுமா? :p

//Happy thalai Krishan jayanthi Ambi //

@madhu, ha haaa :) same to U also.

//இப்ப கிருஷ்ணா ஸ்வீட்ஸ் & அடையார் ஆனந்த பவன்
ரெண்டுபேரும் போட்டி போட்டுக்கிட்டு பண்டிகை பக்ஷணம்
பாக்கெட் போட்டாச்சுன்னு பேப்பர்லே பார்த்துட்டு//

@tulasi teacher, வாங்க டீச்சர், வாங்க. சரி, விடுங்க, பல்லு இருக்கறவா பக்கோடா திங்கறா! :)

கோபால் மாமா பக்ஷ்ணம் எதுவும் செய்ய கத்துக்கலையா? :p

//நம்ம வீட்டு கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் 'குலாப் ஜாமூன்'
//

ஆஹா! கேக்கவே எவ்ளோ இனிமையா இருக்கு.

உங்களுக்கும் கி.ஜெ. வாழ்த்து(க்)கள். :)

Sumathi. said...

ஹாய் அம்பி,

//ஒரு ஜிஸெல்வி ராக்கட் விடற ரேஞ்சுக்கு முந்தைய நாளே கவுன் டவுன்//

அது சரி, இதுல எத்தனை வருஷ அனுபவமோ? எத்தனை வாட்டி சீடை உருட்டியிருக்கீங்க?

Sumathi. said...

ஹாய் அம்பி,
//உப்பு சீடை, வெல்ல சீடை, புழுங்கல் அரிசி முறுக்கு, முள்ளு முறுக்கு,தட்டை, தேங்குழல், அப்பம், அதிரசம்.//

ஆஹா, இந்த கி.ஜெ க்கு உங்க வீட்டுல இவ்ளோவுமா சாப்பிடப் போறீங்க.... நடக்கட்டும்.. ம்ஹூம்..குடுத்து வச்ச ஆளு தான்...

மங்களூர் சிவா said...

இதுல தெரியாதனமா, "பரிமளா மாமி வீட்டு அதிரசத்துக்கும் மணமுண்டு!"னு ரங்கு திருவாய் மலர்ந்தருளினால் போச்சு!

//அன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி ரங்குவுக்கு மட்டும் சிவ ராத்திரியாக மாறி விடிய விடிய லக்க்ஷார்சனை, சகஸ்ர நாமாவளி எல்லாம் ஜோரா நடைபெறும்.

அப்புறம் அந்த ஜென்மத்துக்கு ரங்குவிற்கு அதிரசத்தை பார்த்தாலே அலர்ஜியாகி விடும்.//

கிரேட் ஹுயுமர். அனுபவமோ??

மங்களூர் சிவா.

gils said...

yov...ivlo pesara aalau..ozhungu mariathaya seedai murukellam veetuku parcel anupanumaakum..ilaati..hmm..naanay vanthu vangikaren :D hehe...ham seedai kaanekeliye kahibi aa sakthey hain :D

வல்லிசிம்ஹன் said...

அம்பி, கிருஷ்ணர் சாயந்திரம் வந்து நல்ல படியாச் சப்பிட்டுட்டுப் போகட்டும்.
ஆஹா, போக வேண்டாம் பாப்பாவா வந்துடட்டும்.
வாழ்த்துக்கள் மா.

இந்த வருஷம் சென்னை மாதிரி இந்த ஊரு டைல்ஸ்ல கோலம் போட முடியாது.

பரவாயில்லை மணைல பாதங்கள் வரைந்து பார்த்துக்கிறேன்.:))
என்னை நினைத்துக் கொண்டு எல்லா பக்ஷணமும் சாப்பிடவும்.:))

வல்லிசிம்ஹன் said...

என்ன தி.ரா.ச சார், எதுக்குக் கட்டு???

Anonymous said...

http://www.sangeethapriya.org/~tvg/247.GITA%20-VELUKKUDI%20SRI%20KRISHNAN/


வேலுக்குடி கிருஷ்ணன் அவர்களின் பகவத்கீதை உபந்நியாசத்தை
கூகுலாண்டவர் கொடுத்தார்.

அனைவரும் கேட்டு உய்வு பெற வேண்டுகிறேன்.

ஜெய் கிருஷ்ணா!

Geetha Sambasivam said...

@ஆப்பு, எல்லாப் போஸ்டும் படிச்சுட்டு வரேன், பின்னூட்டம் கொடுக்கிற அளவு "மொக்கை" கூட இல்லைனு கொடுக்கலை, சரி, சீடை, முறுக்கு பண்ணியது யாரு? அம்பி தம்பியா? அம்பியா? சீடையாலேயே மண்டையும் உடைக்க முயற்சி செய்யப் போறாங்களாமே? வாழ்த்துக்கள்!

@ஹிஹிஹி தி.ரா.ச. சார், HEARTY CONGRATS!

Dreamzz said...

//முறுக்கு கடமுடனு வரணும்னா இவ்ளோ அரிசிக்கு இவ்ளோ தண்ணி, இந்த பததுல அரைக்கனும்னு ஒரு ஜிஸெல்வி ராக்கட் விடற ரேஞ்சுக்கு முந்தைய நாளே கவுன் டவுன் எல்லாம் ஆரம்பிச்சுடும்//
ROFL!

Dreamzz said...

//இப்படி ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்தாலும் பண்டிகைகள் என்றுமே இனிமையானது தானே! (மாரல் ஆஃப் தி பதிவு சொல்லிட்டோம்ல).
happy Birthday krishna! :))) //
ithu ennamo marukka mudiyaatha unmai ambi :)

KK said...

Seedai paarthe pala varudam aagiduchu... ithula neenga vera post potu poga vara veikureengale uncle... :(

மே. இசக்கிமுத்து said...

//இப்படி ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்தாலும் பண்டிகைகள் என்றுமே இனிமையானது தானே! //

நல்ல கருத்து!!

Anonymous said...

thangamaniyin seedai,murukku ellam sapttu themba thaan irukeenga,enna palla kazhatti kaiyila kuduthuruvenradha thangamani ipaadi dhhan miratta mudiyum.i hope you didn"t have to consult a dentist in the past 2 days.
nivi.

Anonymous said...

ulugukellam vazhikaatiyana andha vadamadurai maindhan, chinna kannannai ungal veetil adutha varudam poompadham poda varavendum.
happy janmashtami.
moonu naalu krishnan porumillaya veedallam chinna padhangal poda,pinna veedalallam kutti kutti krishnan thavazha vendaama!!!!!!!!
nivi.

Anonymous said...

//முறுக்கு கடமுடனு வரணும்னா இவ்ளோ அரிசிக்கு இவ்ளோ தண்ணி, இந்த பததுல அரைக்கனும்னு ஒரு ஜிஸெல்வி ராக்கட் விடற ரேஞ்சுக்கு முந்தைய நாளே கவுன் டவுன் எல்லாம் ஆரம்பிச்சுடும்//
:))

கிருஷ்ண ஜெயந்தி பயங்கர சூப்பர் போல?

மிஸ்ஸியமமா (பெயர் பாட்டன்ட் எமக்கே) , போலி சாமியார் எல்லாரும் எப்படி இருக்காங்க...கேட்டதாக சொல்லவும்.

Swamy Srinivasan aka Kittu Mama said...

உப்பு சீடை, வெல்ல சீடை, புழுங்கல் அரிசி முறுக்கு, முள்ளு முறுக்கு,தட்டை, தேங்குழல், அப்பம், அதிரசம்.
ஸ்ஸ்ஸ்ப்பா! இதேல்லாம் கிருஷ்ணர் அமுக்கினாரோ இல்லையோ அவர் பெயரை சொல்லி நாம அமுக்கறோம்.

//haha..true.

Swamy Srinivasan aka Kittu Mama said...

"thalai gokulashtami ya ungalukku. vaazthukkal.


//பிஞ்சு கால்களை மாவுகோலத்தில்(மாவுகோலம் போட்டுதான் எனக்கு மாவுகட்டு போட்டு விட்டார்கள்)போடுவார்களே எவ்வளவு அழகாக இருக்கும்

yes. adhu dhaan krishna jayanthi highlight.

Swamy Srinivasan aka Kittu Mama said...

@karthik Sriram :

adhu enna US la kaanju pona breadum cerealsum. US la bakshanam seyyara goshtiyum irukke. engala maari.
neenga singleaa ???? :)

SKM said...

aama!!thangamani Murukku saidhu kodutha nandri unarchiyae illama ippdi oru post. Ammani saidhadhai nalla irukku nu sollama adutha veetu muruku nalla irukku nu sonna inimae adutha varusham neengadhan seedai urutanum,murukku suthanum.:)

KK said...

Yenna mama, maami poori kattaila attack pannama seedai vechu attack pannitaangala? sathame kanom?? :)

Swamy Srinivasan aka Kittu Mama said...

pillayar chaturthi post podalaya ?
kozhukattai amukittu thoongitrukeengala ?

-K mami

KK said...

Hehehehe Kittu Mama & maami... naan yen prev comment'la address pannathu ambi mama and Ms.C maami :D

nandoo said...

enna ithu sirupulla thanama... krishna jayanthiku evalo vishayam pannalam...

for a change..krishnanuku rum and raisin choclate vaangi tharalamae... ethini naaluku thaan seedai muruku..ithe kodukrathu...

;) varta

cheena (சீனா) said...

சில பதிவுகளுக்கு பின்னூட்டங்கள் வ்ந்து குமியுது. ஏன்னு தெரில. 31 பின்னூட்டங்கள் அம்பியின் இந்தப் பதிவிற்கு. இருக்கட்டும். இருக்கட்டும்.

கிருஷ்ண ஜெயந்தி என்ன எந்தப் பண்டிகை என்றாலும் கொண்டாட்டம் தான் - குதூகலம் தான் - மகிழ்ச்சி தான்

Anonymous said...

Good day, sun shines!
There have were times of troubles when I felt unhappy missing knowledge about opportunities of getting high yields on investments. I was a dump and downright pessimistic person.
I have never thought that there weren't any need in big starting capital.
Nowadays, I feel good, I begin to get real income.
It gets down to choose a correct partner who utilizes your funds in a right way - that is incorporate it in real deals, parts and divides the profit with me.

You can get interested, if there are such firms? I have to tell the truth, YES, there are. Please be informed of one of them:
http://theinvestblog.com [url=http://theinvestblog.com]Online Investment Blog[/url]