இந்தியாவே தன் சொந்த தொழிற் நுட்பத்தில் உருவாக்கிய கிரயோஜெனிக் எஞ்சின் ராக்கெட்டை பழுது பார்க்க உங்களால் மட்டும் தான் முடியும்! என என் வீட்டு ஓனரை பெண்களூருக்கு மாற்றல் செய்து விட்டபடியால் நான் அவரது வீட்டை காலி செய்ய வேண்டியதா போச்சு. அதுக்கென்ன? ஒரு மாதத்தில் காலி செய்து விடுகிறேன் என கெத்தாக நான் சொல்லிவிட்டாலும் ரெண்டு நாள் கழித்து தான் இங்குள்ள நிலமைகள் தெரிய வந்தது.
பெண்களூரில் வாடகைக்கு வீடு தேடும் போது சில அடிப்படை விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும்:
எக்காரணம் கொண்டும் நாம் வேலை பாக்கும் உண்மையான கமெனி பெயரை சொல்லவே கூடாது. இந்த லிஸ்ட்டில் முக்யமான சில முன்றேழுத்து கம்பெனிகள், சிஎம்எம்(CMM) லெவல் கம்பெனிகள் என்றால் கிழிஞ்சது கிருஷ்ணகிரி. நாம என்னவோ அந்த கம்பெனியின் சி.இ.ஓ மச்சினி பெண்ணை கல்யாணம் கட்டின மாதிரி வீட்டின் வாடகையை சொல்வார்கள்.
மேலும் உங்கள் கம்பெனியின் கடைசி குவாட்டர்(அந்த குவாட்டர் இல்லடே) நிதி நிலை அறிக்கையை கூட வீட்டின் ஓனர்கள் விரல் நுனியில் வைத்திருப்பார்கள்.
அட்வான்சாக குறந்தது எட்டு மாத வாடகையை எண்ணி வைக்க வேண்டும். நீங்கள் மீண்டும் வீடு காலி செய்யும் போது அதே தொகை உங்களுக்கு வரும், ஆனா வராது. ஒரு மாத வாடகையை பெயிண்டிங் என ஸ்வாஹா பண்ணி விடுவார்கள். பல பேர் நாம் குடுக்கும் அட்வான்சில் தான் வருடா வருடம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறார்கள்.
இது ஒரு பக்கம் என்றால் அப்பார்ட்மெண்ட்களில் மெயிண்டெனன்ஸ் என குறைந்தது ஆயிரத்தில் இருந்து மூவாயிரம் வரை மாதா மாதம் அழ வேண்டும். கேரளாவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பில்டர் உங்கள் வீட்டின் சதுர அடிக்கு மூனு ரூபாய் விதம் பராமரிப்பு தொகை வசூலிக்கிறாராம். அதாவது உங்கள் வீடு ஆயிரம் சதுர அடி என்றால் மூவாயிரம் ரூபாய் நீங்கள் மாதா மாதம் மொய் எழுதனும்.
சரி அப்படி என்னதான் மெயின்டேன் செய்கிறாகள் என பார்த்தால் நம் வீட்டை தவிர எல்லா இடங்களையும் பெருக்கி துடைப்பார்கள். பகலில் ஒருவர், இரவில் ஒருவர் மூக்கை நோண்டியபடியே சேரில் உட்கார்ந்து இருப்பார். செக்யூரிட்டியாம். எவன்யா கண்டுபுடிச்சான் இதெல்லாம்..?
இது எல்லாத்தையும் விட வீட்டை காலி செய்ய பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் என ஒரு ஒரு க்ரூப் இருக்கிறது. சுண்டைக்காய் காலணா, சுமை கூலி எட்டணா என்பார்களே! அது இவங்களுக்கு தான். வீட்டை காலி செய்யும் போது நாம இத்தனை நாள் லோலோன்னு தேடின பொருட்கள் எல்லாம் ஒவ்வொன்னா நம் கண்ணில் அகப்படுகிறது. காசி யாத்ரைக்கு குடுத்த குடை, வாக்கிங்க ஸ்டிக் கூட கிடைத்தது.
"பாருங்க எப்படி தூசியா இருக்கு..? கொஞ்சம் கூட அக்கறையே இல்லை உங்களுக்கு" - பெண்களுக்கு அவுக பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக வந்த ஒரு பிஸ்கோத்து டப்பா கூட பொக்கிஷம் தான். அதுக்காக பழைய நடிகர் ரங்காராவ் மாதிரி கையில் வாக்கிங் ஸ்டிக்கெல்லாம் வைத்து கொண்டு கெத்தாக நான் ஆபிஸுக்கு போக முடியுமா..?
வாஜ்பாய், அப்துல் கலாம் எல்லாம் இதனால் தானோ என்னவோ கல்யாணம் பண்ணி கொள்ளாமல் தேமேன்னு இருந்திருக்கிறார்கள். இல்லாட்டி அவுங்களும் காசி யாத்ரைக்கு குடுத்த குடையை தூசி தட்ட வேண்டி இருக்கும். போன், இன்டர் நெட், காஸ் சிலிண்டர், என ஒரு மனுஷனை எத்தனை விஷயங்கள் சம்சார சாகரத்தில் பிடித்து அழுத்துகிறது..?
ஆபிசில் கேட்டால் அவனவன் ரெண்டு வருடத்துக்கு நாலு வீடு மாறி இருக்கேன்னு பீத்தி கொள்கிறார்கள். அந்த மாஹானுபாவர்களுக்கு பூ போட்டு கால்ல விழுந்து தான் கும்படனும்.
இந்த கோலாகலத்தில் என் பிளாக்கின் பாஸ்வேர்டே மறந்து விட்டது என நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. அக்கறையோடு தனி மெயில் விசாரித்த ஆயிரம் பேருக்கும் (சொல்லிக்க வேண்டியது தான்) மிக்க நன்றி.
39 comments:
எட்டு மாச வாடகைதான் அட்வான்சா? பரவ இல்லையே, இங்க பத்து மாசம் கேக்கறாங்க தலைவரே.
//பாருங்க எப்படி தூசியா இருக்கு..? கொஞ்சம் கூட அக்கறையே இல்லை உங்களுக்கு" //
ஹ்ம்ம் இந்த பிரச்சனை வேண்டாம்னுதான் எல்லாத்தயும் சொன்னத ஊர்லையே வச்சிட்டேன் நான் .. இவங்களுக்கும் ஞாபகம் வரத்து எப்படி நம்ம ஐடியா
அம்பி, நீங்கள் வாயைத் திறந்தாலே சாரி தட்டச்சினாலே பதிவுகள் கலகலன்னு நகைச்சுவை ரகமாக இருக்கு.
கலக்கல். பிரச்சனைகளை நகைச்சுவை உணர்வோடு சொல்லும் உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்தமானவை.
//வரும், ஆனா வராது.//
:))! நல்ல விளக்கமான பெயர்வு. சாரி, பதிவு.
//போன், இன்டர் நெட், காஸ் சிலிண்டர், என ஒரு மனுஷனை எத்தனை விஷயங்கள் சம்சார சாகரத்தில் பிடித்து அழுத்துகிறது..? //
இன்னும் எவ்வளவோ இருக்கு. இப்பவே இப்படி அலுத்துக் கொண்டால் எப்படி:)?
அக்கறையோடு தனி மெயில் விசாரித்த ஆயிரம் பேருக்கும் (சொல்லிக்க வேண்டியது தான்) மிக்க நன்றி.//
நம்பிட்டோம்ல! அது சரி, இந்த வீட்டின் விலாசமாவது கொடுப்பீங்களா?? இல்லாட்டி இதுவும் ரகசியமா?? :P
அம்பி அங்கிள், முதல்லே தலைப்பிலே பெயற்ச்சியை பெயர்ச்சினு மாத்துங்க, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
பெயற்ச்சி இல்லையப்பா, அது பெயர்ச்சி...:)
எல்கே, குறைந்தது எட்டுல ஆரம்பிக்குதுனு சொல்லி இருக்கேன். :)
பாராட்டுக்கு நன்றி ஹை கோவி அண்ணே. :))
ரா.ல, இதுக்கே கண்ண கட்டுது. இன்னமும் இருக்கா..? :))
கீதா பாட்டி, எந்த வீட்டு விலாசம் குடுத்தாலும் நீங்க அம்பத்தூர்ல இருந்து எட்டு காவடி எடுத்தா தான் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கே வர முடியும்.
தக்குடு அண்ட் கீதா பாட்டி, இது ஒரு பின் நவீனத்துவமான பல விஷ்யங்களை பொதிந்த தலைப்பு. புரியவில்லையென்றால் நான் பொறுப்பில்லை. :)
ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் பத்தி யாரு யாருகிட்ட சொல்றதுன்னு ஒரு விவஸ்த்தை இல்லாம போச்சு. Pot calls kettle black. :))
\\அக்கறையோடு தனி மெயில் விசாரித்த ஆயிரம் பேருக்கும் (சொல்லிக்க வேண்டியது தான்) மிக்க நன்றி.//
எனக்கு தெரிஞ்சு நான் மட்டும் தான்ன்னு நினைக்கிறேன். என்னை நீங்க நூறு ரஜினிக்கு சமமா மதிப்பது நினைத்து சந்தோஷமா இருக்கு அம்பி!
பை தி பை கோவியார் சொல்ற மாதிரி என்னமா கொட்டுது நகைச்சுவை அருவி மாதிரி...பொறாமையா இருக்கு ...லைட்டா.:-))
என்னது கேஸ்கனெக்ஷன், ரேஷன்கார்டு, இண்டர்நெட் எல்லாம் ஆம்பிள்ளைங்க வேலையா? பின்ன எதுக்கு பெண்களூர்ன்னு பேர் வச்சிருக்கீங்க. பேசாம ஆண்களூர்ன்னு மாத்துங்க. எங்க வீட்டிலே கேஸ் அடுப்பு இருக்குதான்னு பதிவை படிச்ச பின்ன தான் அபிஅம்மா கிட்டே கேட்டேன். கொந்தளிச்சுட்டாங்க!
//அட்வான்சாக குறந்தது எட்டு மாத வாடகையை எண்ணி வைக்க வேண்டும். நீங்கள் மீண்டும் வீடு காலி செய்யும் போது அதே தொகை உங்களுக்கு வரும், ஆனா வராது. ஒரு மாத வாடகையை பெயிண்டிங் என ஸ்வாஹா பண்ணி விடுவார்கள். பல பேர் நாம் குடுக்கும் அட்வான்சில் தான் வருடா வருடம் வீட்டுக்கு பெயிண்ட் அடிக்கிறார்கள்.//
நான் தப்பிச்சேன்டா சாமி... ரெண்டு மாச வாடகை மட்டுமே முன்பணமாக கொடுத்தேன்... மின்விசிறி ஓடலியா, ஜன்னல் கதவு சரி இல்லியா... எதுவா இருந்தாலும் வீட்டுக்காரரிடம் சொல்லி விட்டால் மறுநாள் சரி செய்யப்பட்டு விடும்... இதுவும் இதே பெங்களூருவில் தான்...
//எக்காரணம் கொண்டும் நாம் வேலை பாக்கும் உண்மையான கமெனி பெயரை சொல்லவே கூடாது. இந்த லிஸ்ட்டில் முக்யமான சில முன்றேழுத்து கம்பெனிகள், சிஎம்எம்(CMM) லெவல் கம்பெனிகள் என்றால் கிழிஞ்சது கிருஷ்ணகிரி.//
என் சகோதரனுடன் சேர்ந்து தான் வீடு எடுத்தேன்... அவன் வேலை பார்க்கும் அந்த மூன்றெழுத்து நிறுவனத்தின் பெயரையும் சொல்லி தான் வீடு எடுத்தேன்... அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேணும் தம்பி...
//பகலில் ஒருவர், இரவில் ஒருவர் மூக்கை நோண்டியபடியே சேரில் உட்கார்ந்து இருப்பார். செக்யூரிட்டியாம்.//
இன்னிக்கு நிறைய திருட்டுக்கள் இவங்க மூலமா தான் நடக்குது... பீ கேர்புல்...
//அதுக்காக பழைய நடிகர் ரங்காராவ் மாதிரி கையில் வாக்கிங் ஸ்டிக்கெல்லாம் வைத்து கொண்டு கெத்தாக நான் ஆபிஸுக்கு போக முடியுமா..?//
அம்பி அங்கிள் போகலாம்... தப்பே இல்ல...
//ஆபிசில் கேட்டால் அவனவன் ரெண்டு வருடத்துக்கு நாலு வீடு மாறி இருக்கேன்னு பீத்தி கொள்கிறார்கள். அந்த மாஹானுபாவர்களுக்கு பூ போட்டு கால்ல விழுந்து தான் கும்படனும்.//
அவர்களை விட எனக்கு தான் இந்த மரியாதை எல்லாம் செய்யணும்... வாடகை
கூடாமல், அதே வீட்டில் எல்லா வசதிகளோடும் சுப யோகமாய் இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்க அவர்களால் முடியாது... :P
//இந்த கோலாகலத்தில் என் பிளாக்கின் பாஸ்வேர்டே மறந்து விட்டது என நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை.//
எப்படிப்பா நம்ப முடியும்... ஏழு வருசத்துக்கு முன்னாடி ஏதோ பேருந்தில் அறிமுகமாகி கடலை வருத்த பொண்ணுங்க பெயர் எல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்கும் உனக்கு மறதியா? Never. நம்ப மாட்டோமே...
:)இந் த மாதிரி பெண்களூர் பத்தி கேக்கும் போது என்னமா மகிழ்ச்சியா இருக்கு தெரியுமா?
@வித்தியாசமான கடவுள், உங்களோட ஒவ்வொரு வார்த்தைக்கும் அக்ஷர லட்சம் கொடுத்தாச்ச்ச்ச்ச்ச்ச், வந்ததுக்குச் சொல்லுங்க. :)))))))))
சீக்கிரமே கண்டம் விட்டு கண்டம் பெயர்ச்சி ப்ராப்திரஸ்து...
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
ஆஹா..இப்பதான் நொந்து இட்லியாகி வீட்டை வித்துருக்கோம்...அடுத்த மாசம் புது வீடு போகணும்... வீடு ஷிப்ட் பண்றதை பத்தி இப்படி பீதி கிளப்பறீங்களே சார்... ஹும்... விதி யாரை விட்டது. எனக்கும் கூட இந்த securities பாத்தா இப்படி தான் தோணும்
ப்ளாக் password மறந்து போச்சா... அது என்னப்பா அது பழமொழி... சீப்பை ஒளிச்சு வெச்சா...என்னமோ சொல்லுவாங்களே... சும்மா சொன்னேன்
வாஜ்பாய் அப்துல்கலாம் மாதிரி நீங்க இருந்திருந்தானு இந்த டயலாக் உங்க தங்கமணிகிட்ட சொல்லி பாருங்க, சும்மா ஒரு கற்பனை அவங்க response "ஹும்... இது உங்களுக்கு மொதலே தோணி இருந்தா நல்லா தான் இருந்திருக்கும்... விதி என்னை விடலியே"
ena ambi ipadi solreenga bangalore le recession nale veedellam vadahaiku poharthila so veedu rent ellam kurachitanga nu en friend solli kelvi patein neenga ena epadi solreenga koncham unamayana nilamaya sollunga enaku koncham udaviya irukum
வாங்க அபி அப்பா, எவ்ளோ நாளாச்சு உங்கள பாத்து(பிளாக்குல தான்)...
பெண்கள் டாமினேட் பண்றதால இது பெண்களூர். :))
என்னது கேஸ் இருக்கறதே உங்களுக்கு இப்ப தான் தெரியுமா..? இன்னுமா உங்கள இப்படியே அபி அம்மா விட்டு வெச்ருக்காங்க..? :p
வி-கடவுள், பெரும்பாலும் ஓனர்கள் இப்படி தான். சில விதி விலக்குகளும் உண்டு. உன் ஓனர் போன் நம்பர் குடு, நான் கொஞ்சம் டீடெயிலா பேசனும் அவர்கிட்ட. ரெம்ப்ப்ப நல்லவரா இருக்காரே! :))
என்ன முத்தக்கா, வாட் இஸ் தி மேட்டர்..? உங்க ரங்குவுக்கு பெண்களூர் ட்ரான்ஸ்பர் வருதா..? :p
பாஸ்டன் நாட்டாமை, ஆமென். :)
அப்பாவி தங்கமணி, வீட்டை பேக் பண்ணூம் போது தெரியும் எவ்ளோ வேஸ்ட் சாமானா வாங்கி குவிச்ச்ருக்கோம்னு. அட்வான்ஸ் வாழ்த்துக்கள். எஞ்ஜ்ஜாய் (ஜனகராஜ் குரலில்). :))
ஆமா, நீங்க சொன்ன மாதிரியே தான் சொன்னாங்க. :p
உத்ரா, ரிஸிஷன் எல்லாம் போன வருஷம். இப்ப வந்து பாருங்க, கும்பல் கும்பலா ஆள் எடுக்கறாங்க. ஆக வழக்கம் போல எல்லாம் ஏறிடுச்சு. புரோக்கர்கள் தொல்லை வேற. அதை போஸ்ட்டுல சொல்ல மறந்துட்டேன்.
ஏதேனும் F1 வேணும்னா தனி மெயிலிடவும், இல்லாட்டி கிழக்கே போகும் ரயில் பின்னாடி எழுதற மாதிரி இங்கன ஒரு கமண்டாவே போடவும். :))
brokerage ellam kuduthu veedu pudicheengala aha therinja enga veeda kuduthirupene......
உத்ரா, புரோக்கரேஜ் இருக்குனு தானே சொல்லி இருக்கேன், நான் குடுத்தேன்னு சொல்லலையே! :))
ரொம்ப அலைச்சல் இல்லாம ஒரே நாளுல பக்கத்து தெருவுலயே கிடச்சிடுச்சு. (ஒரு நாள் மட்டும் வேற ஏரியாவுல அலைஞ்சு திரிஞ்சேன்)
// உத்ரா, புரோக்கரேஜ் இருக்குனு தானே சொல்லி இருக்கேன், நான் குடுத்தேன்னு சொல்லலையே! :))//
ambiya koka
//ஏதேனும் F1 வேணும்னா தனி மெயிலிடவும், இல்லாட்டி கிழக்கே போகும் ரயில் பின்னாடி எழுதற மாதிரி இங்கன ஒரு கமண்டாவே போடவும். :)) //
nandri ambi ungal mail id peter pakathil iruke atharku mail anupalama?
நகைச்சுவை எல்லாம் ஒன்னும் வழியலை. சும்மா கிளப்பி விடறாங்க :)- முன்னாடி எல்லாம் நல்லா இருக்கும். இப்போ ஏதோ எழுதனமேன்னு எழுதற மாதிரி இருக்கு. அப்படியும் ஒன்னு ரெண்டு உங்களுக்கு தானாவே தப்பி வருது :)-
கன்னாபின்னான்னு ஸ்பெல்லிங் மிஸ்டேக் வேற ! இந்த லட்சணத்துல பின்நவீனத்துவ தலைப்பு வேற கேக்குதா :)- வீடை பேத்து எடுத்துக்கிட்டு வேற இடம் போனாலும் அது பெயற்ச்சி கிடையாது :)-
//இந்த கோலாகலத்தில் என் பிளாக்கின் பாஸ்வேர்டே மறந்து விட்டது என நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை.//
எப்படிப்பா நம்ப முடியும்... ஏழு வருசத்துக்கு முன்னாடி ஏதோ பேருந்தில் அறிமுகமாகி கடலை வருத்த பொண்ணுங்க பெயர் எல்லாம் ஞாபகத்தில் வைத்திருக்கும் உனக்கு மறதியா? Never. நம்ப மாட்டோமே
vazhimozhiren...
super
///முன்னாடி எல்லாம் romba நல்லா இருக்கும். இப்போ ஏதோ எழுதனமேன்னு எழுதற மாதிரி இருக்கு. அப்படியும் ஒன்னு ரெண்டு உங்களுக்கு தானாவே தப்பி வருது :)-///
unmai than itharkum vazhimozhihiren
//அதுக்காக பழைய நடிகர் ரங்காராவ் மாதிரி கையில் வாக்கிங் ஸ்டிக்கெல்லாம் வைத்து கொண்டு கெத்தாக நான் ஆபிஸுக்கு போக முடியுமா..?
வாஜ்பாய், அப்துல் கலாம் எல்லாம் இதனால் தானோ என்னவோ கல்யாணம் பண்ணி கொள்ளாமல் தேமேன்னு இருந்திருக்கிறார்கள். இல்லாட்டி அவுங்களும் காசி யாத்ரைக்கு குடுத்த குடையை தூசி தட்ட வேண்டி இருக்கும்//
வாக்கிங் ஸ்டிக்கு வச்சிட்டு..ன்னு படிக்கும் போதே நினைச்சேன், கல்யாணத்துக்கு எங்க வாக்கிங் ஸ்டிக் கொடுப்பாங்க? (பெண் வீட்டுக்காரங்க நப்பாசையில) காசி யாத்திரை குடை தானே கொடுப்பாங்க, அதைத் தான் பின்நவீனத்துவ வழக்கில அம்பி வாக்கிங் ஸ்டிக்னு சொல்றாருன்னு நினைச்சேன்.... சரியாத் தான் இருக்கு. ம், எதுக்கு அம்பி வீட்டு தங்கமணி அதை பத்திரமா வச்சிருக்காங்க? ஏதோ செய்தி இருக்கு!
வி.கடவுள், அப்பப்ப வந்து இப்படி அம்பி காது புகைய விசிறிட்டு போறது! அம்பி வீட்டு தங்கமணி காசி யாத்திரை குடையோட விசிறியும் பத்திரமா வச்சிருக்காராம்:-)
//வாக்கிங் ஸ்டிக்கு வச்சிட்டு..ன்னு படிக்கும் போதே நினைச்சேன், கல்யாணத்துக்கு எங்க வாக்கிங் ஸ்டிக் கொடுப்பாங்க? (பெண் வீட்டுக்காரங்க நப்பாசையில) காசி யாத்திரை குடை தானே கொடுப்பாங்க//
கெபி, குடையோடு, கம்பும் உண்டு காசி யாத்திரையிலே. அதோடு கீதை புத்தகம், ஸ்லோக புத்தகம்னு கொடுப்பாங்க.
அது சரி. வேற வீடு கிடைத்ததா? வீடு மாறி விட்டீர்களா? எனக்குத் தெரியணுமே!
நல்ல போஸ்ட்தான்.
//பெரும்பாலும் ஓனர்கள் இப்படி தான். சில விதி விலக்குகளும் உண்டு. உன் ஓனர் போன் நம்பர் குடு, நான் கொஞ்சம் டீடெயிலா பேசனும் அவர்கிட்ட. ரெம்ப்ப்ப நல்லவரா இருக்காரே! :))//
என் வீட்டு ஓனர் வீட்டில் சிதம்பர ஆட்சி அல்ல... மதுரை ஆட்சி (ஆச்சி அல்ல)... அதனால் தான் எனக்கு சுலபமா வீடு கிடைச்சுடுச்சு... அத்தோட அவங்களுக்கு இது மாதிரி மூணு வீடு (ஒவ்வொரு வீட்டிலேயும் 5 பாகம் - portion) இருக்கு. அதுல இவங்க இருக்க இருக்க பாகத்தை மட்டும் விட்டுட்டால் 14 பாகம் X 5000 வாடகை... போதாதா... அத்தோட கெட்டவங்களுக்கு ஆண்டவன் அள்ளி அள்ளி கொடுப்பான்... ஆனால் கை விட்டுடுவான்... நல்லவங்களை அதிகமா சோதிப்பான்... ஆனால் கை விட மாட்டான்... (நான் நம்ம ரெண்டு போரையும் பத்தி சொன்னேன்...)
//brokerage ellam kuduthu veedu pudicheengala aha therinja enga veeda kuduthirupene......//
பத்திரமா வச்சிருங்க... தேவைப்படும்... சொல்லுறேன்...
//ரொம்ப அலைச்சல் இல்லாம ஒரே நாளுல பக்கத்து தெருவுலயே கிடச்சிடுச்சு. (ஒரு நாள் மட்டும் வேற ஏரியாவுல அலைஞ்சு திரிஞ்சேன்)//
பெங்களூருவில் வீடு தேடும் போது ஒரு நாள் நல்லா நாலு ஏரியா சுத்தினா போதும்... நிச்சயமா வீடு கிடைச்சிடும்... இது ஊரறிஞ்ச ரகசியம்... தமிழ் நாட்டுல தான் இதுல ரொம்ப கஷ்டம்... பெரும்பாலும் புரோக்கர் மூலம் தான் பிடிக்க வேண்டி இருக்கு...
//நான் குடுத்தேன்னு சொல்லலையே! :))//
குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஓட்டலை... நம்பிட்டோம்...
:)))
நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க அம்பி! நைஸ் ப்ரெஸண்டேஷன். என்ன பின்னவீனத்துவமோ தலைப்புல.. ஒண்ணும் பிர்ல பா..
veeta maatharda!!!sami porum porumnnu solra alavuku potti thookiyachu.enga...ippodhaikku thalai nagaram thanjam.endha oorponalum,rengamani mattum adutha naal kannini pai thookittu jammunu kilambiduvar.naan mootai mudichai katti,lorry vandhadum irakki,andha voor pazhagi(pettai rowdi aagara timela)correcta set aagum podu adutha ooru... adutha veedu...mudhalla kashtam dhaan....appuram "pazhagidum".all the best.lol post.
nivi.
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
உத்ரா, அதுக்கும் அனுப்பலாம், ஆட்டோ அனுப்ப வேண்டிய முகவரின்னு இங்கயே போட்டு இருக்கேன் பாருங்க, அதுக்கும் மெயில் அனுப்பலாம். :)
மணி, நான் எங்கயாவது வழிஞ்சு ஓடுதுன்னு சொல்லி இருக்கேனா? இப்படி கிளப்பி விடறதே பல பேருக்கு பொழப்பா போச்சு. நான் யதார்த்தமா தான் சொன்னேன் பா. :p
இந்த வாரம் பல பேரு பெயர்த்து எடுத்துட்டாங்க போல. :)))
உத்ரா, விகடவுள் கூட சேர வேண்டாம், அவ்ளோ தான் சொல்வேன்.
:))
கெபி, பாட்டியே சொல்லி இருக்கங்க பாருங்க. உங்க கல்யாணத்துல குடுக்கலையா..? :p
சுப்பு, நீங்க தான் ரெம்ப நல்லவங்க. ஒரு வாரத்தில் கிடைத்து விட்டது, கொஞ்சம் சிரமத்துடன். :)
விகடவுள், சரி தான், இப்போ நல்லவன் யாரு?ன்னு தான் கேள்வியே.. :p
தேங்க்யூ அனன்யா. :)
போஸ்டருக்கு நன்றி தலைவன் டாட் காம். உங்க புரபைலுல இருக்கற பிகர் யாருங்க..? :p
கால காட்டுங்க நிவி. நீங்க இதுல பெரிய ஆளு போலிருக்கே. சந்தடி சாக்குல உங்க ரங்குவையும் குத்தியாச்சு போல. :))
இப்பதான் நான் வீடு தேடப் போறேன். முடிச்சிட்டு ஒருபதிவு போடறேன்
அப்போ சொந்த வீடு வாங்கிருங்க தல.. பிரச்சினையே இருக்காது...
உண்மை...உண்மை...உண்மை...உண்மை...
//போன், இன்டர் நெட், காஸ் சிலிண்டர், என ஒரு மனுஷனை எத்தனை விஷயங்கள் சம்சார சாகரத்தில் பிடித்து அழுத்துகிறது..? //
ஆமா பாஸ்!
:)
//போன், இன்டர் நெட், காஸ் சிலிண்டர், என ஒரு மனுஷனை எத்தனை விஷயங்கள் சம்சார சாகரத்தில் பிடித்து அழுத்துகிறது..? //
ஆமா பாஸ்!
:)
"பாருங்க எப்படி தூசியா இருக்கு..? கொஞ்சம் கூட அக்கறையே இல்லை உங்களுக்கு" - பெண்களுக்கு அவுக பிறந்த வீட்டில் இருந்து சீதனமாக வந்த ஒரு பிஸ்கோத்து டப்பா கூட பொக்கிஷம் தான். அதுக்காக பழைய நடிகர் ரங்காராவ் மாதிரி கையில் வாக்கிங் ஸ்டிக்கெல்லாம் வைத்து கொண்டு கெத்தாக நான் ஆபிஸுக்கு போக முடியுமா..?
-----------------------------
Sema LOL Ambi.. You can actually try that. Oru different ah irukkum.
ஆல் தி பெஸ்ட் எல்கே.. :))
கோப்ஸ், உனக்கு ரெம்ப நல்ல மனசுப்பா. சொந்த வீடும் வேலை பாக்கற ஊர்லயே வாங்க்னும். :))
ரா ரா சோழன், இத்தனை தடவையா..? ரெம்ப அடி வாங்கியிருக்கீங்க போல. :p
வாங்க ம-சிவா, உங்க வலி, வேதனை எல்லாம் எனக்கும் புரியுது. :D
@extra ordinary, அவ்வ்வ்வ்வ், என்ன ஒரு வில்லத்தனம்..?
Post a Comment