Wednesday, April 21, 2010

நாங்கள் இந்தியர்கள்

பொட்டி தட்டி களைத்து போன மக்கள் பஃப் பக்கம் ஒதுங்க நினைக்கும் அது ஒரு அந்தி சாயும் பெண்களூர் மாலை நேரம். ஷாரூக்கானே தன் பணத்தை முதலீடு செய்திருப்பதாக சொல்லபடும் அந்த வங்கியின் பிரதான கிளை அமைந்து இருக்கும் எம்.ஜி ரோடில் வலதுபுற ஓரமாக நடந்து வந்தேன். ரெண்டு துரைசாரினிகள் ஒருவருக்கு முப்பது இருக்கலாம், அருகில் இருப்பது அவரது மகள் பன்னிரெண்டு வயதிருக்கலாம். அந்த டிராபிக் நிறைந்த சாலையை வலபுறமிருந்து இடபுறம் கடக்க நாலு முறை முயற்சி செய்து தோற்று விட்டனர்.

என்னைப் பார்த்ததும் அந்த அம்மணிக்கு என்ன தோன்றியதோ தெரியலை, "யோவ், நீங்கள்ளாம் எப்படி தான் சாலையை கடக்கறீங்களோ?"னு கொஞ்சம் ஆச்சர்யம், கொஞ்சம் மன வெறுப்புடன் அலுத்துக் கொண்டார். முன்பின் தெரியாத ஒரு இளைஞனிடம்(நான் தான்டே!) இவ்ளோ ஜகஜமாக பேச ஒரு கட்ஸ் வேணும். நம்மூர்ல இதே வேலைய நாம செஞ்சு இருந்தா ஊர்ல இருக்கற அப்பாவ இங்க இருந்தே கூவி அழைத்து, கும்மி இருப்பார்கள். அப்படி அலுத்துக் கொண்ட அடுத்த ரெண்டு நொடிகளில் தனது மன உளைச்சலை என்னிடம் கொட்டினதுக்கு மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

டக்குனு அந்த பெண்மணி அப்படி சொன்னதும் எனக்கும் ரோசம் பொத்துக் கொண்டு வரவில்லை. உண்மை தானே! நம்மூர்ல சிக்னல்களை, பாதசாரிகளை, ஸீப்ரா கிராசிங்குங்களை என்னிக்கு மதிச்சு இருக்கோம்..? நித்ய கண்டம் பூர்ண ஆயுசு உள்ளவர்கள் மட்டுமே இங்கு சாலைகளை கடக்க முடிகிறது. யார் எவர் மீது மோதினாலும், முதலில் யார் சவுண்டு விடுகிறார்களோ அவர்கள் நியாயம் தான் ஜெயிக்கிறது.

உங்களுக்கு ஏற்பட்ட அசெளகரியத்துக்கு மிகவும் வருந்துகிறேன், நானும் இந்த சாலையை கடக்க வேண்டும், என்னுடன் வாருங்கள், உங்களுக்கு என்னால் உதவ முடியும் என நினைக்கிறேன். நீங்கள் எந்த நாட்டை சார்ந்தவர் என நான் தெரிந்து கொள்ளலாமா..?

நாங்கள் ஜெர்மனியை சேர்ந்தவர்கள்.

(ஜெர்மானியர்கள் கொஞ்சம் முன்கோபிகள் என்பது உண்மை தான் போலும்)

டிராபிக் கான்ஸ்டபிள் வண்டியை நிப்பாட்ட கை காட்டுவது போலவே நாங்கள் மூனு பேரும் கை காட்டியபடியே அந்த சாலையை ஒரு வழியாக கடந்தே விட்டோம். அந்த பெண்மணிக்கு மகிழ்ச்சி தாங்க வில்லை. கிரேட்! கிரேட்! என நாலைந்து முறை சொல்லி விட்டார். பாவம், ரெம்ப அடி வாங்கி இருப்பாங்க போல.

என் பெயரை கேட்டு தெரிந்து கொண்டு மிக சரியாக தப்ப்பாக உச்சரித்து விட்டு நன்றி சொல்லி கிளம்பினார்கள்.

ஹர்ஷர் காலத்தில் வந்த சீன யாத்ரீகர் யுவாங்-சுவாங்கும், மெகஸ்தினசும் தமது இந்திய பயண கட்டுரைகளில் இந்தியர்களை, இங்குள்ள வளங்களை வியந்து பாராட்டி எழுதியுள்ளனர். இந்த ஜெர்மானிய பெண்ணும் தனது இந்திய பயணத்தை பற்றி ஜெர்மனிலோ, ஆங்கிலத்திலோ பதிவு எழுதலாம். ஒரு வேளை நீங்கள் அதை படிக்க நேர்ந்தால், "உனக்கு உதவியதும் ஒரு இந்தியன் தான்!" என தைரியமாக பின்னூட்டமிடுங்கள்.

பி.கு: ஐஸ்லாந்தில் எரிமலை குமறியதால் தான் நான் பதிவெழுத தாமதமாகி விட்டது என சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. அடுத்த பதிவு கொஞ்சம் சீக்ரமாகவே வரும்.

25 comments:

எல் கே said...

//இளைஞனிடம்(நான் தான்டே!)//
இந்த மேட்டர் மன்னிக்கு தெரியுமா ?

//ந்த ஜெர்மானிய பெண்ணும் தனது இந்திய பயணத்தை பற்றி ஜெர்மனிலோ, ஆங்கிலத்திலோ பதிவு எழுதலாம். ஒரு வேளை நீங்கள் அதை படிக்க நேர்ந்தால்//
இந்த நினைப்பு வேற இருக்க ?
//ஐஸ்லாந்தில் எரிமலை குமறியதால் தான் நான் பதிவெழுத தாமதமாகி விட்டது என சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. அடுத்த பதிவு கொஞ்சம் சீக்ரமாகவே வரும்./
rightu

Ananya Mahadevan said...

படித்தேன் ரசித்தேன்.
ஒரு கை வண்டிகளுக்கு காட்டிண்டு இருந்தீங்க ஓக்கே.. இன்னொரு கை அந்த லேடியை கெட்டியா பிடிச்சுண்டு இருந்ததே.. அதை எழுத விட்டுப்போயிடுத்தோ? ஹாஹா.. ரசிச்சு சிரிச்சேன்! ஜோர் பதிவு.
இந்த மாதிரி வெட்டிச்சாக்கு சொல்லாம அடுத்த பதிவு சீக்கிரம் போடுற வழியைப்பாருங்க!

வடையை எல்.கே கவ்விடுத்து.. இதே வேலையா அலையறது.க்கும்!

gils said...

vambi maama..faarin figureku road cross panni vitathuku ivlo buildupa!!! poori kattai pazhasaidichi nenakren..brand new model parcel panni vidren :)

sriram said...

நல்ல இடுகை அம்பி, பகிர்ந்தமைக்கு நன்றி
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Geetha Sambasivam said...

பி.கு: ஐஸ்லாந்தில் எரிமலை குமறியதால் தான் நான் பதிவெழுத தாமதமாகி விட்டது என சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. அடுத்த பதிவு கொஞ்சம் சீக்ரமாகவே வரும்.//

நம்பிட்டோம்ல?? பூரிக்கட்டைக்கு வேலை ஜாஸ்தினு இல்லை கேள்விப்பட்டேன்? :P

Geetha Sambasivam said...

எல்கே தாத்தாவுக்கும், அருமை சிஷ்யை, லேட்டஸ்ட் செல்லம் அநன்யா அக்காவுக்கும் ஒரு ரிப்ப்பீஈஈஈஈட்டேஏஏஏஏஏஏஏஏ போட்டுக்கறேன். நன்னி ஹை ரெண்டு பேருக்கும்!

திவாண்ணா said...

ஐயா அம்பி, பாரத நாட்டின் பாரம்பரியத்தை காப்பாத்திய உங்களுக்கு எப்படி நன்றி சொல்லறது? ஏதாவது ஒரு வெளிநாட்டினர் தங்கற ஓட்டல்லே வேலை போட்டு கொடுக்கலாமா?
:-))

மங்களூர் சிவா said...

:)

Porkodi (பொற்கொடி) said...

கில்ஸ் அண்ணாச்சியை எழுத்துக்கு எழுத்து வழிமொழிகிறேன். பாஸ்டன், ஹாஹாஹா.. எப்புடி இப்புடி? முடியல போங்க! :)))

Vijay said...

உங்களுக்கு மட்டும் எப்படி இப்படியெல்லாம் வந்து மாட்டுதோ?? வாழ்த்துக்கள் :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:))

uthira said...

vambi maama..faarin figureku road cross panni vitathuku ivlo buildupa!!! yar intha post ezhuthinanga... ambi oda kusumbu nakal eduvum kanalayeee??????

neenga epo post ezhuthaporinga??????????

Jayashree said...

""களைத்து போன மக்கள் பஃப் பக்கம் ஒதுங்க நினைக்கும்"" அ

puff or pub??

malar said...

’’’அநன்யா மஹாதேவன்’’’

’’’’படித்தேன் ரசித்தேன்.
ஒரு கை வண்டிகளுக்கு காட்டிண்டு இருந்தீங்க ஓக்கே.. இன்னொரு கை அந்த லேடியை கெட்டியா பிடிச்சுண்டு இருந்ததே.. அதை எழுத விட்டுப்போயிடுத்தோ? ஹாஹா.’’’’

இத்த சொல்ல தான் இந்த அங்கலய்பா?

ச.சங்கர் said...

///என் பெயரை கேட்டு தெரிந்து கொண்டு மிக சரியாக தப்ப்பாக உச்சரித்து விட்டு நன்றி சொல்லி கிளம்பினார்கள்///

அடப்பாவமே..அம்பி அப்படீன்னு மூணெழுத்தைக் கூடவா சரியா உச்சரிக்கத் தெரியலை???
அப்புறம் எப்படிய்யா நம்ம ஊரு ரோட்டை க்ராஸ் பண்ண முடியும் ?

ச.சங்கர் said...

நீங்க பதில் போட்டா எங்களுக்கு தெரியோணுமுல்ல..அதுக்காக இது..

வல்லிசிம்ஹன் said...

ஒரு முழுமையான இந்தியன் எங்க வலைப் பதிவர்னு ஒரு நோடீஸ் ஒட்டலாமா:)

mightymaverick said...

//முன்பின் தெரியாத ஒரு இளைஞனிடம்(நான் தான்டே!)//



மல்லு பசங்களுக்கு தெரிஞ்சுது, அந்த துரைசாரினிக்கு தெரியவில்லையே...



//உண்மை தானே! நம்மூர்ல சிக்னல்களை, பாதசாரிகளை, ஸீப்ரா கிராசிங்குங்களை என்னிக்கு மதிச்சு இருக்கோம்..? நித்ய கண்டம் பூர்ண ஆயுசு உள்ளவர்கள் மட்டுமே இங்கு சாலைகளை கடக்க முடிகிறது. யார் எவர் மீது மோதினாலும், முதலில் யார் சவுண்டு விடுகிறார்களோ அவர்கள் நியாயம் தான் ஜெயிக்கிறது.//


தலைவரோட பாட்சா படத்தில் ஒரு வசனம் வரும் - "அண்ணே, ஆட்டோ நம்ம மேல மோதினாலும், நாம ஆட்டோ மேல மோதினாலும் சேதாரம் நமக்கு தான்...". ஒழுங்கா கவனிச்சு நாம சாலைய கடக்காட்டா, நம்ம டயலாக் "மாப்பு, வச்சுட்டாயிங்கடா ஆப்பு." அதனால கவனமப்பு...


//டிராபிக் கான்ஸ்டபிள் வண்டியை நிப்பாட்ட கை காட்டுவது போலவே//



போட்டி (தூசி) தட்டுற வேலைக்கு வராட்டா, அந்த வேலைக்கு தான் போயிருப்பே! அப்படி தானே...ஹிஹிஹி


//ஐஸ்லாந்தில் எரிமலை குமறியதால் தான் நான் பதிவெழுத தாமதமாகி விட்டது//



ஆத்துலேயும் குமுறி குமுறி அடி வாங்கியதாக கேள்வி... தங்கமணி... பதில் சொல்லும்மா...

ambi said...

எல்கே, இந்த சின்ன விஷயத்தை எல்லாம் எதுக்கு மேலிடம் வரைக்கும் கொண்டு போகனும்..? :))

அனன்யா, இவ்ளோ பீடிகை போடும்போதே நெனச்சேன்.

அனன்யா: ஜெர்மன் பொண்ணு கைய பிடிச்சு இழுத்தியா..?

அம்பி: என்ன கைய பிடிச்சு இழுத்தியா..? :)))


யோவ் கில்ஸ், ஒரு உதவின்னு வந்துட்டா லோக்கலா? பாரினா?னு எல்லாம் பேதம் பாக்க கூடாது. :))

டெம்ப்ளேட் பின்னூட்டம் போட்ட நட்டாமைக்கு கடும் கண்டனங்கள். :))

கீதா மேடம், பின்னூட்டம் போட கரண்ட் எல்லாம் இருக்கா அங்க..? :))

திவாண்ணா, தங்கள் சித்தம் என் பாக்யம். :)

வருகைக்கு நன்றீ ம் சிவா, முத்தக்கா. :)

கேடி, நீ ஜவ்வா எழுதற பிளாக் மூனுக்கும் இப்படி தான் கமண்ட் போட்டுட்டு இருகாரு நம்ம பாஸ்டன். :p

விஜய், என்னது வாழ்த்துக்களா..? ஒரு முடிவோட தான் வந்து இருக்கீங்க போல.. :)

உத்ரா, பி.கு பாத்துமா இந்த சந்தேகம்..? அடுத்தது பெட்டரா ட்ரை பண்றேன். :))

ஜெ, ரெண்டுமே தான். :)

மலர், நல்லா கேளுங்க நியாயத்தை. :)

ச.சங்கர், முழு பெயர் இருக்கு ஒரு முழத்துக்கு. அதான் அந்த லேடி தடுமாறிட்டாங்க. :)

வல்லிமா, நோட்டீஸா..? சரி தான்.

அடுத்த வாரம் துபாய் பயணமா..?

இந்த முறையும் பொருட்காட்சிக்கு உங்களை கூட்டின்டு போவாங்களா..? :))

ambi said...

வி.கடவுள், வெவகாரமான கமண்ட் போடனும்னே சிலபேர் கெளம்பி வராங்க பா! :))

Anonymous said...

ambi sir,ambi sir,enakku oru unmai therinjaaganum.

andha germaniya azhagu penmanikku,unmaiyil muppathu vayathu dhhaana!!ungallukku addikkadi poi solra pazhakkam irukku dhaane!!!!
(abbadi madhyanam saapitta chappathi channa jerichidum)
ippa paarunga eyjafjallljokull mattumilla pakathillirukkum katlavam vedikkkum.
ippadikku,
appavi nivi.

ambi said...

@நிவி, இப்படி மடக்கி மடக்கி கேள்வி கேட்டா நான் என்ன செய்யறது..? நல்லா கோர்த்து விடறீங்க. ;))

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//என் பெயரை கேட்டு தெரிந்து கொண்டு மிக சரியாக தப்ப்பாக உச்சரித்து விட்டு நன்றி சொல்லி கிளம்பினார்கள்.//

உங்க பேரே அப்படின்னா என்னோட பேரு... எட்டு வருசமா நொந்து நூலாகி போய் இருக்கேன்... நல்லா உன் பேர கேக்கணும்னா ரெண்டாயிரம் டாலர் டிக்கெட் போட்டு இந்தியா போறயான்னு ரங்கமணி torture வேற... அதுக்கு பேரையே தப்பா கேட்டுகறேன்னு விட்டுட்டேன்....

ஆனாலும் அந்த //இளைஞனிடம்(நான் தான்டே!)// ரெம்ப ஓவர்ன்னு உங்களுக்கே தோணலையா பிரதர்... (LK கேட்டாப்ல மன்னிக்கி மேட்டர் தெரியுமோ....)

ambi said...

வாங்க புவனா, இந்த துரைங்க அனியாயத்துக்கு நம்ம பேரை தப்பாவே உச்சரிப்பாங்க. :))

தங்க்ஸுக்கு தெரியாமல் ஒரு அணுவும் அசைவதில்லை.

ராமலக்ஷ்மி said...

//டக்குனு அந்த பெண்மணி அப்படி சொன்னதும் எனக்கும் ரோசம் பொத்துக் கொண்டு வரவில்லை. உண்மை தானே! நம்மூர்ல சிக்னல்களை, பாதசாரிகளை, ஸீப்ரா கிராசிங்குங்களை என்னிக்கு மதிச்சு இருக்கோம்..?//

அதானே!

// நித்ய கண்டம் பூர்ண ஆயுசு உள்ளவர்கள் மட்டுமே இங்கு சாலைகளை கடக்க முடிகிறது. யார் எவர் மீது மோதினாலும், முதலில் யார் சவுண்டு விடுகிறார்களோ அவர்கள் நியாயம் தான் ஜெயிக்கிறது.//

ரொம்பச் சரி.

பதிவு:))!