Monday, August 10, 2009

ஸ்வைன் ப்ளூவை மும்பை ஏர்போட்டுல எப்படி தடுக்கறாங்க தெரியுமா?

போன வாரம் என் நண்பன் மும்பை சர்வதேச விமான நிலையத்துக்கு (சத்ரபதி சிவாஜி நிலையமாமே!) வந்திறங்கினான். வழக்கம் போல வரிசை என்ற பெயரில் நாலு நாலு பேரா ஒரு லைன்ல போனாங்களாம். பிளைடுலயே ஒரு கார்டு குடுத்து இருக்காங்க. அதுல ஒரு பத்து கேள்விகள் (டிக் செய்யனுமாம்).

அதாகபட்டது, கடந்த பத்து நாளுல நீ இந்த ஸ்வைன் ப்ளூ வந்த நாடுகளுக்கு பயணம் செஞ்சியா? (அறுபத்தி நாலு நாடுகள் லிஸ்டுல இருந்ததாம்)

2) அங்க போயி உனக்கு காய்ச்சல், உடம்பு வலி, தொண்டை வலி, வாந்தி ஏதும் வந்ததா? (யெஸ் அல்லது நோ டிக்குங்க)

3) அப்படி வந்திருந்தால் சிகிச்சை எடுத்தியா? (இதுவல்லவோ கேள்வி!)

4) இந்தியாவுல எங்க தங்க போற?

5) எந்த பிளைட்டுல வந்த?, நம்பர் எழுது.

அப்புறம் வழக்கம் போல பாஸ்போட் நம்பர் எழுது, எங்க பாஸ்போட் எடுத்த?னு சிலபல கேள்விகள்.

இதை எடுத்துகிட்டு நீண்ட கியூவுல போய், அங்கன வரிசையா சிலபல ஹெல்த் ஆபிசர்கள் சேர் போட்டு உக்காந்து இருந்தாங்களாம். (சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்) அவங்க கிட்ட இந்த கார்டை குடுத்தா, உங்களுக்கு காய்ச்சல் வந்துச்சா?னு ராயப்பேட்டை பொது மருத்துவமனை கம்பவுண்டர் மாதிரி கேக்கறாங்களாம். இல்லைனு சொன்னா, ஒரு சீல் குத்தி அனுப்பிடறாங்களாம்.

எனக்கு ஒரே ஒரு டவுட்டு தான்.

நோய் வந்தவரிடமே இப்படி காந்தீய வழியில் விசாரிச்சா அவரு ஆமா! ஆமா! பெரியய்யா!னு ஒத்துப்பார்னு என்ன நிச்சயம்?

எல்லா பயணிகளையும் ஒரு குறைந்த பட்ச உடல் வெப்ப அளவை காட்டும் ஸ்கேன் வழியா வரச் செஞ்சா தானே உறுதியா எதையும் நிர்ணயிக்க முடியும்?

பாதுகாப்பு முதல் ஹெல்த் வரை எல்லா விஷயங்களிலும் இப்படி மெத்தன போக்கான நடைமுறைகளை பின்பற்றினால் அப்புறம் ஏன் அப்பாவி பொது ஜனம் மண்டைய போட மாட்டாங்க?

இந்த நிகழ்வு ஜூலை மாதம் கடைசியில் நிகழ்ந்தது. இதுவரை கிடைத்த தகவல்படி ஸ்வைன் ப்ளூவுக்கு ஆறு பேர் இந்தியாவில் பலி. ஒரு வேளை இப்ப முழிச்சு இருக்கலாம். எனக்கு தெரியலை.

மத்த சர்வதேச விமான நிலையங்களிம் இப்படி தான் செக்கிங்க் நடக்குதா?னு வந்தவங்க யாராவது பின்னூட்டத்தில் சொல்லுங்க.

34 comments:

ஆயில்யன் said...

அண்ணாச்சி நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க :(

இதுதான் நிலைமை !


நான் கூட வீடியோ புடிப்பாங்க (பல நாடுகளில் நடக்கும் நடைமுறை) நினைச்சேன் பட் ஜஸ்ட் ஒரு பேப்பர்ல பேரு ஊரு போன் நம்பர் ( யோவ் உனக்குவைரஸ் இருக்குன்னு போன் பண்ணி கூப்பிடுவாங்களோன்னு கூட நினைச்சேன்!)

அவுங்களே ஒரு உடல் வெப்பநிலை பேப்பர்ல கீரின் இங்க்ல கிறுக்கி ஸ்ட்ம்ப் குத்தி வைச்சிகிடறாங்க - இதுக்கு ஒன்றரை மணிநேரம் க்யூவுல வேற நின்னோம் :((

மதிபாலா said...

அதுவும் கூட கோயமுத்தூரு ஏர்போர்ட்ல இல்லையாம்...ம்ஹூம்..

ஆனாலும் குறைந்த பட்சம் வெப்ப அளவைக் காட்டும் கருவிகளையாவது நிறுவலாம்...

தொலைநோக்கு இல்லை வேறென்ன சொல்ல

ஆயில்யன் said...

நான் சொன்னடு சென்னை விமானநிலையத்தில் நிகழ்ந்த விசயங்கள்!

//(சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்)//

:(((((((((((

இல்ல பாஸ் !

G3 said...

@Aayils,

////(சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்)//

:(((((((((((

இல்ல பாஸ் !//

Boss.. idhukku aasapattu dhaan modha dhaba flighta miss pannittu 2 naal kazhichu marubadi poneengala boss???

துபாய் ராஜா said...

திருவனந்தபுரம் ஏர்போர்ட்ல கார்டை வாங்கிட்டு அனுப்பிச்சுட்டாங்க. டாக்டர்கள் யாரு இல்லை.

சென்ஷி said...

:-(

துபாய்ல ஸ்வைன் ப்ளூ தாக்கப்பட்ட நாடுகள்லேர்ந்து வர்ற பயணிகளை தீவிர கண்காணிப்பு சிகிச்சைக்குப் பிறகுதான் துபாய்ல விடுறாங்க.

எங்க ஓனரோட அண்ணன் லண்டன்லேந்து இங்க வர்றப்ப அவருக்கான மருத்துவ அத்தாட்சியை முன்கூட்டியே எடுத்துக்கிட்டு வரணுங்கறத விதியா கொடுத்திருந்தாங்க..

நம்ம ஊரு நல்ல ஊரு இப்ப ரொம்ப கெட்டுப்போச்சுண்ணேன்னு பாடுறதும் தப்பாகிடும்.

(உபரித்தகவல்: துபாய் ஏர்போர்ட்டிலும் ஆபிசரணிகள் உண்டு! :-) )

சென்ஷி said...

//Boss.. idhukku aasapattu dhaan modha dhaba flighta miss pannittu 2 naal kazhichu marubadi poneengala boss???//

ஆயிலு அண்ணனை பத்தி இம்புட்டு தெரிஞ்சு வச்சிருக்குறது நொம்ப சந்தோசமா இருக்குது :)

கானா பிரபா said...

எல்லா பயணிகளையும் ஒரு குறைந்த பட்ச உடல் வெப்ப அளவை காட்டும் ஸ்கேன் வழியா வரச் செஞ்சா தானே உறுதியா எதையும் நிர்ணயிக்க முடியும்?//

இந்த முறைமை சிங்கை விமான நிலைத்தில் இருக்கிறது. கூடவே ஒவ்வொரு பயணிகளை இறக்கும் உள்ளக ரயில்களிலும் பூச்சிக்கொல்லி மருந்தடிப்பது வழக்கம். எதிலும் அந்நியன் அம்பி மாதிரி சிங்கப்பூரை உதாரணம் காட்ட வேண்டியிருக்கு பாருங்களேன்

கானா பிரபா said...

//Boss.. idhukku aasapattu dhaan modha dhaba flighta miss pannittu 2 naal kazhichu marubadi poneengala boss???//

அடப்பாவி மக்கா இதெல்லாம் நடந்திருக்கா

ஆதித்தன் said...

அண்ணா! கொழும்பு விமான நிலையத்திலயும் இதே கூத்துத் தான்.

dubukudisciple said...

matha vimana nilayangalil idu kooda illa... enga parents vanthagale US lernthu appa kidaitha thagaval

Arun said...

ஒரே ஒரு Add-தமிழ் பட்டன் போதும் , உங்கள் பதிவுகள் அல்லது இணையதள பக்கத்தினை அனைத்து முதன்மை தமிழ் திரட்டிகளிலும் மிக எளிதில் வெளியிடலாம்.

உங்கள் பதிவுகள் அதிக வாசகர்களை சென்றடைய இப்போதே
Add-தமிழ் விட்ஜெட் இணையுங்கள்.
விட்ஜெட் தரவிறக்கம் செய்ய www.findindia.net

tharman said...

sir, its india the another world.

My days(Gops) said...

14 la aaajar..

idhu verai ah? aiyo :(

ambi said...

அப்படியா ஆயிலு..? அடப் பாவமே!

ஜி3 அக்கா உன் மேலே ஒரு பிராது குடுத்து இருக்காங்க பாரு. :p

(சைடு கேப்புல என்ன அண்ணாச்சினு கூப்ட்டு உன் வயசை குறைச்சுக்க வேணாம் தம்பி.) :))

மதிபாலா, கோவை சர்வதேச விமான நிலையமா? உள்ளூர்ல ஸ்வைன் வராதுன்னு நெனச்சு இருப்பாங்க நம்ம மக்கள்.

Anonymous said...

in bangalore airport too!

வல்லிசிம்ஹன் said...

நம்ம ஊர்ரில, பேப்பர்ல டிக்ளரேஷன் மதிரி வாங்கிட்டு வெளில விட்டுடறதா, முந்தா நேத்திக்குக் கூடப் பார்த்தேன்.

அப்புறம அய்யா அம்மானு சொல்லி என்ன பிரயோஜனம்.


@ஆயில்யன் ஊருக்கு வந்திருக்காரா. ம்ம்ம்ம்ம் அம்பி பதிவுக்கு வந்தா நிறைய விஷயம் தெரிகிறதே:))

sri said...

First time here, last week langkawi poi erundhen angeyum epdi dhaan oru card kuduthaanga, comedya dhaan erundhuchu, Valraa (valandhuttey erukkira) naadugalla epdi dhaan pola..

came here through gils blog, Nalla ezudhareenga

sri said...

சில பிகர்களும் ஆபிசர்களா இருந்தாங்க என்பது உபரி தகவல்

Side gapla kada vetreengaley haha nalla erukku endha dhagal , adhula paarunga yaaradavadhu H1N1 pathi ungay postla miss panni erundhaalum edhai miss panna mattaanga

ambi said...

ஆயிலு, நான் சொல்லி இருக்கறது மும்பை ஏர்போட்டுல. :p

ஜி3 அக்கா, ஆனாலும் ஆயிலை இப்படி மடக்கி இருக்க வேணாம். :))

துபாய் ராஜா, திருவந்தபுரத்திலேயும் டாக்டர்கள் இல்லையா? உங்க கவலை எனக்கு புரியுது பாஸ். :))

சென்ஷி, ஆமா, அப்படியே இருந்துட்டாலும். கொஞ்சம் முழிச்சு பாத்தா கூட கண்ண நோண்டிடுவாங்க. :p

முதல் வருகைக்கு மிக்க நன்றி கானா அண்ணா. இதுக்கு மேலயும் ந்டந்து இருக்கும், ஆயிலை நல்லா விசாரிங்க. :p

ஆதித்தன், அடப் பாவமே! கொழும்புலயும் இப்படி தானா?

டுபுக்கு டிசைப்பிள், ரைட்டு விடுங்க. நான் இதுக்கு மேலே ஒன்னும் சொல்றத்துக்கு இல்லை. :))

தகவலுக்கு நன்றி ராம்.

முதல் வருகைக்கு நன்றி தர்மன்.

வாப்பா கோப்ஸ். ஜஸ்ட் மிஸ்ஸு போல. :))

வாங்க வல்லிமா, இப்ப இந்தியாவுல நீங்க சொன்ன மாதிரி தான் கத்திக்கிட்டு இருக்காங்க.

ஆயிலு பொண்ணு பாக்க வந்துட்டு போனாராம். :))

முதல் வருகைகு நன்றி ஸ்ரீவத்ஸ். மலேசியாவிலும் இதே கதை தானா? சரி தான். :)

Anonymous said...

idhai ezhudhara nerathila motham 20 peru gaali pannidichu.mumbai 3 naalikku izhuthu moodittanga.inga thalai nagarathula oru maadhiri peedhiyila dhaan ellam irukkannga.ithanai nigazhnndhum airport screening sariyillai enbathu general complaint particularly from the epicentre.thermal scanners irundhum prayojana millai.airport screening is a vital part of preventing the disease to a certain level.saadharanama (thangamani illa rengamani)kodumai thaangama kannu kallangi irundha kooda!!!! ayyayyo colda,feveraanu bayamuruthal....enge poi mudiyumo....
nivi.

Anonymous said...

Thats what exactly happened to me when I landed at Chennai airport may 2009. Added to that I had cough, cold, soar throat and fever. (I did check with my local doctor before travel in america for flu and result was negative). I gave "No" for all the questions in the paper, but my body temperature was 101'f. Officer didnot bother to check me even when I coughed in front of her. I happily came out of the airport went straight to my family doctor and too fever medications. Fever was reduced in 2 days. My family doctor too confirmed that its normal viral fever. However, imagine if I had real Swine flu and I escaped out of airport?

ஷைலஜா said...

அம்பி! சமீபமா அமெரிக்கா வந்துருக்கேன் இங்க ஒண்ணூம் நடக்கல அப்படி...அதிகமா அந்த நோயும் இல்லை எங்க வட்டாரத்துல!

ambi said...

வாங்க நிவி. உங்களுக்கு இந்த பதிலை எழுதும் நேரம் கவுண்ட் 23 ஆயிடுச்சு. ட்வென்டி டெவென்டி மேட்ச் ஸ்கோர் மாதிரி டோட்டல் ஏறுது. என்னத்த சொல்ல? தன் கையே தனக்குதவி. :(

அன்னனி, ஆஹா, கண் முன்னால பாத்துமா செக் பண்ணல..? என்ன கொடுமை இது.

(அடுத்த தடவை உங்க பேரையும் போடுங்க அக்கா/அண்ணா.)

ஷைலக்கா, இன்னும் அமெரிக்கவுல இருந்து நீங்க வரலையா? ஒரு லிஸ்ட் அனுப்பறேன், மறக்காம வாங்கிட்டு வாங்க, ஹிஹி. :))

Padmashri said...

i had been to coimbatore when the first swine flu @ kovai was found out. and came back by train. then itself i raised the question of screening in Railway station! and i am sure it is still teh same. road and railways vazhiya indha virus varadha enna???
chumma flu vandha kooda rombo bayama irukku - thanks to NDTV and other news channel. These people keep adding fuel to the fire in order to increase their TRP rating. hell!

ambi said...

//chumma flu vandha kooda rombo bayama irukku//

@padmashri, 100% true. Crowded Busla summa oru thummal vitten, 4 seat kaali aayiduchu. Me sat down and travelled happily. :))

Porkodi said...

echoose me? naan inga comment potene.. enga pochu?! enaku ipo india trip cancel agidumo nu bayama irukke!!! :-(

ambi said...

@porkodi, comment inga post panni irunthaa inga thaan irukkum. nalla thedi paarumaa. :))

SKM said...

Good thoughts.namma oorla we have to take care of ourselves.That is it. fork spoon vandha piragu yellorum kai kaluvuvadhu marandhuttanga. Wash your hands very often.Be away from sick person atleast 1 meter distance.take enough fluids (it is better to avoid chill water ,namma oorla..instead have warm water.Neenga vera "thanni" dhan adipom nu sonna ,adhukku nan porupalla.)basic sugadharam is a must Nu sollama solludhu indha flu.

OK,OK, niruthikiren. how are your Thangamani and junior? Romba nalachunu oru hi solla vandhen.Take care.

Marutham said...

Kumbudren saami! :)
Long timeeee

Epdi irukeengo?! Ammani epadi irukango?!

Swine flu swine flu'nu solli summa fever vandha kooda nadunga vechutanga... :(

Dinesh C said...

Namma oorula malaria typhoid aala saagiravanga jaasthi!!! enna ketta naangalum matha naadunga maathiri apdinu scene poda ithellam panna thevai illama panatha selavu pannamma, athai kanda idathula thupiravanga mela nadavadikai edukkavum, sugadharam improve pannavum selavu pannalam! nallaathai sonna yevan ketkiran :)

ambi said...

வாங்க எஸ்கேஎம் அக்கா, இடைப்பட்ட கேப்புல நீங்க டாக்டருக்கு படிச்சு பெரியாளு ஆயிட்டீங்க போல. (சரி சும்மா கலாய்ச்சேன்). :))
இங்கு யாவரும் நலம். அங்கும் அதே என நம்புகிறேன்.

எலேய் மருதம், செளக்யமா? வேலைல ஜாயின் பண்ணி பெரிய்ய ஆபிசர் ஆயிட்டீங்களா? :))
ரெம்ப சந்தோஷம் இங்க வந்ததுக்கு.

வாங்க தினேஷ், இப்ப தான் இன்னும் அதிகமா துப்பறாங்க நம்ம மக்கள். என்னத்த சொல்ல? :((

ஆயில்யன் said...

//ஆயிலு பொண்ணு பாக்க வந்துட்டு போனாராம். :))///

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

இல்ல பாஸ் உண்மையில்ல இதுல துளி கூட !

ambi said...

//இல்ல பாஸ் உண்மையில்ல இதுல துளி கூட !
//

@ஆயிலு,

"ஆயிலு பொண்ணை நிச்சயம் பண்ண வந்துட்டு போனாராம்"...

இது ஒகேவா? :)))