Thursday, August 06, 2009

சல்சா

தங்கமணியும், ஜுனியரும் நன்றாக அயர்ந்து உறங்கும் ஒரு ஞாயிறு மதிய வேளையில், நான் மட்டும் டிவியை நோண்டிக் கொண்டிருக்கும் போது ஒரு சுவாரசியமான நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது. அப்புறம் என்ன ஏதுன்னு கூகிளிட்டு பாத்ததில் அதுக்கு பேரு சல்சா என தெரிய வந்தது. ஸ்பானிஷ் மற்றும் கரீபியனின் கலவையாக உருவாகி இருக்கும் இந்த சல்சா நடனம், பார்ப்பவரை சுண்டி இழுக்கும் திறன் பெற்றது.

பொதுவாக மற்ற நடனங்கள் ஒரு நிமிடத்துக்கு 80 முதல் 120 பீட்டுகள் வரை ஆடப் பெறும். சல்சா 140 பீட்டுகள் வரை போகுமாம். இந்த நடனத்துக்கு சரியான பாடல் அமைவது மிக முக்யம். டூயட் சாங்கிலும் சட்டை பொத்தானை திருகியபடியே, நாலு அடி தள்ளி மரத்துக்கு பின்னாடி நின்னு, நாயகியை பார்த்து பாடும் முரளி சாங்கோ, இல்லாட்டி லல்லல் லா லாலே லல்லலா! என நாயகன், நாயகி, பேக்ரவுண்ட் சிங்கர்ஸ், எஸ்.ஜே.ராஜ்குமார், பின் சந்தேகத்துக்கு டைரக்டர்(விக்ரமன்) குரலில் வரும் பாடல்கள் எல்லாம் சல்சாவுக்கு ஒத்து வரவே வராது. க்யுபா மற்றும் கரீபியன் பாடல்கள் செம காம்பினேஷன். பாடலை கேட்டாலே உற்சாகம் பிறந்து, பக்கத்து சீட்டில் இருப்பவர் கையை பிடித்து கொண்டு ஆடனும் போல இருக்கும். (ஆனா நான் அப்படியெல்லாம் ஒன்னும் இதுவரை ஆடலை).

சரியான பார்ட்னர் அமைவது சல்சாவுக்கு மிக முக்யம்.(இப்ப தான் பாயிண்டுக்கு வர்ரான்யா). தனித் தவில் வைத்து தனியாவர்த்தனம் எல்லாம் இங்க வாசிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு ஆண், ஒரு பெண் என ஜோடியாகத் தான் ஆட முடியும் (ஆஹா! இதுவல்லவோ நடனம்). ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை கொள்வது மிக முக்யம். காத்தில் ஆடும் மயிலிறகு போல சுத்தி மிதந்து, சுயன்று, வட்டமடித்து, தரையில் கிங்க் பிஷர் விமானம் போல தரையிறங்கும் போது ஆண் பார்ட்னர் அலேக்காக பிடிக்க தெரியனும். சாம்பார் வெச்சு பத்து, சட்னி வெச்சு அஞ்சு, மிளகாய் பொடி வெச்சு நாலு என ப்ரேக்பாஸ்ட் என்ற பெயரில் இட்லிகளை அமுக்கி விட்டு வரும் ஆள் சல்சாவுக்கு வந்தால் ஆண் பார்ட்னர் சட்னியாகி விடுவார்.

அடுத்து சல்சாவுக்கு முக்யமானது உடை. உடனே ஜெயமாலினி, ஜோதி லட்சுமி, யானா குப்தா ரேஞ்சுக்கு காஸ்ட்யூம் இருக்கும் என நீங்கள் கற்பனை செய்து கொண்டால் நான் பொறுப்பில்லை. கால்களை தடுக்காமல், உடலை இறுக்கிப் பிடிக்காதவாறு பைஜாமா வகைகள், முட்டி வரை இருக்கும் நீண்ட பேண்ட் எல்லாம் உசிதமாக இருக்கும். அதுக்காக அலிபாபா பேண்ட் எல்லாம் செல்லாது செல்லாது. நன்றாக பயிற்சி பெற்றவர்கள் நீண்ட கவுன் வகைகளை தேர்வு செய்வார்கள். காற்றில் மிதந்து வருவது போல நடனம் சிறப்பாக அமையும்.

உடை, பாட்டு, பார்ட்னர் இவை எல்லாவற்றையும் விட மிக மிக முக்யமானது ஆடுபவரின் மன நிலை. மனதில் உள்ள மகிழ்ச்சி அப்படியே முகம் வழியா வழிந்து, ஆடுபவரின் நடன அசைவிலும் வெளிப்பட்டால் தான் சல்சா சிறப்பாக அமையும். இது பரதம், குச்சுபுடி, கதகளி(ஹிஹி) என எல்லா வகை நடனங்களுக்கும் பொருந்தும் என்பது அடியேன் கருத்து.

சல்சாவில் உள்ள அசெளகரியம் என்னன்னு பாத்தா "நான் சல்சாவுக்கு போறேன்"ன்னு யாரிடமும் நாம் தைரியமாக சத்தம் போட்டு சொல்ல முடியாது. என்னப்பா! நான் சல்சா பிராக்டிஸுக்கு போறேன்னு அந்த பொண்ணு தைரியமா என்கிட்ட சொல்லிட்டு போகுது. இதுகெல்லாம் கூடவா பிராக்டீஸ்?னு மேனேஜர் என்னிடம் ஆதங்கப்பட, அவருக்கு கூகிளிட்டு காட்டி சல்சானா நடனம்னு புரிய வைத்தேன்.

ஒரு மண்டலம் சல்சா ஆடி வந்தால் சகல நாடிகளும் சுத்தமாகி, கபாலம் திறந்து குண்டலினி எழுந்து, பூரண மோட்சம் கிட்டும்! என சல்சானந்தா புஜண்ட புராணத்தில் சொல்லி இருக்கார். எனவே நான் சல்சா கத்துக்க போறேன்! என தங்கமணியிடம் சொன்னவுடன், நாட்டிய பேரொளி பத்மினி அம்மா மாதிரி முகத்தில் நவரசத்தையும் காட்டி, ஒரு நொடி அதிர்ந்து விட்டார் தங்கமணி. பின் விலாவரியாக விளக்கியபின் சல்சாவில் உள்ள வில்லங்கத்தை மட்டும் சரியாக மோப்பம் பிடித்து, யூ டியூப்ல வீடியோ பாத்து வீட்லயே சல்சா கத்துகுங்க! என பெரிய மனசு பண்ணி அனுமதி வழங்கி, காலை அஞ்சரை மணிக்கு எழுப்பி விட்டு, "அப்பா ஒழுங்கா பிராக்டீஸ் பண்றாரா?"ன்னு நீ பாத்துக்கோ!னு ஜுனியரையும் ஏவி விட்டாச்சு. நல்லா இருங்கடே! :)

டிஸ்கி: சல்சா என்ற தலைப்பை ஜல்சா என்றோ ஜலஜா என்றோ மிகச் சரியாக தவறாகப் படித்து தலைதெறிக்க வந்த மக்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க சல்சா என்ற நடனத்தை பற்றிய பதிவு மட்டுமே! :)

34 comments:

My days(Gops) said...

1ST

My days(Gops) said...

adra adra.........gops nee kalakitta.. ( tea coffee illai :) )

My days(Gops) said...

//ஒரு ஞாயிறு மதிய வேளையில், நான் மட்டும் டிவியை நோண்டிக் கொண்டிருக்கும் போது ஒரு சுவாரசியமான நடன நிகழ்ச்சியை காண நேர்ந்தது.//

ippa ellaam neenga sunday afternoon thoonguradhey ilai aahmey?

My days(Gops) said...

// இந்த சல்சா நடனம், பார்ப்பவரை சுண்டி இழுக்கும் திறன் பெற்றது//

paarkaadhavaraium kaaathavaraiaan maadhiri சுண்டி இழுக்கும் திறன் பெற்றது.

My days(Gops) said...

//இந்த நடனத்துக்கு சரியான பாடல் அமைவது மிக முக்யம்//

adhey maadhiri ella stage laium aaadira mudiaadhu :) ...

stage remba shining aavum iruka koodadhu, cricket pitch maadhirium iruka koodadhu

My days(Gops) said...

//பக்கத்து சீட்டில் இருப்பவர் கையை பிடித்து கொண்டு ஆடனும் போல இருக்கும்//

adhu 60yrs paaati ah irundhaalumah? paaarthu brother, verum bangles mattum vandhuda pogudhu :)

My days(Gops) said...

//சரியான பார்ட்னர் அமைவது சல்சாவுக்கு மிக முக்யம்.(//

salsa'ku nu illai, saaalnavukum thaaan ... potato and brinjal :P

My days(Gops) said...

//ஒருவர் மீது ஒருவர் பரஸ்பர நம்பிக்கை கொள்வது மிக முக்யம்//

vaanguna cash ah olunga kodukaati kandipaa floor la podhaiyal undu :)

My days(Gops) said...

//மிக மிக முக்யமானது ஆடுபவரின் மன நிலை//

adada, vootuku poitu soru ponganumey nu yosichicha koooda apeeet thaan :)

My days(Gops) said...

brother apart from everything, salsa'ku koranchadhu more than 1 yrs practice poganum.. practice pogumbodhu stomach empty ah poganum... 4 vadai , 3 dosai nu pottu thaakitu pona , appuram first round'laiey "auto" nu sollida vendiadhu thaaan :P

My days(Gops) said...

//எனவே நான் சல்சா கத்துக்க போறேன்//

very nice brother, nalla irukum salsa .try panni paarunga.u will enjoy it .. aana jalsa pathi enakku theriaadhu :P

My days(Gops) said...

//இது முழுக்க முழுக்க சல்சா என்ற நடனத்தை பற்றிய பதிவு மட்டுமே! :)
//

oru sunday thoongama irundhadhuku salsa vaah very gud :).. adhutha sunday wht brother? :)

My days(Gops) said...

13 potaaachi thank god :).. after a long time :)

brother, naanum salsa student thaan :P ....

nalla irundhadhu post he he he he

all the best :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

கொஞ்சநாளா இங்க ஒரு பொண்ணு சல்சா கத்துகிறேன்னு சொல்லிட்டிருந்தா.. நீங்க போட்ட தலைப்பைப் பார்த்து நீங்களும் தான் கத்துக்கிறீங்களோன்னு நினைச்சிட்டேன்.. :) பாத்ததுக்கு இந்த பில்டப்பா..

குசும்பன் said...

ஷகிலாவோட சல்சா கத்துக்குங்க ச்சீ சல்சா டான்ஸ் கத்துக்குங்க!

Sridhar V said...

//யூ டியூப்ல வீடியோ பாத்து வீட்லயே சல்சா கத்துகுங்க! //

நீங்க கொடுத்த பில்ட்-அப்புக்கும் இந்த மேட்டருக்கும் சம்பந்தமில்லையேய்யா.

//ஜலஜா, ஜல்சா, சல்சா //

அப்ப தமிழ்லேந்துதான் இது அங்க எல்லாம் போயிருக்கா. சரிதான். :)

My days(Gops) said...

@muthulechmi:- //பாத்ததுக்கு இந்த பில்டப்பா..//

neenga innoru thaba indha post nalla padichitu vaanga plz :)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

அம்பி, தூள்!

G3 said...

attendance mattum pottutu ippodhaikku appeat aagikkaren :)))

ராமலக்ஷ்மி said...

ஜூனியருக்கு நல்ல வேலைதான்:)!

Dubukku said...

:)))
இப்போ சல்சா கத்துக்க ஆசையா இருக்குமே :)) இதான் எங்க பக்கம் வந்து ஓவரா சலம்ப கூடாது :))
யூ டுயுப் - உனக்கு அதான் சரி :))

Porkodi (பொற்கொடி) said...

ipo thaan padhivu pottinga adhukulla 21 agiducha??? enna koduma sir idhu!

Porkodi (பொற்கொடி) said...

hehehe haiyo haiyo.. ipo endha level la iruku unga salsa? thangs kitta sollunga: 4 naal edhuvum sapidama apram 4 naal verum thanni mattum kudichutu practise panna salsa la king agidalamam.. ;)

மெனக்கெட்டு said...

//
சாம்பார் வெச்சு பத்து,
சட்னி வெச்சு அஞ்சு,
மிளகாய் பொடி வெச்சு நாலு

என ப்ரேக்பாஸ்ட் என்ற பெயரில் இட்லிகளை அமுக்கி விட்டு வரும் ஆள் சல்சாவுக்கு வந்தால் ஆண் பார்ட்னர் சட்னியாகி விடுவார்.
//
மொத்தம் 19 இட்லியா?

கேசரி மட்டும் சாப்பிடும் ஆள் கிடைக்குமா என்று பார்க்க வேண்டியது தான்.

rapp said...

//
சரியான பார்ட்னர் அமைவது சல்சாவுக்கு மிக முக்யம்.(இப்ப தான் பாயிண்டுக்கு வர்ரான்யா). தனித் தவில் வைத்து தனியாவர்த்தனம் எல்லாம் இங்க வாசிக்க முடியாது. கண்டிப்பாக ஒரு ஆண், ஒரு பெண் என ஜோடியாகத் தான் ஆட முடியும்//

அண்ணே, நைசா இப்டில்லாம் வேலையக் காட்டாதீங்க. அப்போ இங்கெல்லாம் சிங்கில்ஸ்னு சொல்லித்தர்றது என்னவாம்?:):):) இங்க ஒரு தெய்வம் தலைதெறிக்க ஆடும்போது, இப்டி சொல்லிட்டீங்களே :):):)
அண்ணி பாத்துக்கோங்க:):):)

Blogeswari said...

Reminded of Guru-Sishyan's 'Jalaja kooda Jalsa '

ambi said...

கோப்ஸ், வராது வந்த மாமணியே, இப்படி 13 கமண்டு அள்ளி தேளிச்சு உன் பாசத்தை காட்டிட்டியே பா! நீயும் ஒரு சல்சா ஆட்டக்காரனா? சூப்பர். இன்னமும் பிராக்டீஸ் எல்லாம் பண்றியா? :))

முத்தக்கா, பாத்து பாத்து கத்துக்கறோம் நாங்க. :)

குசும்பன், அனுபவம் பேசுது? :p

ஸ்ரீதர், அந்த டிஸ்கியே உங்களுக்காக தான். :p

நன்றி சுந்தர், ஜி3 அக்கா. :)

வாங்க ரா.ல, அவனும் ஆடறான் இப்ப. :)

ambi said...

டுபுக்கு, என்ன ஒரு சந்தோஷம் உங்களுக்கு? லன்டன்ல சல்சா நடனம் எல்லாம் உண்டா? :))

பொற்கேடி, மொத்ததுல சல்சா கத்துக்க ஆரம்பிச்சா வீட்ல சமைக்க வேணாம்னு சொல்லு. :))

நீங்க தான் கரக்ட்டா பாயிண்டை புடுச்சீங்க மெனகெட்டு. :))

ராப், தெளிவா சொல்லுமா. நீ ஆடறியா இல்ல உங்க ரங்குவை ஆட்டுவிக்கறியா? :p

பிளாகேஸ்வரி, அதே தான் நானும் நெனச்சேன். :)

Buddha said...

very very funny :-)

Anonymous said...

ambi,

if tiruvalluvar is alive he might have praised you and given his thadi to you for the great tamil slang.

valga thamilu!

வல்லிசிம்ஹன் said...

Super!
salsa appadinnaa saappaadunu ninaicchutten:)

Salsanu neenga sonnathum thangamani salsa Adiyiruppaangga.
:)))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))))000000000!!!

Kavinaya said...

//இதுகெல்லாம் கூடவா பிராக்டீஸ்?னு மேனேஜர் என்னிடம் ஆதங்கப்பட, அவருக்கு கூகிளிட்டு காட்டி சல்சானா நடனம்னு புரிய வைத்தேன்.//

விழுந்து விழுந்து சிரிச்சேன் :))) ஆனா, இவ்ளோ ஆராய்ச்சி செய்து மெனக்கெட்டும் ஒண்ணும் work out ஆகல போல... பாவம்தான் நீங்க!

மங்களூர் சிவா said...

/
நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க சல்சா என்ற நடனத்தை பற்றிய பதிவு மட்டுமே!
/

நல்லவேளை டிஸ்கில சொன்னீங்க
:))

mightymaverick said...

நீ எத்தனை ஜலஜவுக்கு பிராக்கெட் போட்டேன்னு தெரிஞ்ச தங்கமணி பத்ரகாளியா மாறி ஊர்த்துவ தாண்டவமே ஆடுவா...