Friday, November 06, 2009

பெண்களூரு

part - 1

தமிழ் நாட்டிலிருந்து இந்த பெண்களுருக்கு வந்தவர்கள் அனைவரும் ஒரு குறையாக சொல்லும் விஷயம் இங்கு சாம்பார் என்று சொல்லி அதில் சர்க்கரையை போட்டு ஒரு திரவத்தை தராங்க பா! என்பது தான். வெங்காய சாம்பார், வெண்டைக்காய் சாம்பார், முள்ளங்கி சாம்பார், முருங்கைகாய் சாம்பார்னு நம்மாட்கள் வெரைட்டியா அங்கு வெட்டி விட்டு இங்கு ரொம்பவே சிரமப்படுவார்கள்.

விடுமுறை நாளில் (பிள்ளையார் சதுர்த்தி அல்ல) மதிய சாப்பாடு ஒரு வெட்டு வெட்ட வேண்டும் என சபதம் எடுத்துக் கொண்டவர்கள் இந்த ஊரில் செல்ல வேண்டிய ஒரு இடம்: எம்டிஆர்(MTR) டிபன் ஹவுஸ். ஊர்வசி தியேட்டருக்கு நேர் எதிர்புறம் இருக்கிறது. (என்னது, ஊர்வசி தியேட்டர் எங்க இருக்கா?)

சனி, ஞாயிறுகளில் காலை லைட்டா ஒரு ஜுஸ் மட்டும் குடித்து விட்டு, மதியம் பனிரெண்டரை மணியளவில் இங்கு வந்தால் மீல்ஸ் கூப்பன் வாங்க பத்தாவது ஆளாக வரிசையில் நிற்ப்பீர்கள். முடிந்த வரை ரெண்டு அல்லது மூனு பேருக்கு மேல் உங்களுடன் சேர்த்து கொள்ள வேணாம். டேபிள் கிடைக்காது. அளவற்ற ஒரே சாப்பாடு தான். டிக்கட் விலை 120 ரூபாய்(ஒரு ஆளுக்கு). கொஞ்சம் காஸ்ட்லி தான் ஆனால் தாஜ், ஓபராய் என நமக்கு பஃபே காட்டும் மெனுவோடு ஒப்பிட்டால் இது ஒன்னுமில்லை.

முதலில் ஏதாவது ஒரு பழரசம் வெள்ளி டம்பளரில்(250 மில்லி பிடிக்கும்) தருவார்கள். (எங்களுக்கு திராட்சை ஜூஸ் வந்தது). பழக்க தோஷத்தில், ஒரே மடக்காக குடித்து விட்டால் சரியாக சாப்பிட முடியாது. எனவே லைட்ட்டா நாலு சிப் செய்யவும். நாம் சாப்பிட்டு முடிந்ததும், மறக்காமல் வெள்ளி டம்பளரை எடுத்து செல்ல தனியாக ஒரு ஆள் வருகிறார்.

அதன்பின், ஒரு பெரிய தட்டில்(இது வெள்ளி இல்லை) வரிசையாக பதார்த்தங்கள் வர ஆரம்பிக்கும். முதலில் சுடச்சுட பூரிகள் வரும். ரெண்டுக்கு மேல் வேணாம் என சொல்லி விடுங்கள். நல்ல பிசிபேளா பாத்தின் முக்ய லட்சணமே மிதமான காரத்தில், தகதகவென ஒரு ஜொலிப்போடு, முந்திரி பருப்பு மணக்க, இளம்சூடாக ஆனால் கையையோ நாக்கையோ பொத்து போகிற அளவுக்கு இல்லாமல் இருக்க வேண்டும். இவங்க இதுல எக்ஸ்பர்ட் போலிருக்கு. நீங்கள் நாலு வாய் சாப்பிடுமுன் பொன்னி அரிசியில் சாதம் வந்து விடும். சொல்ப வெய்ட் மாடி! என கூச்சமில்லாமல் சொல்லி விடுங்கள். நிஜமான சாம்பார் எல்லாம் விடுகிறார்கள். ரசமும் உண்டு.

அன்றைய ஸ்பெஷல் ஸ்வீட் என்னவோ அது வரும். எங்களுக்கு பாதாம் அல்வா கிடைத்தது. பால் பாயசமும் வரும்.

1) கட்டிடம் கட்டி சுமார் அறுபது ஆண்டுகளாவது இருக்கும்.
கை அலம்ப வைத்திருக்கும் குழாயை திறக்க காரில் பிரேக் போடுவது போல கீழே இருக்கும் பெடலை மிதிக்க வேண்டும்.

2) ஊழியர்கள் எல்லோரும் லைட் ரோஸ் நிறத்தில் சட்டையும், வெள்ளை வேட்டியும் அணிந்து இருக்கிறார்கள். சமைப்பவர் முதல் பறிமாறுபவர் வரை எல்லாம் நள பாகம் தான். நோ தமயந்திஸ்.

3) எல்லோருமே சுத்தமான கன்னடம் தான் பேசுகிறார்கள். மைசூர்காரகள் என பாத்தவுடன் சொல்லி விடலாம்.

4) யாரும் தானாக டிப்ஸ் கேட்பதில்லை. பெரும்பாலனவர்கள் குடுப்பதும் இல்லை. எனக்கு அன்னிக்குனு பாத்து மறந்து போச்சு. ஹிஹி.

5) மாடிக்கு போகும் வழியில் சுதந்திரத்துக்கு முன்னாடி எடுத்த நிழற்படங்களை மாட்டி வைத்திருக்கிறார்கள். சர்.சி.வி. ராமன், கோக்லே, நேரு என பலப்பல முக்ய தலைவர்கள் தம் தங்கமணி சகிதம் போண்டா சாப்பிட வந்திருக்கிறார்கள். அவங்க தங்கமணிகளும் சனிக்கிழமை சமைக்காதோர் சங்கத்தில் மெம்பர் போலிருக்கு.

உங்களுக்கு வாக்கப்பட்டு என்னத்த கண்டேன்? ஒரு ஹோட்டல் உண்டா? சினிமா உண்டா?னு நேரு தங்கமணியும் இடித்து இருப்பார்கள் போலும். நேரு ரொம்பவே பவ்யமாய் அமர்ந்து சாப்பிடுகிறார். வெளில தான் முன்கோபம் எல்லாம் காட்டுவார் போல. ஹும்! வீட்டுக்கு வீடு வாசப்படி! இல்ல, சும்மா ஒரு பழமொழி சொன்னேன் அவ்ளோ தான். :)

6) தங்கள் முறை வரும் வரை காத்திருக்க மர பெஞ்சு போட்டிருக்கிறார்கள். நாங்கள் உண்ட களைப்பால் கொஞ்ச நேரம் பெஞ்சில் அமர்ந்திருந்து விட்டு கிளம்பினோம். ஹோட்டல்கார்களுக்கு செம சிரிப்பு.

7) சரியான பார்கிங் வசதி இல்லை. செம பிசியான ரோடு, இடத்துக்கு எங்க போறது? ஹோட்டல் காரகளை குத்தம் சொல்ல்ல முடியாது.

பெண்களூர் வாசிகள் கண்டிப்பாக ஒரு முறையேனும் இங்கு வந்திருப்பார்கள். மற்றவர்கள் காலமும், சந்தர்ப்பமும் கிடைத்தால் வாருங்கள்.

44 comments:

மங்களூர் சிவா said...

சூப்பர். நெக்ஸ்ட் டைம் வரப்ப ஒரு கட்டு கட்டிட வேண்டியதுதான்.

Kathir said...

பதிவுக்கும் தலைப்புக்கும் சம்பந்தம் இல்லையேப்பா...

;))

//அவங்க தங்கமணிகளும் சனிக்கிழமை சமைக்காதோர் சங்கத்தில் மெம்பர் போலிருக்கு.//

;))

சந்திர கிருஷ்ணா said...

தலைப்பு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு!

sriram said...

"பெண்களூரு’ - இது ஜூப்பரு

’ஏதாவது ஒரு பழரசம் ’ - கொஞ்சம் பழசான (வருஷங்கள்) திராட்சை ஜூஸ் தருவாங்களா?

“சாப்பிட்டு முடிந்ததும், மறக்காமல் வெள்ளி டம்பளரை எடுத்து செல்ல தனியாக ஒரு ஆள் வருகிறார்.” - உங்களப் பத்தி அவங்களுக்கு எப்படி தெரிஞ்சுது?

“நோ தமயந்திஸ்” - இந்த மாதிர் எடத்துக்கெல்லாம் போக மாட்டீங்களே??

அப்புறம் சர்.சி.வி.ராமன் எப்போ தலைவர்கள் லிஸ்ட்ல சேந்தார்?

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

ஷைலஜா said...

MTR ஹோட்டல்ல 40வருஷமா ஒரே மாதிரியான பசுநெய் தான் உபயோகிக்கிறாங்க...தரம் மணம் குணம் ! இதை பேட்டி எடுத்து 4வருஷம் முன்னாடி கலைமகளில்போட்டேன்! வந்தது...அப்போ ஆனந்தமையான்னோ என்னவோ ஓனர் இருந்தார்..பேட்டி எடுத்த எனக்குசும்மாவே வெள்ளிடம்ளர்ல காபிகொடுத்தார் அம்பி..அப்போ உங்கள தெரியாது இல்லேன்னா அழைச்சிட்டு போய்ருப்பேன் ஆனாஉங்க நடைல இங்க நீங்க எழுதினது வழக்கம்ப்போல எம்டிஆர் ஜாமூனாய் சுவையாவே இருக்கு!

Anonymous said...

We are planning to settle in Bangalore.. sambar alvo mattama irukuma?

"அவங்க தங்கமணிகளும் சனிக்கிழமை சமைக்காதோர் சங்கத்தில் மெம்பர் போலிருக்கு"

saturdays oru change ku neenga cook panna try pannalame.. Yenga veetula G dhan saturdays cook pannuvar

Shri said...

konjam photo-geeto pottrukkalam!

sriram said...

அம்பி
மித்து சொல்றதை மட்டும் கேட்றாதீங்க...
நான் இப்படித்தான் வெளயாட்டா சமைக்க ஆரம்பிச்சு, எனக்கு சமையல் செய்யுறது பிடிச்சிருக்கு தெரியாம சொல்லிட்டேன், அன்னிலேருந்து வீட்ல Most of the days என் சமையல்தான், சனியன தூக்கி பனியன்ல போட்டுக்காதீங்க சொல்லிட்டேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

Anonymous said...

Sriram, unga wife indirecta unga samyal appreciate pannaranga! Credita yeduthukonga.. :)

Ambi, you can try this..

sriram said...

மித்து
இந்த மாதிரி உசுப்பேத்தி விட்டுதான் ஒடம்பு ரணகளமா இருக்கு...

அம்பி, நல்லா பாத்துக்கோங்க, மித்து தன் இனத்துக்கு நல்லது பண்றதுக்காக நம்மளை பலியிடராங்க, வஞ்சக வலையில விழுந்திராதீங்க...

Anonymous said...

Nalladhuku kaalame illa..

kalyana sundar said...

MTR க்கு எதிர்புறம் சற்று தள்ளி பார்க்கிங் வசதி உள்ளது. என்னதான் இருந்தாலும் ,வரிசையில் நின்று ,காத்து கிடந்தது சாப்பிடும் அளவுக்கு MTR சாப்பாடு அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.மற்ற இடங்களில் கிடைக்கும் மதிய சாப்பாட்டுக்கு இது சற்று மேல.அவ்வளவு தான். MG Road Brindavan சாப்பாடு இதை விட நன்றாக உள்ளது. என்னதான் இருந்தாலும் நம் ஊர் மாதிரி வருமா ? சம்பீபத்தில் மதுரை சென்று வந்த கன்னட தோழன் " நிம்ம ஊரல்லி ஊட்டா ரெம்ப செனாகிதே " என்று நம்மிடம் சொல்கிறான். கூடவே 40 ரூபாயில் இவ்வளவு நல்ல சாப்பாடு எப்படி கிடைக்கிறது என்று வியப்பு வேறு !!!

S.Kalyanasundar said...

MTR க்கு எதிர்புறம் சற்று தள்ளி பார்க்கிங் வசதி உள்ளது. என்னதான் இருந்தாலும் ,வரிசையில் நின்று ,காத்து கிடந்தது சாப்பிடும் அளவுக்கு MTR சாப்பாடு அப்படி ஒன்றும் பிரமாதம் இல்லை.மற்ற இடங்களில் கிடைக்கும் மதிய சாப்பாட்டுக்கு இது சற்று மேல.அவ்வளவு தான். MG Road Brindavan சாப்பாடு இதை விட நன்றாக உள்ளது. என்னதான் இருந்தாலும் நம் ஊர் மாதிரி வருமா ? சம்பீபத்தில் மதுரை சென்று வந்த கன்னட தோழன் " நிம்ம ஊரல்லி ஊட்டா ரெம்ப செனாகிதே " என்று நம்மிடம் சொல்கிறான். கூடவே 40 ரூபாயில் இவ்வளவு நல்ல சாப்பாடு எப்படி கிடைக்கிறது என்று வியப்பு வேறு !!!

குப்பன்.யாஹூ said...

சனிக் கிழமை சமைக்கதோர் சங்கம். நன்றி

வல்லிசிம்ஹன் said...

முன்ன எல்லாம் காலைய்ல் டிபனும் கிடைக்குமாம். இப்பவும் இருக்கிறதோ?
எம்டிஆர் போய் நாளாச்சு.
மணிபால் செண்டர் கதம்பம் ரெஸ்டாரண்ட் இருக்கா.
அங்கயும் கேசரி ரொம்பவெ நன்றாக இருக்கும்:)

திவாண்ணா said...

:-))))))))
ரொம்ப காலம் முன்னே அங்கே போய் காப்பி டிபன் சாப்டோம். நல்லாவே இருந்தது. இன்னும் அப்படியே செந்தரமா வெச்சு இருக்காங்களான்னு தெரியலை.

//சனியன தூக்கி பனியன்ல போட்டுக்காதீங்க சொல்லிட்டேன்//
:-))))
i loved that comment sriram!

Vijay said...

இப்போதிருக்கும் வீட்டிலிருந்து எம்.டி.ஆர் வரை போவதே பிரம்மப் பிரயத்தனமாக இருப்பதால் போவதில்லை. ஆனால் என்றுமே என் சாய்ஸ் எம்.ஜி ரோட்டில் இருக்கும் பிருந்தாவன் ஹோட்டல் தான். 45 ரூபாய்க்கு Nose dashing eating அதாவது மூக்கு முட்ட சாப்பிடலாம். ஆனால் இப்போது எம்.ஜி. ரோடுக்கு போகணும்னாலும் கதி கலங்குது.

Anonymous said...

எம்டிஆருக்குச் சற்றுத் தள்ளி ரோட்டின் இருபுறமும் பார்க்கிங் வசதி இருக்கு :)

அப்புறம் இன்னொரு தகவல், இதே எம்டிஆர் க்ரூப் ‘மய்யாஸ்’ என்ற பெயரில் ஜெயநகரில் ஓர் உணவகம் திறந்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட அதே விலை, அதேமாதிரியான ஐட்டங்கள், சுவை, ஆனால் பழமைமட்டும் மிஸ்ஸிங், கண்ணாடியும் ஜொலிப்புமா இருக்கும்!

- என். சொக்கன்,
பெங்களூரு.

CS. Mohan Kumar said...

சாப்பாட்டை பற்றி நீங்கள் விளக்கும் போது யாருக்கும் எச்சில் ஊறிடும்..

"சனிக்கிழமை சமைக்காதோர் சங்கம்"- Nice. இங்கும் அதே கதை தான். எல்லோரும் ஒரே மாதிரி வாழ்க்கை தான் வாழறோம்னு தலைவர் சுஜாதா சொன்னது .எவ்வளவு உண்மை!!

மோகன் குமார்
http://veeduthirumbal.blogspot.com/

Jayashree said...

ஒரு தடவை கூட சமீபத்தில் MTR போய் சாப்பிடமுடியல்லை - கூட்டம் க்யூ!!பார்கிங்க் வேற கஷ்டம். இந்த தடவை கட்டாயம் போகணும்னு ப்ளான்:))

காமத் ( ஹோசூர் பங்களூர் ரோட் சமீபத்தில் இருக்கற ) ல மாடில LUCH TIME ஜவார் பாக்ரி TRY பண்ணுங்கோ.SILK மாதிரி சுட சுட ஜவார் ரோட்டி யும் condiments ம் அட்டகாசம்!! NORTH KANNADIGA CUISINE.100 ரூபாய் தான் . ROTIES , 2 X SPICY VEGES, EXCELLENT SALAD, RAITHA, 2 TYPES OF CONDIMENTS, PAPPAD, CRACKERS DAHI, RICE 2 TYPES AND A SWEET DISH!! எங்களுக்கு இதுவரை BANGALORE ல சாப்பிட்டதுலேயே ரொம்ப பிடிச்சது.

HYDERABAD போனா "CHUTNEYS" LA STEAMED DOSA (SIRANJEEVIE'S SPECIAL!!)TRY பண்ணூங்கோ. BOY !! THAT IS DIVINE TOO.. YUMMY !!

ம்...."பெண்".."கள்"..ஊர் ஆ ?.. (அங்கால போய் அண்ணாச்சிக்கு இந்த கோட்டி பிடிச்சிட்டு போல!! அண்ணிக்கு எலுமிசம்பளம் அனுப்புதேன். உச்சில நல்ல தேச்சி விட சொல்லிதீயளா?) :))))

ambi said...

மிஸ் பண்ணாதீங்க சிவா, உங்க தங்கமணியையும் கூட்டிட்டு போங்க. :p

கதிர், இப்படி கோர்த்து விட்டு கோர்த்து விட்டு தான்.... :))

மகேஷ், நன்றிங்க.

ஸ்ரீராம், உம்ம கேள்விகள் எல்லாம் வில்லங்கமாவே இருக்கு. சர்.சி.வி ராமன் நோபல் பரிசு வாங்கினதுக்கு அப்புறமா ரெண்டு வருஷம் அவங்க ஏரியா வார்டு மெம்பரா இருந்தாரு. (சரி விடுங்க... ) :))

ஷைலக்கா, பேட்டியே எடுத்தாச்சா? ஓசில காப்பி வேறயா? தெரிஞ்சு இருந்தா நானும் பேட்டி எடுத்து ப்ரீ மீல்ஸ் சாப்பிட்டு இருப்பேனே! :))

ambi said...

மிட்டு, நீங்க கேக்கறத பாத்தா வீட்ல சாம்பாரே வைச்சது இல்ல போல. :))

சனிகிழமை மட்டும் தான் உங்க ஜி சமைக்கறார். நாங்க எல்லா நாளுமே காய்கறி கட்டிங்க், தேங்காய் துருவிங்க் என Offshore-சப்போர்ட் என்ற பெயரில் ஸ்ரீராம் சொன்னதை பனியனுகுள்ள போட்டு ரெம்ப நாளாச்சு. நல்லாவே வெந்த புண்ல வெங்காயத்தை தடவறாங்க பா! :))

ஸ்ரீ, என் சாப்பாட்டு தட்டை போட்டோ எடுத்தேன், கண்ணு பட்டுடும்னு இங்க போடலை. :))

கல்யாண சுந்தர், ஒவ்வொருத்தருக்கும் ஒரு டேஸ்ட் பிடிச்சு இருக்கும். ஆந்திரா காரனுக்கு கோங்க்ரான்னா உயிர். நமக்கு...? :))

அதே மாதிரி தான். பிருந்தாவனும் நல்லா இருக்கும்னு சொன்னாங்க. இன்னும் போகலை. மதுரையையும், பெங்களூரையும் கம்பேர் பண்ணவே முடியாது. நைட்டு 12 மணிக்கு நாலு சட்னியோட இட்லி கிடைக்கும் மதுரைல. இங்க சில்லுனு பீர் தான் கிடைக்குமாம், சொன்னாங்க. :))

வாங்க குப்பன் யாஹூ.

வல்லிமா, இப்பவும் காலை, மாலை டிபன் எல்லாம் கிடைக்குது. கடம்பாவும் இருக்கு. கவலை வேண்டாம். :))

திவாண்ணா, கொஞ்ச காலம்னா எந்த வருஷம்..? :p

விஜய், அதே தான். எங்க வீடும் ஏழு கடல் தாண்டித் தான் இருக்கு. ஒரு தரம் ஆசைக்கு போய் வந்தோம். ஆபிசே எனக்கு எம்.ஜி ரோட்டுல தான் இருக்கு. என்ன கொடுமை இது விஜய்..? :))

சொக்கன், அடடா அப்படியா? ஜெயா நகர் நமக்கு ரெம்ப தூரம். தெரிஞ்சவங்களுக்கு சொல்றேன். :)

அதே தான் மோகன் குமார். வீட்டுக்கு வீடு வாசப்படி. உங்க பதிவு(ஏலகிரி, வேலூர் கோவில்) எல்லாத்தையும் படிச்சிட்டேன். :))

வாங்க ஜெயஸ்ரீ அக்கா, நீங்க சொல்ற காமத் ஹோட்டல் ஒன்னு மைசூர் ரோடுல இருக்கு. எல்லாருமே காந்தி குல்லா போட்டு பறிமாறுவாங்க. ஹைதையையும் விட்டு வைக்கலையா?
நைசா என்னை அண்ணன் என விளித்து உங்க வயதை குறைத்து கொன்ட நுண்ணரசியலை ரசித்தேன். :))

Anonymous said...

"pengallurai serndha kodutha vaitha ambikku,mtr pattriya vivarangal arumai.oru dhadavai saapitirikiren.ooru vittu ooru vandhu namma ooru sappatirkum(andha rate irrkum )engi engi ,mudikotti ponadhu dhhan micham.adhanal dhan sanikkizhamai samaikkadhor sangathil serndhu ,edho unga "nalla samayalai" edhirparkkirom.idhellam rengamannikkum eppo puriya povuthu.enga characteriya purinjikamattengranga ppa.
kashtapattu rengamaniya "sss"sangathula serthirukken.indha madhiri ellam ezhuthi saadhuvva iruukkara enrangamani maari poiduvaronnu bayama vera irukku.
ippadikku rengamani samayalai aavaludan edhirparthu,sanikizhamai varai porumaiyai kaathirukkum appavi thangamani nivi.






















































































'

Anonymous said...

Bangalore restaurantsla sambar avlo mattama irukumanu keten..

You are doing great job helping ur thangamani.. Will ask G to read this :)

vgr said...

romba nalla iruku posts. bangalore la krishna cafe nu oru restaurant irundudu..ipo epadi nu therla...sapadu na ahhhh...adu....try panni parunga..

ambi said...

வாங்க நிவி, ஆக, உங்க ரங்குவுக்கும் SSS la அட்மிஷன் போட்டாச்சா? நேர்ல பாத்தா என்னை ரவுண்டு கட்டி அடிக்க போறாரு. :))

மிட்டு, மட்டம்னு சொல்ல முடியாது. சாம்பார்ல சர்க்கரை சேர்ப்பது கன்னடிகா ஸ்டையில் சமையல். :))
ஜி வேற இதை படிக்கனுமா? என் ஏரியாவுக்கு ஆட்டோ ஊர்வலமே வரப் போவது உறுதி. :))

விஜிஆர், கிருஷ்ணா கஃபே..? கேள்விபட்ட மாதிரி இருக்கே? எங்க இருக்கு? மல்லேஸ்வரமா? முதல் வருகைக்கு நன்றி ஹை. :))

Jayashree said...

தின்னெலினா எல்லாரும் அண்ணாச்சி தான்:)) அதன் பேர்லியே தம்பி இருக்கேப்பா!! அம்பி த் தம்பி!!!

uthira said...

m.g. road brindhavanle manathakali vatha kuzhambu supera irukum. apram madurai idli commercial street ku parallel irukara street le irukum romba super nu solla maten ivanga ur hotele sapadrathuku evlavo thevalai
apram koramangala le kuda krishna ok

மணிகண்டன் said...

MTR - ஒருமுறை எங்க கம்பனிக்கு கேட்டேரிங் ஏற்பாடு பண்ண யோசிச்சி அவங்க கிச்சன் செக் பண்ணினோம். கொடுமையிலும் கொடுமை - அவ்வளவு மோசமான hygiene env.

சும்மா கதை விடறீங்களா இல்லை உண்மையாகவே கிருஷ்ணா கபே போனது கிடையாதா ? ஓம் சக்தி மெஸ் கூட சண்டே ட்ரை பண்ணலாம். கலக்கலா இருக்கும்.

CS. Mohan Kumar said...

தலைவா,

என்னோட கட்டுரை முதல் முறையா யூத் விகடனில் ஜாலி பஜாரில் வந்திருக்கு. இதுவும் தங்கமணி மேட்டர் தான் (நான் House Boss-என்பேன்)

இந்த link -ல் படிக்கவும்.

http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar13112009.asp

To read it in my blog: http://veeduthirumbal.blogspot.com

ambi said...

ஜெயஷ்ரி, அண்ணாச்சியா? அப்ப சரி. :))

வாங்க உத்ரா, பிருந்தாவன் இனி தான் ட்ரை செய்யனும். ஒரு இடம் விட்டு வைக்கலை போல. வெரி குட். :))

யோவ் மணி, இன்ஸ்பெக்ஷன் எல்லாம் உம்ம யாருய்யா பண்ண சொன்னது? எல்லா தோசைகல்லையும் வெளக்குமாத்தால தான்... சரி விடுங்க. :))
நெஜமாலுமே கிருஷ்ணா கபே தெரியாது. :))

ambi said...

Congrats and thanks for the link Mohan. It's a good article. :))

CS. Mohan Kumar said...

அம்பி வேலை ரொம்ப அதிகமா? அடுத்த பதிவு எப்போ?

யூத் விகடனில் உங்க ஸ்டைல் கமெண்ட் அருமை. இன்று யூத் விகடனில் நம்ம கவிதை வந்துருக்கு (விடுறதில்லை..) லிங்க்:
http://youthful.vikatan.com/youth/Nyouth/mohankumar16112009.asp

உங்க மெயில் id தெரியாததால் இங்கே வந்து சொல்கிறேன். நல்ல பிள்ளையா உங்க மெயில் id எனக்கு தெரிய படுத்தவும் (என்னோடது:mohan.kumar@allsectech.com)

pudugaithendral said...

சென்றவருட பெங்களூர்(பெண்களூரல்ல) ட்ரிபில் எம் டி ஆர் போக முடிவு செய்து போனோம். அன்று சர்வீஸ் இல்லையாம். நான் அங்கே சாப்பிட அவர்களுக்கு கொடுத்துவைக்கவில்லைன்னு வந்திட்டேன்.(மைசூர், பெங்களூர் ரோட்டில் இருக்கும் எம் டிஆரில் சாப்பிட்டிருக்கேன்.)

சூப்பர்னு கத்தி சொல்லலாம்.

frankee said...

yenappa ippadiyellam saapaattaippathi pottu vayitheruchilai kottikkareenga. Naanellam 7000 mile thalli namma oorru saapaattukkaga dinam dinam engiraval. chennaile nalabaagamnu solli indha madhiri oru pure veg restaurant ponen ennadu freinds oda 3 varusathukku munnadi. Tastenu onnum perusa illai aana avanga koduthadhu ellame healthya irundhuchu.

Enna irundhalum coimbatorele gowi shankarle neii masal dosai and sambar vadai saapidaradhukku vittadudhan. ennakku therunchu 40 years nadatharaanga indha kadaiya. eppadi adhey rusiya maintain panaragalo.

Anyway waiting for my next visit to gowri shankar.

thanks for the nice post ambi.

ambi said...

புதுகை அக்கா, கத்தி சொன்னதுக்கு நன்றி ஹை. நீங்களும் ச.ச.சவுல மெம்பரா? :p

@Frankee, அடடா, அடுத்த முறை நீங்க இந்தியா வரும்போது விசிட் அடிங்க. கோவை கெளரிசங்கர் பத்தி நானும் கேள்விபட்ருக்கேன். கோவையா உங்களுக்கு?

pudugaithendral said...

நீங்களும் ச.ச.சவுல மெம்பரா? //

விளக்கம் ப்ளீஸ், பிரியல. :))

ambi said...

//ச.ச.சவுல மெம்பரா//

@புதுகை அக்கா, சனிக்கிழமை சமைக்காதோர் சங்கம். :))

Anonymous said...

http://aris-ungaliloruvan.blogspot.com/

nivi said...
This comment has been removed by the author.
frankee said...

aamaam ambhi, kongu tamil mannudhan namba sondha ooru...10 varushama ooru orru poikittu irukkom....modhalle singapore, ippo germany...naalai engayo....ennappanaithan kekkanum...

ambi said...

//ennappanaithan kekkanum...
//

@frankee, muruganaiyaa? naanum avanai thaan kekkanum. :))

பத்மா said...

namma aalunga sappattu rasinganga than ...ethana comments..
nice nice aaya kalaigal aruvathu naalila rusithu sapiduvathum onnu pola ..
aangilathila gourmetnnu ithukku oru vaarthiye irukke...
besh nanna saapidungo
padma

CS. Mohan Kumar said...

அம்பி, வலைச்சரத்தில் உங்களின் இந்த பதிவை குறிப்பிட்டு எழுதி உள்ளேன். இயலும் போது வாசியுங்கள்.

http://blogintamil.blogspot.com/2010/09/blog-post_18.html