Saturday, March 01, 2008

கும்மி அடிக்க வாரீகளா?

வ.வா சங்கத்தில் நான்காம் பதிவு வெளி வந்து விட்டது. காண தவறாதீர்

சற்றே பசி எடுக்க துவங்கும் பகல் சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் ஆபிசில் நாம் பிசியாக வேலையில் மூழ்கி இருந்த போது (சரி, இதுக்கே சிரிச்சா எப்படி?) ஒரு போன் கால். யாருனு பாத்தா அட நம்ம தல கைப்புள்ளை. பரஸ்பரம் ஷேமம்! உபயஷேமம், எல்லாம் விசாரித்தபின் மேட்டருக்கு வந்தார் நம்ம தல.

வ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ் வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும்! என அவர் சொன்னதை கேட்டவுடன், நமக்கு ஒரு சின்ன தயக்கம். என்னடா! எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில் இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது? நீங்களே சொல்லுங்கள்!

அட்லாஸ் குழந்தை கேட்டகரியில் வர வேண்டிய நம்மை இப்படி வாலிபர் கேட்டகரியில் சேர்த்தால் எப்படி அது நியாயம்..? நாம ஏற்கனவே ஒரு இளஞ்சிங்கம்! என்பது வேறு விஷயம் என நைசா சைடு கேப்பில் கோல் போட முயற்சிக்க, தங்கமணிக்கு தொண்டையில் கிச் கிச். பொதுவாக தொண்டையில் கிச் கிச் வந்தால் விக்ஸ் சாப்பிடனும், இல்லாட்டி நன்றாக காறி துப்பி விட வேண்டும். அது என்னவோ முக்ய தருணங்களில் எல்லா தங்கமணிகளும் இரண்டாவது வழியை தான் கடைபிடிக்கிறார்கள்.

சரி, வருடம் ஒரு முறை திருஷ்டி கழிக்க நம்மை கூப்பிட்டு இருக்கிறார்கள் போலும். ஆக மார்ச் மாதம் வவா சங்கத்தில் தான் நம்ம கச்சேரி. ஆமா! இங்க கிழிச்சாச்சு! என்ன செய்ய? வீட்லயும், ஆபிஸ்லயும் ஒரே வேலை. ஒத்து கொண்டதால் வாரம் ஒரு பதிவாவது அங்கே கண்டிப்பாக போட்டு விடுவேன்! என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆதரவை வழக்கம் போல் எதிர்பார்த்து இருக்கிறேன்.

24 comments:

ரசிகன் said...

//வ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ் வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும்!//
வாழ்த்துக்கள் அம்பியண்ணா:)

Anonymous said...

/வாரம் ஒரு பதிவாவது அங்கே கண்டிப்பாக போட்டு விடுவேன்! என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆதரவை வழக்கம் போல் எதிர்பார்த்து இருக்கிறேன்/

Looking forward to the post.

Ravi

Dreamzz said...

superu :) kalakunga

நிவிஷா..... said...

அண்ணா, தாங்கள் இந்த மாத அட்லாஸ் குழந்தை ஆனதற்கு என் வாழ்த்துக்கள்..

நட்போடு
நிவிஷா

Kittu said...

IPL rangela ambi demand yaerittae pogudhu pola..adhaan vaa vaa nu vaa vaa vae kooptuttaanga...sari visu maadhiri paesi kuzappittaeno

neenga kalakkunga ambi..unga writing style yaarukku varum...vaa vaa vukku naanum vandhu commentaraen

கைப்புள்ள said...

//என்னடா! எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில்//

ROTFL

// இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது? நீங்களே சொல்லுங்கள்!//
என்ன செய்ய போறதா? இருந்தாலும் ஓவர் தன்னடக்கம்...செம கலக்கு இல்ல கலக்கிக்கிட்டிருக்கு?
:)

அபி அப்பா said...

அம்பி! நான் இங்கே கொஞ்சம் கும்மிக்கவா! இன்னிக்கு ரொம்ப ஃப்ரீ:-))

மங்களூர் சிவா said...

ஏச்சூஸ்மி என்னைய இங்க கூப்பிட்ட அபிஅப்பா எங்க?

அபி அப்பா said...

ஹை வீட்டை திறந்து வச்சிருக்கியலா:-))

அபி அப்பா said...

வாங்க சிவா! வந்துட்டேன்!

அபி அப்பா said...

சிவா! முதல்ல பதிவை படிங்க பின்ன அது சம்மந்தமா கும்மலாம்!

அபி அப்பா said...

நான் படிச்சுட்டேன்! அருமையான கருத்துள்ள பதிவு அம்பி!

மங்களூர் சிவா said...

//
Your comment has been saved.

//

எங்கள மாதிரியே நீங்களும் ரொம்பா நல்லவர்தான்

மங்களூர் சிவா said...

மே கஹான்ங் ஹூம்???

மங்களூர் சிவா said...

///
அபி அப்பா said...
சிவா! முதல்ல பதிவை படிங்க பின்ன அது சம்மந்தமா கும்மலாம்!

//

இதுக்கு என்னைய கெட்ட வார்த்தைல ரெண்டு திட்டு திட்டிருக்கலாம் நட்டப்பா

My days(Gops) said...

brother varuvom la :)

mgnithi said...

Congratz ambi.(ithula ulkuthu ethuvum illa)

Ithellam sollanuma.. Neenga atlas vaalibar/kuzhanthai eppadi irunthalum naanga correcta vanthu kummi adikkarom :-)

.:: மை ஃபிரண்ட் ::. said...

அட்லாஸ் குழந்தைக்கு வாழ்த்துக்கள். ;-)

Delhi_Tamilan said...

wow.... kalakureenga chandru... keep it up...

appybird said...

Hai,
Congrats. Am a silent Reader of ur blog. The way u all(all the bloggers)write inspired me to write and the result made me to create a blog. Check it out @ http://shankypri.blogspot.com

Usha said...

unaku puriyalaya, va.vaa sangam-nradhu vayasanavanga thangalai thangale appadi solli thethikardhu, and now you have been added to the list :P he he he

திவா said...

// At Fri Mar 21, 09:10:00 AM, Blogger Gardagami said…

See here or here
//
அம்பி இந்த போஸ்ட முதல்ல தூக்குங்க.
here ல சொடுக்கினா உங்க கம்ப்யூட்டர்ல வைரஸ் இருக்கு ன்னு சத்தம் போட்டு என் சப்ட்வேரை நிறுவுன்னு சொல்லும். இது மால்வேர்.

Anonymous said...

и всё эе: неподражаемо.. а82ч

奇堡比 said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信