Friday, April 11, 2008
ரெண்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா!
அட உணவுல கூட பாருங்க நீங்க சைவமா? அசைவமா?னு தான் கேக்கறாங்க. சரி உணவை விட்டு தள்ளுங்க, ஆன்மிகத்துல ஜீவாத்மா-பரமாத்மானு த்வைதம் சொல்லுது. ஜீவன் பரமாத்மாவிலே அடக்கம்னு அத்வைதம் சொல்லுது. (எல்லாம் இந்த கேஆரெஸ் அண்ணன் பெங்களூர் விஜிட்டின் மகிமை.)
அரசியலுல பாருங்க, அது பிரிட்டீஷ் நாட்டுல இரண்டு கட்சி ஆட்சி முறை தான், இங்க தமிழ் நாட்டுலயும் அதே கதி தான்! அடிக்கடி காமராஜர் ஆட்சி அமைப்போம்!னு ஒரு கோஷ்டி காமெடி பண்ணும், அத எல்லாம் கண்டுக்கபடாது. :)
சினிமா துறைய எடுத்துகோங்க, தியாகராஜ பாகவதர் - பி.யூ.சின்னப்பா, சிவாஜி-எம்ஜிஆர், ரஜினி-கமல், என எல்லாமே ரெண்டு தான். ஹிரோக்களை சொல்லிட்டு மகளீர் பத்தி ஜொள்ளியே ஆகனும்னு நான் பாவனா - நயன்தாரானு ஷ்டார்ட் மீஜிக் போட்டால் வீட்ல சாம்பாரில் உப்பு அதிகரிக்க கூடிய சாத்தியங்கள் இருப்பதால், அந்த அரிய பணியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
சலசல! சலசல! ரெட்டைகிளவி தமிழில் உண்டல்லோ?னு ஐஸ் குட்டியே ஜீன்ஸ் படத்துல திருவாய் மலர்ந்திருக்காங்களே! (இன்னிக்கு சாம்பாரில் தெரியும் இந்த வரியின் தாக்கம்)
சினிமா காமடில ஒரு பழம் இந்தா இருக்கு! இன்னோரு பழம் எங்கே?னு கேட்ட அந்த காமடிய நம்மால மறக்க முடியுமா?
என்ன இப்ப எல்லாம் ரெட்டை அர்த்த வசனங்களில் வரும் நகைச்சுவைகளை சகித்து கொள்ள வேண்டி இருப்பது வருந்ததக்க விஷயமே!
சினிமால டபுள் ஆக்க்ஷன் படங்கள் சக்கை போடு போட்டு இருக்கு. எங்க வீட்டு பிள்ளை, கெளரவம், வாணி-ராணி, பில்லா, நாட்டாமைனு ஒரு பெரிய லிஸ்டே நீளும். ஆனா இப்ப எல்லாம் ஹீரோக்கள், அப்பா, பெரியப்பா, மகன், பேரன்னு சகட்டு மேனிக்கு எல்லா வேஷங்களையும் கலந்து கட்டி அடிக்கறாங்க. இதுனால் என்ன ஆகுது? இந்த அப்பா ரோலில் வரும் வி.எஸ்.ராகவன், பூர்ணம் விஸ்வ நாதன், மேஜர் சுந்தர்ராஜன் எல்லாம் பீல்ட் அவுட் ஆகி வீட்ல கோலங்கள் சீரியல் பாக்கற நிலைமை உருவாகிடுச்சு.
இசைத் துறையிலும் இந்த இரண்டு ஆதிக்கம் செலுத்திகிறது. கர்நாடக இசையில் ப்ரியா சகோதரிகள், கனேஷ்-குமரேஷ் (வயலின்), மான்டலின் ஷ்ரினிவாஸ்-ராஜேஷ்,மாம்பலம் சகோதரிகள், சூலமங்கலம், பாம்பே சகோதரிகள்னு எல்லாம் இரண்டு மயம் தான்.
(இன்னும் யாரையாவது மிஸ் பண்ணி இருந்தா பின்னூட்டதில் தெரிவிக்கலாமே!)
சினிமா இசையிலும் விஸ்வநாதன்-ராமமூர்த்தி, லக்ஷ்மிகாந்த்-பியாரேலால், சங்கர் கணேஷ், டைரக்டர்கள் ஜெடி-ஜெர்ரினு ரெண்டு ரெண்டா கலக்கி இருக்காங்க.
விளையாட்டு துறைய பாருங்க, டென்னிஸ்ல வீனஸ்-செரினா வில்லியம்ஸ் சகோதரிகள், கிரிக்கெட்டுல மார்க் வாக் - ஸ்டீவ் வாக்(ஆஸி), கிராண்ட் பிளவர்- ஆன்டி பிளவர்(ஜிம்பாவே)னு ரெண்டு ஆதிக்கம் செலுத்துகிறது.
உளவியல் ரீதியா சொல்லனும்னா, மனிதர்கள் எல்லோருக்குமே ரெண்டு முகங்கள் உண்டு. ஒன்னு சமூகத்தில் அவர்கள் காட்டும் முகம், மற்றது தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டும் முகம். கூடியவரை இந்த ரெண்டு வாழ்க்கையிலும் கோபம், பொறாமை, பேராசை,காம கசடுகள் இல்லாமல் பாத்து கொள்வது தனி மனிதனுக்கும், சமூகத்துக்கும் நல்லது. இல்லையா?
எதுக்குடா அம்பி இவ்ளோ பெரிய வில்லுபாட்டு?னு நீஙக கேக்கலாம்.
இந்த வ.வா.சங்கத்து இரண்டாம் ஆண்டு விழவுக்கு அவங்க அறிவிச்சு இருக்கற போட்டிக்கு தான் இந்த மொக்கை. அதானே! எலி ஏன் அம்மணமா ஓடுது?னு இப்ப புரிஞ்சுருக்குமே உங்களுக்கு.
ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! வ.வா.சங்கம் ஏற்கனவே அறிவிச்சு இருந்த பிரம்ம ரச புகைப்பட போட்டிக்கு நான் அனுப்பி இருந்த படங்களில் எனது இரண்டாம் படத்துக்கு இரண்டாம் பரிசு அறிவிச்சு இருக்காங்க. (அட பாருங்க! இங்கயும் இரண்டு தான்).
Friday, April 04, 2008
பரீட்சை
இதற்கு காரணம் அட்டை டூ அட்டை எல்லாம் கரைத்து குடித்து விட்டு போனேன் என அர்த்தம் கொள்ள கூடாது.
பள்ளி காலங்களில் அப்படி படித்ததுண்டு. ஐந்தாம் வகுப்பில் தொடர்ந்து எல்லா பரீட்சைகளிலும் முதலாவதாக வந்ததுக்காக, ஆண்டு இறுதியில் மேடை போட்டு கேசரி சாப்பிட ரெண்டு எவர்சில்வர் பேசின் குடுத்தார்கள். இன்னும் பத்ரமாக வைத்திருக்கிறேன்.
ஆறாவது சற்று பெரிய பள்ளிகூடம். புதிய களம், புதிய ஆசிரியர்கள். கண்ண கட்டி தமிழ்மணத்துல விட்ட மாதிரி இருந்தது. இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை தேர்வு. இந்த சமூக அறிவியல் பாடத்தில் தூர்தர்ஷனில் வரும் சுரபி ரேணுகா ஷாஹேன் தயவில் இமய மலை பத்தி நான் மட்டும் எக்ஸ்ட்ரா பிட்டு போட்டதில் என்னை தவிர மொத்த கிலாஸும் பெயில். நான் மட்டும் 45 மதிபெண்கள். பாஸ் ஆனா தான் ரேங்க் தருவார்கள். (இப்பவும் அப்படி தானே?)ஆக நான் மட்டும் பாசாகி முதல் ரேங்கும் பெற்று அடுத்த பத்து நாட்களுக்கு கிளாஸில் மகுடம் இல்லாத மகாராஜா ரேஞ்சுக்கு சீன் போட முடிந்தது.
அந்த பள்ளியில் ஒவ்வொரு ஆசிரியருக்கு ஒவ்வொரு மாதிரி எழுதனும்.
1) ஒருத்தருக்கு பாயின்ட் பாயின்டா எழுதினா தான் பிடிக்கும்.
2) ஒரு டீச்சருக்கு முக்யமான வரிகளை கலர் ஸ்கெட்ச்சால் பெயின்ட் அடிக்கனும்.
3) ஒரு ஆசிரியருக்கு பாரா பாராவா எழுதனும். எத்தனை ஷீட் பேப்பர் எழுதி இருக்கோம்னு பாத்து தான் சில பேர் மார்க் போடுவாங்க.
இந்த பாரா பார்ட்டிய நம் மக்கள் ஈசியா ஏமாத்திடுவாங்க. பாராவின் முதல் மற்றும் கடைசி வரிகள் மட்டும் அறிவியல் சம்பந்தமா எழுதிட்டு, நடுவுல அவனவன் ஈஷ்டத்துக்கு ராமாயணம் முதல் படையப்பா படத்தில் நீலாம்பரியின் பங்கு வரை எழுதி வைப்பான். நடுவுல நியூட்டன், ஐன்ஸ்டின் எல்லாம் வேறு வந்து நீலாம்பரியை குசலம் விசாரித்து விட்டு போவார்கள்.இதுல டோட்டல் மிஸ்டேக்னு சொல்லி மேலும் சில மார்க்குகள் வாங்கி வரும் கில்லாடிகளும் உண்டு.
எக்ஸாம் நடக்கற ஹால்களுக்கு மேற்பார்வைக்கு எந்த வாத்யார் வருகிறார்? என்பதை பொறுத்து தம் மார்க்குகளை முடிவு செய்யும் மக்களும் இருந்தனர். குறிபிட்ட ஒரு டீச்சரை எல்லா ஹால் மாணவரும் வலிய போய் தம் ஹாலுக்கு அழைத்து வருவர். ஏன்னா அந்த டீச்சருக்கு அவ்ளோ தயாள குணம்.
ஒரு வழியாக பள்ளீயில் இருந்து கல்லூரி வந்தபிறகு படிப்பு என்பது வேறு விதமாய் மாறியது.
இந்த கிண்டியில் நடக்கும் குதிரை ரேஸ் பத்தி தெரியுமா? இந்த குதிரை தான் ஜெயிக்கும்! என யூகத்துடன் பணம் கட்டுவார்களே, அது போல கல்லூரி வந்தபிறகு குறிபிட்ட பகுதியில் இருந்து தான் கேள்வி வரும் என கணித்து அதை மட்டும் படித்து விடுவேன்.
என் ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானமாகிய ஐந்தாம் இடத்தை குரு பார்ப்பதால், நான் படிச்சது மட்டும் தான் பரீட்சைக்கு வரும்! என நான் சொன்னதை இரண்டு ஆண்டுகள் வரை நம்பிய நண்பர்களும் உண்டு. அப்ப மூனாம் ஆண்டு என்ன ஆனது?னு நீங்க பின்னூட்டம் போடலாம். அந்த வருடம் குருபெயற்ச்சி ஆகி விட்டார் என சமாளித்து விட்டேன்.
சரி, இப்ப என்ன மேட்டர்னா, திருமணத்துக்கு பின்பும் எம்பிஏவில் எழுத வேண்டிய பேப்பர் நாலு பாக்கி இருக்கு! என தங்கமணி கூறியதும் (ஹிஹி, நானாவது இனி எக்ஸாமாவது) கடமை கண்ணாயிரமாக, "அதுக்கென்ன! நமக்கு படிப்பு தான் முக்யம்! நீ படிம்மா! என பெரிய தசரத சக்ரவர்த்தி மாதிரி வாக்கு குடுத்து விட்டேன்.
அந்த பரீட்சை இப்ப வந்து நிக்குது. ஈஸ்டர் விடுமுறை! ஹாயா வீட்டுல குறுந்தகடு (சி.டி தான்)பாக்கலாம்! என்ற என் திட்டத்துக்கு ஆப்பு வைப்பது போல் வீட்டில் வேலை செய்பவர் வேறு லீவு எடுத்து கொள்ள, நீங்க தானே வரம் குடுத்து இருக்கீங்க!னு சமயம் பாத்து தங்கமணி கோல் போட, வேற வழி இல்லாமல், எங்க வீட்டு சிற்றம்மல மேடையில் நானே தேவாரம் பாடவேண்டியதாய் போயிற்று. :)
ஆங்க்! சொல்ல மறந்துட்டேனே! விம் பாரும், ஸ்கரப்பரும் கூட்டணி சேர்ந்தால் பாத்ரங்கள் எல்லாம் என்னமா மின்னுது தெரியுமா? இதை தான் கற்றது கையளவு!னு பெரியவங்க சொல்லி இருக்காங்க போலிருக்கு.
Monday, March 31, 2008
Saturday, March 01, 2008
கும்மி அடிக்க வாரீகளா?
சற்றே பசி எடுக்க துவங்கும் பகல் சுமார் பன்னிரெண்டு மணிவாக்கில் ஆபிசில் நாம் பிசியாக வேலையில் மூழ்கி இருந்த போது (சரி, இதுக்கே சிரிச்சா எப்படி?) ஒரு போன் கால். யாருனு பாத்தா அட நம்ம தல கைப்புள்ளை. பரஸ்பரம் ஷேமம்! உபயஷேமம், எல்லாம் விசாரித்தபின் மேட்டருக்கு வந்தார் நம்ம தல.
வ.வா.சங்கத்தில் மார்ச் மாத அட்லாஸ் வாலிபராக நம்மை தேர்ந்தேடுத்துள்ளதாகவும், ஒரு மாதம் அங்க வந்து கும்மி அடித்து சிறப்பிக்க வேணும்! என அவர் சொன்னதை கேட்டவுடன், நமக்கு ஒரு சின்ன தயக்கம். என்னடா! எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளயனார் கண்ணபிரானும் கட்டிகாத்த வ.வா.சங்கத்தில் இந்த குழந்தை வந்து என்ன செய்ய போறது? நீங்களே சொல்லுங்கள்!
அட்லாஸ் குழந்தை கேட்டகரியில் வர வேண்டிய நம்மை இப்படி வாலிபர் கேட்டகரியில் சேர்த்தால் எப்படி அது நியாயம்..? நாம ஏற்கனவே ஒரு இளஞ்சிங்கம்! என்பது வேறு விஷயம் என நைசா சைடு கேப்பில் கோல் போட முயற்சிக்க, தங்கமணிக்கு தொண்டையில் கிச் கிச். பொதுவாக தொண்டையில் கிச் கிச் வந்தால் விக்ஸ் சாப்பிடனும், இல்லாட்டி நன்றாக காறி துப்பி விட வேண்டும். அது என்னவோ முக்ய தருணங்களில் எல்லா தங்கமணிகளும் இரண்டாவது வழியை தான் கடைபிடிக்கிறார்கள்.
சரி, வருடம் ஒரு முறை திருஷ்டி கழிக்க நம்மை கூப்பிட்டு இருக்கிறார்கள் போலும். ஆக மார்ச் மாதம் வவா சங்கத்தில் தான் நம்ம கச்சேரி. ஆமா! இங்க கிழிச்சாச்சு! என்ன செய்ய? வீட்லயும், ஆபிஸ்லயும் ஒரே வேலை. ஒத்து கொண்டதால் வாரம் ஒரு பதிவாவது அங்கே கண்டிப்பாக போட்டு விடுவேன்! என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஆதரவை வழக்கம் போல் எதிர்பார்த்து இருக்கிறேன்.
Friday, February 22, 2008
போடுங்கம்மா ஓட்டு!
அன்பார்ந்த பிளாக்காளப் பெருங்குடி மக்களே!
நம்ம பிளாக் யூனியன் ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவடைய போகுது. உருப்படியா என்னத்தை கிழிச்சோம்? என நாளைய சரித்திரம் சொல்லும். (ஹிஹி, வேற எப்படி தான் சமாளிக்கறதாம்?).
சென்னை வரும் நம் யூனியன் மக்களை மிக அன்பாக தட்டி கொடுத்து, ஹோட்டலுக்கு தள்ளிகொண்டு போயி கிடா வெட்டும் நமது ஜி3 அக்காவின் பெருந்தன்மையாகட்டும், ஜிடாக்கில் சிக்கினால், மொக்கை போட்டு எதிராளியை துண்டை காணோம்! துணியை காணோம்! என ஓட வைக்கும் நமது மை பிரண்டின் தன்னிகரில்லா சேவையாகட்டும், மொக்கை போடவென்றே தனியாக ஒரு பிளாக், ஆன்மீகத்துக்கு தனி பிளாக் என பதமாக பிரித்து, இதமாக மொக்கை போடும் நம் பதிவுலக காரக்கால் அம்மையாராம் கீதா பாட்டியின் திருத்தொண்டாகட்டும், நமது யூனியனின் சேவை சொல்ல, சொல்ல புல்லரிக்க வைக்கும்.
இது தவிர, அவ்வப்போது வேலைவாய்ப்பு, பொது விழிப்புணர்வு, சுகாதாரம் சம்பந்தமாக சில பதிவுகளும் வரத்தான் செய்கின்றன.
என்னடா இழுவை?னு நீங்கள் கும்முவதற்க்கு முன்னால் மேட்டருக்கு வருகிறேன். நமது பிளாக் யூனியனையும் சிறந்த வலைப்பூவாக கருதி, சங்கமம் (படம் பெயர் இல்லை) வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள்.
ஓட்டு எப்படி போடனும்? என்ன செய்யனும்? என்ற விவரம் எல்லாம் இந்த சுட்டியில் உள்ளது. எனவே நம் யூனியன் மக்கள் அனைவரும் தவறாமல் இந்த வாக்கெடுப்பில் பங்கு கொண்டு நம் பிளாகுலக கடமையை நிறைவேத்திட வேண்டும்.
வாக்களிக்க கடைசி நாள் 29-பிப்பரவரி 2008. வழக்கம் போல பதிவை படித்து விட்டு கமண்ட் போடாமல் நழுவுவது மாதிரி ஓட்டு போடாமல் இருந்துவிட வேண்டாம். :))
Friday, February 01, 2008
பொங்கல் ரிலீஸ்
முதலில் பீமா. படத்துக்கு இந்த பேர் வைச்சதுக்கே இயக்குனருக்கு சுத்தி போடனும். ஏற்கனவே தர்மா, அர்ஜுனா, கர்ணா எல்லாம் வந்து விட்டது. இந்த வரிசையில் இனி நகுலா, துரியோதனா, துச்சாதனா! சகுனினு வரலாம். கெளரவர்கள் நூறு பேர் பெயரும் என்ன?னு தெரிஞ்சா நம் தமிழ் இயக்குனர்களுக்கு ரொம்ப வசதியா இருக்கும்.
சரி படத்துக்கு போவோம்! விக்ரம் இந்த படத்தில் பஜாஜ் பல்சர் பைக் மாதிரி கும்முனு இருக்கார். படத்தில் அவர் வரும் பைக்குக்கும் அவருக்கும் வித்யாசமே தெரியலை. பாட்டி வடை சுடுவது போல டுமீல், டுமீல்னு படம் முழுக்க துப்பாக்கியால் யாரையோ சுட்டு கொண்டே இருக்கார். பாவம்! தயாரிப்பாளர் சம்பள பாக்கி வைத்து விட்டாரோ என்னவோ? படத்தில் பிரகாஷ் ராஜ் கூட இருக்கிறார். இப்படி பத்து படம் நடித்தால் தான் அவரால் மொழி போன்ற படம் தயாரிக்க முடியும் என்பதால் மன்னித்து விடுவோம்.
த்ரிஷா டூயட் பாடல் காட்சிகளில் காத்தாட வளைய வருகிறார் என்பதால் இசை மற்றும் பாடல் வரிகளை கவனிக்கவே முடியலை. அப்படியே கவனிக்க முயன்றாலும் (இசையை தான் சொன்னேன்) தங்கமணி டக்குனு கார்ட்டூன் நெட்வர்க் மாத்தி விடுகிறார். என் நிலையை பாத்து டாம் & ஜெர்ரி கூட விழுந்து விழுந்து சிரிக்கிறதோ?னு ஒரு சந்தேகம் அடி மனதில் உள்ளது.
பொதுவாக லிங்குசாமி படங்களின் கிளைமாக்ஸ் எல்லாம் ஒரு பாட்டில் பீரை இரண்டு லிட்டர் தண்ணி கலந்து குடித்தது போல சப்புனு இருக்கும். இந்த படத்திலும் அப்படித்தான். இந்த பீர் மேட்டர் எல்லாம் நண்பன் ஒருத்தன் தான் டெக்னிகல் சப்போர்ட் என்று நான் சத்யம் செய்தால் நீங்கள் நம்பி தான் ஆகனும்!
ஆக மொத்ததில், பீமா - பலசாலி இல்லை!
அடுத்து வருவது பழனி. படத்தின் பெயரை கேட்டவுடன் முருகன் பத்திய பக்தி படம் என நினைத்து, பதிவு போட ஏதாவது மேட்டர் கிடைக்கும் என சப்பு கொட்டிகொண்டு ஆன்மிக பதிவர்களான அண்ணன் கண்ணபிரான், ஜி.ரா, கீதா பாட்டி மற்றும் சிலர் தியேட்டருக்கு காவடி எடுக்க வேண்டாம் என இந்த சமயத்தில் எச்சரிக்கபடுகின்றனர்.
பாய்ஸ் படத்தில் அறிமுகமான பலரில் ஓரளவுக்கு உருப்பட்டது பரத், மற்றும் சித்தார்த் (இந்த வரியை படித்தவுடன் மை பிரண்ட் முகத்தில் பிரகாசமாய் பல்ப் எரியுது பாருங்க).
அஜித்தை வைத்து திருப்பதி என்ற முழு நீள காமெடி வெற்றி படம் குடுத்த இயக்குனர் பேரரசு "நல்ல வெயிட்டான ரோல்"னு பரத்துக்கு பஞ்சாமிர்தம் குடுத்திருக்கிறார்.
"வெட்டி சீவ நான் ஒன்னும் இளனி இல்ல பழனி" போன்ற காமெடி வசனங்களுக்காகவே படத்தை கண்டிப்பா பாக்கனும். ஏனேனில் வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும். பூ பூத்து, காயாகி, பழமாகி...னு பல்லை கடித்து கொண்டு பரத் வசனம் பேசி முடிக்கும்போது வில்லனுக்கு மட்டுமல்ல, நமக்கும் கொட்டாவி வருவது நிச்சயம்.
ஆக பழனி தயாரிப்பாளருக்கு மொட்டை! ரசிகர்களுக்கு அரோகரா!
அடுத்து வருவது சிம்பு நடித்த(?) காளை. அட பெயரை கேட்டவுடன் களுக்குனு யாருப்பா அங்க சிரிக்கறது? பொங்கல் சமயத்தில் படம் ரிலீஸ் என்பதால் காளைனு பெயர் வைத்தால் படம் தறி கெட்டு ஓடி விடும் என முடிவு செய்து விட்டார்கள் போலும். உண்மை தான்! தியேட்டரை விட்டு படம் தறி கெட்டு ஓடுகிறது, ரசிகர்களும் தான்.
நீளமாய் முடி வைத்த சிம்புவை அடிக்க வரும் அடியாட்களும் நீளமாய் ஹேர்ஸ்டையிலில் இருப்பதால் எல்லோருமே அடியாட்களாய் தெரிவதை தவிர்க்க முடியலை. "டண்டணக்கா டணக்கு டக்கா" என செவிக்கு இனிமையாய் பாடல்களை கேட்கும் போது, தயாரிப்பு செலவை குறைக்க பேசாம சிம்பு அப்பாவையே பாட்டு எழுத சொல்லி விட்டனரோ?னு நமக்கு சந்தேகம் வருகிறது. ஹிரோயின் பெயர் நினைவில் இல்லை.
பாடல்களை படமாக்கிய விதத்தை பாக்கும் போது சென்சார் போர்டில் உள்ளவர்கள் பாதி படத்தில் எழுந்து போய் பக்கோடா சாப்பிட போய் விட்டனர் என நினைக்கிறேன்.அனேகமாக எல்லா பாடல்களுமே ஏதோ விஜய் டிவியில் வரும் ஜோடி நம்பர் ஒன் சீசன்:ஐந்து பார்ப்பது போல் உள்ளது. ப்ரித்விராஜ்(எ) பப்லு தான் முதல் நாள் முதல் காட்சி முதலில் டிக்கட் எடுத்து தியேட்டரில் குலுங்கி குலுங்கி சிரித்தார் என ரகசிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மொத்தத்தில் காளை - ரொம்பவே முட்டி விட்டது.
பழனியையும் காளையையும் ஆஸ்கார் நாமினேஷனுக்கு இந்தியா சார்பாக அனுப்பியே தீருவோம்! என இரண்டு இயக்குனர்களும் அடம் பிடிக்கிறார்களாம்.
வெற்றி பெற நம் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
Friday, January 25, 2008
அவுட்லுக்
அடிச்சு பிடிச்சு டிராபிக்ல சிக்கி ஒரு வழியா ஆபிஸ் போய், கணினி பொட்டியை தொறந்தவுடன் நாம், சரி, நான் செய்யும் முதல் வேலை என்ன? அவுட்லுக்கை தொறந்து என்ன மெயில் வந்ருக்குனு பாக்கறது தானே?
என்னதான் யாஹூ, ஜிமெயில்னு இருந்தாலும், கம்பெனி ஐடியில வர ஈமெயிலை படிக்கற சுகமே அலாதி.
காலையில், ஒரு கரடி கையில ரோஜா பூவை வைத்து கொண்டு குட் மார்னிங்க் சொல்லும் மெயிலாகட்டும், மதியம் புவா முடிந்ததும் ஒரு அரை மயக்கத்தில் நாம் என்ன தட்டுகிறோம்?னு நமக்கும் தெரியாம, கணினிக்கும் தெரியாத அந்த பேரானந்த நிலையை அடையும் போது என்ன தூக்கமா?னு வரும் மெயிலாகட்டும், சாயந்தரம் டீ குடித்த சூடு தணிவதற்குள் ஐஸ் குட்டி முழுகாம இருக்காளாம்!னு என்டி.டிவி கர்ம சிரத்தையாக அளித்த ரிப்போர்டை காப்பி பேஷ்ட் பண்ணி நமக்கு வரும் மெயிலாகட்டும் அடடா! நாம் பிறந்த பயனை அடைந்தே விடுவோம்.
வெள்ளிகிழமையானா போதும் "ஏ மானிடா திங்ககிழமை உலகம் இருக்குமோ இருக்காதோ, அதனால அடுத்து வரும் இரண்டு நாட்களில் வாழ்க்கையை முழுதும் வாழ்ந்து விடு!" என கருத்து கந்தசாமிகள் வீக் எண்ட் ஸ்பெஷல் மெயில் அனுப்புவதை தன் தலையாய கடமையாக கொண்டுள்ளனர்.
இது போதாதுனு பல பேர் ஊர்ல இருக்கற மொக்கை சைட்டுல அதாவது வெப் சைட்டுல எல்லாம் போயி எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு! எனக்கும் கம்பெனி ஐடி இருக்கு!னு போஸ்டர் அடிச்சு ஓட்டாத குறையா ரிஜிஸ்டர் பண்ணிட்டு வந்து விடுவர்.
அப்புறம் என்ன? இந்தா பிடினு அவனும் தினமும் "விருச்சிக ராசி நேயர்களே! இன்று உங்கள் பதிவுக்கு கமண்ட் போடாம கமுக்கமா படிச்சுட்டு போற கூட்டம் தான் அதிகம்! கவனமா இருக்கனும்"னு ஒத்த ரூவா பொட்டு வெச்ச ஓம் உலக நாதன் ரேஞ்சுக்கு தின, வார, மாத பலன் எல்லாம் அழகாய் அனுப்பி வைப்பான்.
ஏதாவது ஒரு ஏடாகூட வெப்சைட்காரனுக்கு நம்ம ஐடி தெரிந்து விட்டால் போதும், டாலருக்கு நாலு நயாகரா வாங்கிக்கோ! வயாக்ரா வாங்கிக்கோ!னு மெயில் அள்ளி விடுவான்.
நம்ம பாசக்கார மக்கள் மட்டும் என்ன சும்மாவா? தியேட்டருக்கு போனா பக்கத்து சீட்ல யாரு இருக்கா?னு பாக்காம உன் சீட்டுல ஊசி இருக்கா?னு பாரு. இப்படி தான் ஐதராபாத்துல ஐதர் அலி உக்காந்த சீட்டுல எயிட்ஸ் பரப்புற ஊசி இருந்ததாம்! இந்த மெயிலை ஐந்து பேருக்கு அனுப்பினா ஐஸ் குட்டி கனவுல வருவா! பத்து பேருக்கு அனுப்பினா பத்ம ப்ரியா வருவா! 15 பேருக்கு அனுப்பினா...னு பீதியை கிளப்பி விடுவர்.
சாப்பிட்ட பின், உடனே ஜில்லுனு தண்ணி குடிச்சா கான்சர் வரும், பழங்களை உணவு உண்ட பின் எடுத்து கொண்டால் கக்கா வரும்!னு இந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகும்.
ஆபிஸில் இந்த யாஹூ, ஜிமெயில் எல்லாம் தடா செய்யப்பட்ட திக்கற்றவர்களுக்கு அவுட்லுக்கே துணை! சதா சர்வ காலமும் ஜிமெயிலிலேயே மோன நிலையில் தவம் கிடக்கும் ஒரு க்ரூப்புக்கு(இப்போ உங்களுக்கு ஜி3 அக்கா, ரசிகன் எல்லாம் நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை) தப்பி தவறி சவுக்கியமா?னு மெயில் அனுப்பினா நம்ம ஐடிக்கு சும்மா வளைச்சு வளைச்சு கும்மி அடித்து விடுவார்கள்.
ஒரு கட்டத்தில் நமக்கு வரும் மெயிலுக்கு, நமது ஆபிஸில் பொழுது போகாமல் பிளாக் படித்து கொண்டிருக்கும் நாகை சிவா போன்ற நெட்வர்க் அட்மின்களே பதில் போடும் அளவுக்கு நம் இன்பாக்ஸ் எகிறி விடும்.
இந்த களேபரத்தில், "சாயந்தரம் வரும் போது அரைகிலோ தக்காளி, மற்றும் எலுமிச்சம்பழம் வாங்கி வரவும்! வழக்கம் போல, கறிவேப்பிலைக்கு தனியாக காசு குடுத்து ஏமாற வேண்டாம்"னு பின்குறிப்பு போட்டு தங்கமணியிடமிருந்து வந்திருக்கும் அதிமுக்யமான மெயிலை காண தவறிவிட்டால், சாலமன் பாப்பையா சொன்ன மாதிரி, இந்த நாள் இனிய நாளாகி விடும்.
இரண்டு வருடங்களுக்கு ஒருதரம், ஒரு கம்பெனி விட்டு இன்னொரு கம்பெனி தாவும் என்னை போன்ற வானரங்களுக்கு, அட்ரஸ்புக்கில் இருக்கும் ஈமெயில் ஐடிகளை சிந்தாமல் சிதறாமல் கொண்டு போவதே பெரிய வேலை.
புது கம்பெனியில் பிளாக் எல்லாம் பிலாக் ஆகாமல் இருக்கனும்!
நம்ம கணினியில் சீன, ஜப்பான் மொழி எல்லாம் வராமல் தமிழ் எழுத்துக்கள் தெரியனும், நாம் உட்காரும் சீட் டேமேஜர் சீட்டுக்கு முதுகுபக்கமா இருக்கனும், அப்ப தான் நம்ம வழக்கமான தமிழ்தொண்டை(ஹிஹி) தங்குதடையில்லாமல் செய்ய முடியும்! போன்ற நியாயமான கவலைகள் எல்லாம் தலைவிரித்தாடும்.
Wednesday, January 16, 2008
எழுதியதில் பிடித்தது
அடியேன் எழுதியதில் பிடித்தது எது?னு ஒன்று! இரண்டு!னு வரிசைபடுத்தி, கீதா பாட்டி மாதிரி, மன்னிக்கவும், அவ்வையார் மாதிரி நமக்கு நாமே திட்டப்படி ஒரு விளம்பரம் தேங்க்!னு சுட்டி(லிங்க்) குடுக்கனும்.
ஆஹா! கைல கிடைச்ச லட்டு போல அருமையான வாய்ப்பு. விட்ருவோமா என்ன? இதோ:
1) சென்னையில் நான் வேலை பாத்த போது நடந்த ஆபிஸ் பார்ட்டி தான் நான் மிகவும் ரசித்து எழுதியது.
(பார்ட்டி என்றால் எல்லோரும் சந்திக்கும் நிகழ்ச்சி! என பொருள் கொள்ளவும்.)
2a) இதே மாதிரி நாங்கள் கலந்து கொண்ட ஒரு இசை போட்டி பற்றிய பதிவுக்கு தான் இரண்டாம் இடம்.
2b) தங்கமணியை பொண்ணு பாக்க போன நிகழ்வுகள் பற்றிய பதிவும் இரண்டாம் இடத்தை பிடிக்கிறது. (ஹிஹி, மூணாம் இடம் குடுத்தா என்ன நடக்கும்?னு எங்களுக்கு தெரியாது?)
3) தீபாவளிக்கு(பாவனா நடிச்ச படம் இல்லை) பஸ் டிக்கட் எடுத்த நிகழ்வு பத்திய பதிவு மூணாம் இடத்தை பிடிக்கிறது.
ஆன்மீக பதிவுகள், என்ன தான் நான் கஷ்டப்பட்டு எழுதினாலும், "எல்லா புகழும் தம்பி கனேசனுக்கே!" என எதிர் கட்சிகள் முழங்குகிறார்கள்.
சரி, பரவாயில்லை, கந்த சஷ்டி விழாவின் போது நான் ரொம்ப ரசித்து, உருகி எழுதியது என் மனதுக்கு நிறைவை தந்த பதிவு.
நான் டேக் செய்ய விரும்பும் நபர்கள்:
1) கண்ணபிரான் ரவி சங்கர் அண்ணா: ஆன்மீகத்தில் பட்டய கிளப்பும் பதிவர்.
2) கைபுள்ளை: காமடி, பயண குறிப்புகள், குவிஜுனு ஒரு நடமாடும் தகவல் சுரங்கம். இட்டிலி நல்லா சாப்ட்டா வந்ருக்கா தல? :)
Sunday, January 06, 2008
சுந்தர காண்டம்
என்ன தான் ராமன் தெய்வ அம்சமென்றாலும், மனித ஜென்மம் எடுத்ததால், மனைவியை பிரிந்த துயரால் பலவாறு புலம்ப, அப்போழுது அனுமனே தக்க வார்த்தைகள் பேசி தேற்றுகிறான்.
அதே போல வரங்கள் பல வாங்கி இருந்தாலும், ஈஸ்வர பட்டமே பெற்று இருந்தாலும், பிறர் மனை நோக்கும் ஈனச் செயலை ராவணன் செய்துவிடுகிறான். இலங்கைக்கு செல்லும் அனுமன் கடைசி முயற்சியாக ராவணனுக்கு நல்ல புத்தி சொல்கிறார்.
ஆக, பிறப்பால் குரங்காக அவதாரம் எடுத்தாலும், மனிதனாய் பிறந்த ராமனுக்கும், வல்லமை படைத்த அரக்க குலத்தில் பிறந்த ராவணனக்கும் புத்தி சொல்லும் உயரிய நிலைக்கு அனுமன் உயர்கிறார்.
"கண்டேன் கற்பின் கனலை" என்ற ஒற்றை வரியில் தான் எத்தனை பொருள்?
1) எந்த காரியத்துக்கு நான் சென்றேனோ அது ராமன் அருளால் வெற்றி என சூசகமாக, அடக்கமாக சொல்கிறார் அனுமன்.
2) சீதை உயிரோடு இருக்கிறாள், மேலும் சீரிய கற்போடு இருக்கிறாள் என மிக அழகாக தெரிவிக்கிறார் அனுமன்.
இவ்வளவு சிறப்புகள் பெற்றிருந்த போதும், அதை பற்றி துளியும் கர்வம் கொள்ளாமல், "தன்னடக்கமே உன் பெயர் அனுமனா?" என வியக்கும் வண்ணம், ராம பட்டாபிஷேகத்தின் போது, ராமனின் காலடியில் பவ்யமாக அமர்ந்திருந்து, இந்த பூவுலகில் எங்கெல்லாம் ராம நாமம் ஜெபிக்கபடுகிறதோ அங்கெல்லாம் வந்து சேவை சாதிக்கும் அந்த அனுமன் அவதரித்த திருநாள் மார்கழி மாதம் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் கூடிய நன்னாள் வரும் செவ்வாய்கிழமை(8th ஜனவரி) வருகிறது. இந்த நன்னாளில் சின்ன திருவடி என போற்றப்படும் அஞ்சனா மைந்தன், வாயு குமாரன், வானரவீரன், ராமதூதன், பக்தர்களின் குரலுக்கு ஓடி வருபவன் எல்லா வளங்களையும், என்றும் மாறா தன்னடக்கத்தையும் நமக்கு தரட்டும்.
Monday, December 31, 2007
இனிய (ஆங்கில) புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Saturday, December 29, 2007
போடுங்கம்மா ஓட்டு!
பிளாக்கில் பதிவு போட்டு கமண்ட் பொட்டியை தொறந்து வைத்து நாம் தேவுடு காத்து கிடந்தால், அனானியாக வந்து ஆப்படித்த கூட்டம் ஒரு பக்கம் என்றால் சத்தமே போடாமல் வந்து பதிவை படித்து விட்டு இடத்தை காலி செய்த கூட்டம் மறுபுறம். இதையெல்லாம் மீறி போனா போகுது!னு சில நல்லவர்கள், வல்லவர்கள் வந்து போவது மனதுக்கு ஆறுதலாய் இருக்கிறது.
சரி மேட்டருக்கு வருவோம். இந்த லிங்கில் போய் உங்களுக்கு பிடித்த கதையை தேர்வு செய்து உங்கள் ஓட்டை போட்டு விடுங்கள். எனக்கு ஓட்டு போடுங்கள்! என நான் கேட்க போவது இல்லை.
"எம்பெருமான் இலவச கொத்தனாரும், இளையனார் கண்ணபிரானும் கட்டி காத்து வரும் தமிழ் மணத்தில் தகுதியான ஒரு கதை முதலிடம் பெற்றால் அதை கண்டு சந்தோஷபடும் முதல் மனிதன் நான் தான்!, என சீன் போட விரும்பவில்லை. ஹிஹி, என் கதை யாழினியும் உங்களுக்கு பிடிக்கும். எனவே மறக்காமல் ஓட்டு போடுங்கள். கடைசி தேதி டிசம்பர் 31 - 2007.
பி.கு: எதிர் கட்சிகள் இந்த சந்தர்ப்பத்தை நன்றாக பயன்படுத்தி கொள்ளவும்.
Sunday, December 23, 2007
யாழினி
நாள்: 20- பிப்ரவரி-2030
நேரம்: மாலை 4 மணி அடிக்க ஐந்து நிமிஷம்
மிதமாக குளிரூட்டப்பட்ட அந்த கான்பிரன்ஸ் ஹால் அனைத்து உலக டெலிவிஷன், பத்திரிகை, மீடியா மக்களால் நிரம்பி வழிந்தது. மரபியல் விஞ்ஞானி புரபசர் பத்ரிநாத் தீடிரென்று அழைத்தால் விஷயம் இல்லாமல் இருக்குமா? ஏதாவது புதுவகை லேகியம் கண்டுபிடித்து விட்டாரா?
சரியாக மணி நாலு அடிக்க, அந்த ஹாலில், கையில் லாப்டாபுடன் புரபசரின் உதவியாளினி மிஸ்.யாழினி உள்ளே நுழைய ஹால் களை கட்டியது. சுடசுட நெய் விட்டு சட்டியிலிருந்து இறக்கிய கேசரி போல இருக்கும் யாழினியை பற்றி நாம் வர்ணிக்க ஆரம்பித்தால் இது தொடர்கதையாகி விடும் என்பதால் வழுக்கை தலை, கோல்ட் பிரேம் கண்ணாடியுடன் உற்சாகமாக வரும் நமது புரபசர் பக்கம் திரும்புவோம்.
புரபசர் மரபியல் துறையில் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் பழம் தின்னு கொட்டை போட்டவர். இரண்டு முறை நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கபட்டு, ரஷ்ய, அமெரிக்கர்களின் உருப்படாத கண்டுபிடிப்புகளால் கோட்டை விட்டவர். சரி, புரபசருக்கு இவ்ளோ அறிமுகம் போதும். புரபசரும், யாழினியும் தமது இருக்கைகளில் அமர்ந்து கொள்ள கூட்டம் நிமிர்ந்து உட்கார்ந்தது. யாழினி, தனது லாப்டாப்பை உயிர்ப்பித்து, விரல்கள் நோகாமல் அதில் பியோனோ வாசிக்க ஆரம்பித்தாள். குடுத்து வைத்த லாப்டாப்.
புரபசர் தொண்டையை கனைத்து கொண்டு பேச்சை ஆரம்பித்தார். டியர் பிரண்ட்ஸ்! என் அழைப்பை ஏற்று வந்தமைக்கு முதலில் நன்றி. நான் மரபியல் துறையில் ஒரு மாபெரும் புரட்சிக்கு வித்திட்டு இருக்கிறேன். அதை பற்றி விளக்க தான் இந்த கூட்டம். விளக்கமா சொல்றேன்.
நம்ம எல்லோருக்குமே தத்தம் குழந்தைகள் பெரிய டாக்டரா, இஞ்சினியரா, ஒரு கிரிகட் ஸ்டாரா வரனும்! என்ற கனவு இருக்கு இல்லையா? ஆனா, படிக்க வசதி வாய்ப்பு இருந்தும், ஒரு சில பேர் தான் அவங்க துறையில மிளிர முடியுது. இதுக்கு வெளி காரணிகள் பலது இருந்தாலும், ஒரு மரபியல் விஞ்ஞானியா நான் கண்டுபிடிச்சது அவங்க ஜீன்களின் அமைப்பு தான் மெயின் காரணம்.
இன்னும் விளக்கமா சொல்லனும்னா, ஒரு சிலர் கணக்குல புலியா இருப்பாங்க. அதுக்கு அவங்க மரபியல் அமைப்பே காரணம். இந்த ஜீன்களின் அமைப்பை நமது விருப்பத்துக்கேப்ப மாத்த முடிஞ்சா, அதாவது கணினி புரோகிராமிங்க் மாதிரி எல்லாம் ஒரு கட்டுகோப்பா நடக்கும்.
என்னோட ஆராய்ச்சிபடி, கருவில ஒரு உயிர் உருவானவுடன் சரியாக அறுபதாவது நாளில், 0.12 மில்லிமீட்டர் மட்டுமே இருக்கும் அந்த உயிரின் க்ரோமோசோம் கட்டமைப்பை மாத்தி அமைச்சா உங்க விருப்பத்துக்கு ஏத்த மாதிரி உங்க குழந்தை பெரிய டாக்டராவோ, விண்வெளி வீரனாகவோ, வர முடியும்! என சொல்லி நிறுத்தி ஒரு மடக்கு தண்ணீரை புரபசர் பருக,
இது சாத்யமா புரபசர்? இதை நீங்கள் எப்படி நிரூபிக்க முடியும்? ஒரு ரிப்போட்டர் இடைமறித்தார்.
முப்பது வருஷத்து ஆராய்ச்சி இது. இன்னிக்கி புகழ் பெற்று விளங்கும் சில பேர் என்னோட ஆராய்ச்சிக்கு உட்படுத்தபட்டவர்கள் தான், என சில பெயர்களை உரக்க சொல்ல, வரிசையாக புகழ் பெற்ற சில டாக்டர்கள், கம்யூட்டர் புலிகள், விளையாட்டு வீரர்கள் அணிவகுத்து வந்து புரபசரின் கூற்று உண்மை தான்! என கூறினர்.
இந்த ஆராய்ச்சியில் உள்ள தீமைகள் ஏதாவது சொல்ல முடியுமா புரபசர்?
இந்த ஆராய்ச்சியில் நன்மைகள் தான் அதிகம். ஒரு ஆரோக்கியமான, வலிமையான பாரதத்தை நாம் உருவாக்க முடியும். நம் குழந்தை என்னவாக வேண்டும்? என்பதை கருவிலேயே நாம் முடிவு செய்து விடலாம். தீமைகள்னு பாத்தா, இவங்க தம் துறை தவிர மத்த விஷயங்களில் கிட்டத்தட்ட பூஜ்யமா இருப்பாங்க. உதாரணமா சொல்லனும்னா, கம்யூட்டர் துறையை சேர்ந்த ஒருவர், ஆபிஸ்ல உக்காந்து பிளாக் எல்லாம் எழுத மாட்டார், ஏன்னா அவருக்கு மொக்கை போடவே தோணாது.
அதாவது, கிட்டதட்ட ஒரு ரோபோ மதிரி இருப்பாங்க!னு சொல்றீங்க இல்லையா புரபசர்?
இல்ல, ஏவி விட்ட ஏவுகணை மாதிரி இருப்பாங்க.என பெருமையுடன் சொன்ன அந்த மைக்ரோ வினாடி, யாழினியின் செல்பேசி, "பூம்பாவாய் ஆம்பல்! ஆம்பல்! புன்னகையோ மெளவல்! மெளவல்!" என்ற பழைய திரைபட பாடலை ரிங்க்டோனாக ஒலித்தது.
ஈஸிட்? ரியலி? ஐ கான்ட் பீலீவ் திஸ் நியூஸ்! என ஏற்கனவே பெரிதான தனது அழகிய கண்களை இன்னும் அதிகமாக விரித்து பல ரிப்போட்டர்களின் இதய துடிப்பை அதிகரிக்க செய்தாள் யாழினி.
என்ன விஷயம்? எனபது போல புரபசர் புருவத்தை தூக்க, உங்களுக்கு மரபியல் துறையில், இந்த மிகப் பெரிய ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு அறிவிச்சு இருக்காங்க! என யாழினி திருவாய் மலர, அந்த அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. சந்தோஷத்தாலும், ரிப்போட்டர்களின் வாழ்த்துக்களாலும் திக்குமுக்காடி போனார் புரபசர்.
சார், ஒன் மோர் குட் நியூஸ் பார் யூ! உங்க பொண்ணு ஒரு அழகான ஆண் குழந்தைக்கு அம்மாவாகி இருக்காங்க, இப்ப தான் ஹஸ்பிடலில் இருந்து கால் வந்தது என மறுபடி யாழினி இன்ப அதிர்ச்சி குடுக்க,
யாழ்! நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்! போதும், இன்னிக்கு இவ்ளோ சந்தோஷம் போதும். நான் உடனே என் மகளை பாக்க ஹாஸ்பிடல் கிளம்பறேன். நீ இந்த ரிப்போட்டர்ஸ்க்கு நம் ஆராய்ச்சி பற்றி தேவையான மேட்டரை குடுத்து பிரஸ் மீட்டை முடிச்சுடு. எனக்கு வரும் வாழ்த்துக்களை பதிவு செய்து, நன்றி தெரிவித்து விடு. பை டேக் கேர்! என சொல்லி விர்ரென புரபசர் பறந்தார்.
போடா போ! அங்க உன் பேர குழந்தை என்ற பெயரில் பிறந்து இருக்கும் ரோபோவை பாக்க போ! உன் ஆராய்ச்சிக்கு என் அக்கா குழந்தையை பலி வாங்கின இல்ல, உன் பேரனின் ஜீன் அமைப்பை உனக்கு தெரியாமல் மாத்தியாச்சு. 3 வருஷம் கழிச்சு அது உன்னை பாத்து தாத்தா!னு ஆசையா கூப்டாது. மாமா! பிஸ்கோத்துனு கேக்கும் பாரு.
இது தான் நான் உனக்கு குடுக்கும் தண்டனை! என மனதுக்குள் சிரித்துக் கொண்டே அழுதாள் யாழினி.
பி.கு: சர்வேசன் நடத்தும் நச்சுனு ஒரு கதை போட்டிக்கு கடைசி நாளான இன்று அவசரமாய் எழுதியது. வழக்கம் போல நீங்க ஷ்டாட் மிஜீக் போடுங்க.
Sunday, December 16, 2007
2007 பிளாகர் அவார்டுகள்
முதல் போட்டியாளர்:
இவர் வலைபூவை திறந்தாலே திருப்பதிக்குள்ள நுழைஞ்ச மாதிரி ஒரு எபக்ட் கிடைக்கும். திருப்பதி லட்டு பத்தி நம்மாழ்வார் என்ன சொல்றாரு? புளியோதரை பத்தி பெரியாழ்வார் என்ன சொல்றாரு?னு அ முதல் ஃ வரை சும்மா பிரிச்சு மேஞ்சுபுடுவாரு. :)
அட சே! நாமளும் தான் பதிவு எழுதறோமே?னு சில(பல)சமயம் வெக்கபட வெச்சுபுடுவாரு.

போட்டோவுல சும்மா ஹாலிவுட் ஹீரோ கணக்கா இருந்தாலும், அண்ணாச்சி தமிழ்ல சும்மா லெப்ட், ரைட்டுனு யூ டர்ன் போட்டு வருவாரு. அண்ணாச்சியை வெச்சு ஏதேனும் காமடி பண்ணலாம்னு நினைச்ச சங்கத்து சிங்கங்களுக்கு, வெங்கல கடையில் யானை புகுந்த கதையா நமது அண்ணன் அதிர்ச்சி வைத்தியம் குடுத்துட்டார் என்பது டாக் ஆஃப் தி தமிழ்மணம்.
எனவே இந்த வருடத்தின் பழம் நீயப்பா! அவார்டை போட்டியின்றி தட்டி செல்கிறார்.
இரண்டாவது போட்டியாளர்:
தில்லுமுள்ளு படத்தில் ஒரு ரோஜா மாலைக்காக சுவர் ஏறி குதிச்சு அம்மாவா நடிச்ச செளகார் ஜானகியை உங்களுக்கு நியாபகம் இருக்கா? நல்லது!
நல்லா எழுதி இருக்கீங்க! அல்லது சிறந்த பதிவு!னு நீங்க ஒரு கமண்ட் போட்டா உங்கள் மீது பாச மழை பொழிவார் இவர். போன் போட்டு சொன்னா நீங்க அனானியா இருந்தா கூடா உங்க பேர்ல தனி பதிவு போட்டு விடுவார்.
கைலாச யாத்ரை போற வழில பில்டர் காப்பி கேட்டு அந்த டிராவல் ஏஜண்டை ஓட ஓட விரட்டிய கதைய சொல்லவா? இல்லாட்டி, அமர்நாத் யாத்ரையில் குதிரை ஏறி இவங்க பாரம் தாங்காமல் அது குப்புற விழுந்த கதைய சொல்லவா?
சமயம் கிடைக்கும் போதெல்லாம் நான் தான் ரவுடி! நான் தான் ரவுடி!னு வடிவேல் சொல்ற மாதிரி நான் தான் தலைவி! நான் தான் தலைவி!னு சொல்லிப்பாங்க. ஆன்மிகம், தமிழ், பாரதி, சுதந்திர போராட்ட வரலாறுனு அவியல் மாதிரி கலந்து கட்டி அடித்தாலும் மவுஸ் வேலை செய்யலை! என் வீட்டு (ரங்கு வைக்கற) ரசத்துல புளி இல்லை!னு இவங்க போடற மொக்கை தான் மக்கள் மனசுல நிலைச்சு இருப்பதால் (மொக்கை) பதிவுச் சூறாவளி - 2007 என்ற அவார்டை இவர் போட்டியின்றி தட்டி செல்கிறார்.
அடுத்த போட்டியாளர்:
உங்கள் கையில் நயன் தாரா அல்லது கோபிகா படம் கிடைத்தால் என்ன செய்வீர்கள்? சபையில் சொல்ல கூச்சமாக இருக்கலாம். இவர் கையில் கிடைத்தால் "கை வண்ணம் இங்கு கண்டேன்! கால் வண்ணம் அங்கு கண்டேன்!" என நடுவில் மானே! தேனே போட்டு தேவதைகளை ஊர்வலம் வர செய்து விடுவார்.
இவரது மன நிலைக்கு ஏற்ப திரிஷா சிரிப்பார் அல்லது முறைப்பார். இவர் ஒரு போட்டியாளர். சரி அடுத்த ஆளை பார்ப்போம்.
சுட்ட பழம் வேணுமா? சுடாத பழம் வேணுமா?னு அவ்வைக்கு முருகன் கேட்ட மாதிரி இவர் சுட்ட பதிவு வேணுமா? சுடாத பதிவு வேணுமா?னு லெவல் காட்டுவார்.
இவர் போகாத ஹோட்டல் கிடையாது. இவருக்கு ட்ரீட் தந்து ஓட்டலில் மாவு ஆட்டாத பதிவரும் கிடையாது. இவரும் ஒரு போட்டியாளர்.
மூன்றாம் போட்டியாளரை பார்ப்போம்.
எல்லோரும் கவிதையோ கவிஜயோ தங்களது பதிவிலேயே போட்டு பதிவு எண்ணிக்கையை கூட்டுவர். ஆனா கவிதைக்கு தனி கடை வைத்து, தோணும் போதேல்லாம் கவிதைய போட்டு அது குப்பை தொட்டியோ, ரோஜா செடியோ எத பத்தி வேணாலும் பதிஞ்சு விடிவார். அவ்ளோ லேசுல புரியற மாதிரி இல்லாட்டியும், அங்க தான் நீங்க நிக்கறீங்க! அப்படினு எல்லோரும் பாராட்டுவாங்க, அது வேற விஷயம்.
எனவே இந்த மூனு போட்டியாளர்களில் கவிதைக்கு தனிகடை வைத்த தங்கம்! என்ற பட்டத்தை இவர் தட்டி செல்கிறார்.
இதைப் போல உங்களை கவர்ந்த பிளாக்கர்களுக்கு நீங்களும் அவார்டுகளை வாரி வழங்கலாமே! :)
Wednesday, December 05, 2007
உள்ளேன் மக்களே!
பேசாம, ஒரு மொக்கைய போட்டு அதை நாலு நாலு வரியா பிரிச்சு எழுதி கவிதை!னு லேபிள் குடுத்ரலாமா? இல்லாட்டி, சன்/விஜய்/ஜெயா டிவிகளில் வரும் மெகா சீரியல் பாடல்களை "எனக்கு பிடித்த பாடல்"னு ஒரு பதிவு போட்ரலாமா? இல்லாட்டி
"அ முதல் ஃ தானடா!
என் அக்கா பொண்ணு கிக்கு தானடா!" என்ற செந்தமிழ் பாடல் வரிகளை பதிவா போடலாமா?னு ஒரே குழப்பம்.
எனக்கு தான் மேட்டர் பஞ்சம்னு பாத்தா இந்த சாட்டிலைட் சானல்களுக்கும் இதே கதி தான் போலிருக்கு. எந்த டிவிய திருப்பினாலும் ஏதோ ஒரு க்ரூப் மேடையில் ஆடுகிறார்கள், அல்லது மைக்கை பிடித்து கொண்டு பாடுகிறார்கள். அதுக்கு நடுவரா ஒரு நாலு பேர் - மார்கட் போயே போன நடிகை, போனா போறதுனு ஒரு இளிச்சவாய டான்ஸ் மாஸ்டர்/பாடகர்/இசையமைப்பாளர் என அல்லோலபடுகிறது.
இதில் கலைஞர் டிவியில் வரும் நடன நிகழ்ச்சிக்கு நமீதா நடுவராய் வருவதால் எங்கள் வீட்டில் அந்த நிகழ்ச்சி நிரந்தரமாய் தடை செய்யப்பட்டு அதற்க்கு மாற்றாக பொதிகையில் வரும் வயலும் வாழ்வும் ஒளிபரப்ப படுகிறது. இதுக்கு நான் கார்ட்டூன் சானலே மேல்!னு சமரச உடன்பாடு செய்து கொண்டு விட்டேன்.
இடைப்பட்ட கேப்பில், பிறந்த நாள் எல்லாம் வந்து போனது. நேத்து நடந்த மாதிரி இருக்கு. போன வருடம் இதே நாளில் தான் சுடச்சுட கேசரி சாப்பிட போனேன். ஹிஹி, தங்கமணியையும் பார்த்தேன்.
இந்த குழந்தையையும் மறக்காமல், கைபுள்ளை, வல்லி சிம்ஹன், பிலாக்கேஸ்வரி, கீதா பாட்டி போன்றவர்கள் போனிலும், மெயிலிலும் வாழ்த்தினார்கள். மிகவும் சந்தோஷம். தலப்பிறந்த நாளுக்கு எங்க அண்ணன் பெயரை சொல்லி வெயிட்டா அவருக்கு வேட்டு வைங்க மன்னி!னு பொற்கொடி வேலை மெனக்கெட்டு என் தங்கமணிக்கு மெயிலில் அட்வைஸ் வேற. என்னத்த சொல்ல?
இப்போதைக்கு இவ்ளோ மொக்கை போதும்.
Friday, November 16, 2007
ஓம் ஷாந்தி ஓம்!
சரி, படத்தின் பெயரை பாத்தால் எதோ தியானம், மன அமைதி, உம்மாச்சி வர பக்தி படம்னு பாத்தா கதை என்னவோ நம் தமிழில் ஒரு டஜன் படங்களுக்கு மேலாக அரைத்த மறுஜென்மம் மாவு தான் என்றாலும், இவங்க கொஞ்சம் பிரஷ்ஷா தண்ணி விட்டு அரச்சு இருக்காங்க.
பொதுவா ஹாரூக் படம் எல்லாம் எனக்கு போகோ சானல் பாக்கற மாதிரி காமடியா இருக்கும். இந்த படமும் அதே மாதிரி தான். எழுபதுகளில் வாழ்ந்த ஒரு ஜூனியர் ஆர்டிஸ்டாக ஷாரூக் வருகிறார். பெரிய காலருடன் கலர் கலர் சட்டை, பெல்பாட்டம் பெண்ட் அணிந்து தன் நண்பனுடன் அவர் அடிக்கும் லூட்டி சிரிப்பை வரவழைக்கிறது.

பிலிம் பேர் அவார்டுக்கு டகால்டி பண்ணி ஹாலுக்கு உள்ளே நுழையும் காட்சி டாப் என்றால் தன் உள்ளங்கவர் நடிகையை கவர தமிழ் ஹீரோ மாதிரி சண்டையிடும் ஹூட்டிங்க் காட்சி விவிசி.

ஹீரோயின் புதுமுகம் தீபிகா படுகோனே - பிரபல பாட்மிட்டன் சாம்பியன் ப்ரகாஷ் படுகோனேவின் மகள். அம்மணிக்கு ஒளிமயமான எதிர்காலம் காத்து இருக்கு. ஷாரூக் படத்தில் ஹீரோயின்(கள்) எல்லாம் எம்டிஆர் ஆவக்காய் ஊறுகாய் கணக்கா சும்மா தொட்டு கொள்ள வந்து போவார்கள். இதில் தலை கீழ். அம்மணிக்கு நடிப்பதற்க்கு செம வாய்ப்பு. அழகாய் ஸ்கோர் பண்ணி இருக்கிறார்.
வர வர கலி முத்தி விட்டது. பின்ன என்ன, சல்மான் தான் சட்டை இல்லாமல் பாடல் காட்சியில் வலம் வருவார் என்றால் இந்த ஷாரூக் கூட சட்டை இல்லாமல் ஐட்டம் சாங்க் ஆடுகிறார்.
காமிரா நம்ம ஊர் மணிகண்டன். படம் முழுக்க கண்ணை உறுத்தாத வகையில் காமிரா கோணங்கள். கலை சாபு சிரில்.படத்தில் வரும் பிரமாண்ட ஸ்டுடியோ செட்கள் சும்மா அதிருது.

ரெண்டு பாட்டு முணுமுணுக்க வைக்குது.
ஒரு பாட்டுக்கு ஹிந்தி படவுலகே திரண்டு வந்து ஷாரூக்கோடு ஆட்டம் போடுகிறது. பின்னணி இசையில் கவனம் செலுத்திய மீஜிக் டைரக்டர் பாட்டுகளை சும்மா காத்தாட விட்டு விட்டார்.
ரெண்டாம் பாதி கொஞ்சம் ஜவ்வா இழுக்குது. முடிவு எல்லாம் நாம் அதுவும் தமிழர்கள் ஈசியா யூகிக்க கூடியது தான். நெஞ்சம் மறப்பதில்லை!னு ஆரம்பிச்சு, நானே வருவேன்! வரைக்கும் எத்தனை தமிழ் படம் பாத்து இருப்போம்.
சும்மா உங்க பிரண்ட்ஸோடு ஜாலியா போயிட்டு வாங்க. படத்துல காத்து இல்லை,கருத்து இல்லைனு எல்லாம் குத்தம் சொல்ல கூடாது. மேசேஜ் சொல்றத்துக்கு இந்த படம் என்ன செல்போனா?
ஷாரூக் சொந்த காசை போட்டு படம் எடுத்ருக்கார்.
ஏற்கனவே படம் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டாம். கல்லா களை கட்டியாச்சாம்.
Thursday, November 15, 2007
வேல்

முருக வழிபாட்டில் வேலுக்கு முக்யமான ஒரு இடம் உண்டு. ஏனேனில் வேலானது சக்தியின் மறுப்ரதியாகவே கருதபடுகிறது. முருகனடியார்கள் வேலை தம் இல்லத்தில் வைத்து வணங்குவது வழக்கம். திருபரங்குன்றத்தில் கூட வேலுக்கு தான் சகல விதமான அபிஷேகங்கள் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.(தகவல் தவறாயிருப்பின், வலிக்காமல் குட்டி திருத்தவும்).
கந்த சஷ்டி கவசத்தில் முருகனை பாதாதிகேசம் அழகாக வர்ணித்த பால தேவராயர், முருகன் கை வேலை அடியவர் தம் அனைத்து அவயங்களையும் காக்க வருமாறு அழைக்கிறார். பக்தர்தம் துன்பத்தை போக்க, எப்படி விஷ்ணுவின் சுதர்சன சக்ரம் விரைந்து வருமோ அதை போல முருகன் வருமுன் அவனது கைவேல் விரைந்து வந்து விடுமாம்.
பொதுவாக தமிழ் பேசும் இடங்களில் எல்லாம் முருகன் வியாபித்து இருக்கிறான். அது மலேசியாவாகட்டும், சிங்கப்பூர், லன்டன், அமெரிக்கா என முருகனடியார்கள் அவனது திருபுகழை பாடி பரவசமடைகிறார்கள். இதனால் தானோ என்னவோ அம்பிகையை பாடி வந்த ஆதிசங்கரர் திருசெந்தூரில் குடி கொண்டிருக்கும் முருகனை சுப்ரமண்ய புஜங்கம் பாடி வழிபட்டார்.
சஷ்டியில் (விரதம்) இருந்தால் அகப்பையில் வரும் என்பதை தான் நம் மக்கள் சட்டியில் இருந்தால் ஆப்பையில்(கேசரி?) வரும் என மாற்றி விட்டனர்.

இன்று கந்த சஷ்டி. திருசெந்தூரில் மக்கள் கூட்டம் கடல் அலையென கூடி நிற்கும். அகங்காரம் அழித்து, பகைவருக்கும் அருள் புரிந்து நிற்பான் கந்தன்.
சரவண பவ! என வள்ளி கணவனை காவடி சிந்து பாடி, கூவி அழைத்தால் கண்டிப்பாக குரல் குடுப்பான்.

பி.கு: தலைப்பை பார்த்து தலைதெறிக்க வந்த பக்த கோடிகளுக்காக பழனி பஞ்சாமிர்தம். :)
சென்ற வருட பதிவு இங்கே
Tuesday, November 06, 2007
தல தீபாவளி

லூசா இருக்கும் டிராயரை அடிக்கடி தூக்கி விட்டு கொண்டு, காமராஜர் மாதிரி முழங்கை வரைக்கும் சட்டை போட்டு கொண்டு, ஓடி ஓடி பிஜிலி வெடி போட்டு, பொதிகை டிவில ரஜினி, கமல் புது பட டிரெயிலர் பார்த்து பெருமூச்சு விட்டு, அம்மா செஞ்சு வெச்ச கேசரில ஆரம்பிச்சு, பக்கத்து வீட்டு ஆன்டி குடுத்த கல்கோனா (மைசூர் பாகுனு அவங்க சொல்லிக்குவாங்க) வரை உள்ளே தள்ளி, அடுத்த நாளே கார்க் புடுங்கி தீபாவளி கொண்டாடிய நாட்கள் போய், பத்து நாட்களுக்கு முன்னாடி வரைக்கும் லீவுக்காக மேனேஜர் கேபினுக்கு காவடி எடுத்து, டிரேயின் எல்லாம் கோட்டை விட்டு, பாடவதி பஸ்ஸில் பயணம் செய்து ஒரு வழியாக ஊருக்கு போய், பாத்து பாத்து வாங்கிய புடவையை அம்மாக்கு குடுத்து அவர்கள் முகத்தில் மின்னல் கீற்றாய் ஒளிர்ந்து மறையும் புன்னகையை பாத்து சந்தோஷப்பட்டு, தீபாவளி கொண்டாடிய காலமும் கடந்து போய்,புடவை எல்லாம் இந்த பெங்களூரில் ஒன்னும் சரியா அமையாது! எல்லாம் சென்னைல பாத்து, கேட்டு உனக்கு எடுத்து தரேன், இல்லாட்டி ராசுகுட்டி மாதிரி ஒரு புடவை நாமளே ஆர்டர் குடுத்ருவோம் என்ன?னு தங்கமணிக்கு மெய்யாலுமே அல்வா குடுத்து தல தீபாவளி கொண்டாட கிளம்பியாச்சு.
தல தீபாவளினாலே, எல்லோரும் அடுத்து கேட்கும் கேள்வி, அப்பறம், மாமனாருக்கு எவ்ளோ வேட்டு வைக்க போற? செயினா? மோதிரமா?
ஆஹா, இதேல்லாம் நம்ம கீதா பாட்டி காலத்துல வேணா நடந்ததா இருக்கலாம். இப்ப எந்த ரங்குவாவது வாய் திறந்து கேட்க முடியுமா? இல்ல, நினைக்க தான் முடியுமா? பின்னி பிரிய கழட்டிடுவாங்க இல்ல? :)
சென்னைல மழை கொட்டு கொட்டுனு கொட்டுது. இதுல எங்க போய் வெடி வெடிக்க? அப்படியே வெடிச்சாலும், எல்லாம் புஸ்ஸுனு தான் போக போகுது. அதனால பேசாம, மாமியார் செஞ்ச மிகசரோட சோபாவுல செட்டில் ஆயிட்டோம்னா நமீதாவோட சேர்ந்து நாமளும் தீபாவளி கொண்டாடிடலாம்.
என்னை போலவே தல தீபாவளி கொண்டாடும் நமது நண்பர்களான கைப்புள்ள, 'பிரியமான நேரம்' ப்ரியா, பொற்கொடி, பத்ம ப்ரியா, மணிப்ரகாஷ் ஆகிய எல்லோருக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள். அடுத்த வருஷம் தல தீபாவளி கொண்டாட ரெடியாக இருக்கும் நண்பர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள். :)
பி.கு: என்னடா இந்த பதிவுக்கு அஜித் படம் போட்டு இருக்கே?னு நீங்க கேக்கலாம். மறுபடி ஒரு தடவை தலைப்பை வாசித்து பார்க்கவும்.
Friday, November 02, 2007
விளம்பரங்கள் - II
ஒரு விளம்பரம் வெற்றியடைய அடிப்படையாக சில விஷயங்கள் தேவை.
1) மக்கள் வாழ்வோடு தொடர்புடைய நிகழ்வுகளை சிம்பிளாக சொல்லும் விதம். எ.கா: குழந்தைகள் உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை அழகாக தங்கள் வங்கிக்கு பயன்படுத்தி இருப்பார்கள் பாங்க் ஆப் இந்தியா.
2) எளிமையான, நாம் அன்றாடம் புழங்கும் வார்த்தைகள், வரிகள், பாடல்கள். புது வீடு! புது மனைவி! கலக்கற சந்துரு! - ஏஷியன் பெயின்ட்ஸ்.
3) விளம்பர படத்தில் நடிக்க தேர்ந்தெடுக்கப்படும் மாடல்கள் நமது பக்கத்து, எதிர் வீட்டு தெரிந்த முகங்கள் போல இருப்பது பிளஸ் பாயிண்ட். பத்தே மூவுல செக் மேட் என பிஸ்து காட்டுவாரே அந்த ஏர்டெல் தாத்தா மாதிரி.
இது மூணும் சரியாக இருந்து விட்டால் அந்த விளம்பரம் ஹிட் என நான் அடித்து கூறுவேன்.
வளவள டயலாக்ஸ், சொல்ல வந்த விஷயத்தை தலையை சுத்தி மூக்கை தொடும் பாணி, முகம் சுளிக்க வைக்கும் விதமாய் படமாக்கிய விதம் என பல விஷயங்கள் ஒரு நல்ல பிராண்டை கூட மக்கள் ஏறெடுத்து பார்க்காத நிலைக்கு தள்ளி விடும்.
நான் சொன்ன அடிப்படை விஷயங்கள் தவிர ஒவ்வோரு பொருளை மார்கட் பண்ண ஒரு தனி டெக்னிக் கையாள வேண்டி இருக்கும்.
உதாரணமாக, "வாஷிங்க் பவுடர் நிர்மா! பாலை போல வெண்மை - நிர்மாவாலே வருமே!" என பாட்டு பாடி, நிர்மாவின் சிறப்பை சொல்லுவது ஒரு விதம் என்றால் மஞ்ச கட்டியை வாங்கினா மஞ்ச சட்டை, நீல கட்டியை வாங்கினால் வெள்ளை சட்டை என கம்பேரிசன் பண்ணி தனது மார்கட் எதிரிக்கு ஆப்பு வைப்பது ஒரு வகை.
ஆடை வகைகளுக்கு என்றுமே ஒரு தனி மார்கட் உண்டு. பொங்கலுக்கு ஆரம்பித்தால் கிறிஸ்மஸ் வரை புத்தாடை வாங்காத ஆள் தான் யாரு? அதுவும் புடவை என்றால் கேட்கவே வேணாம்.
எனவே ஜவுளி கடைகள் போட்டி போட்டு கொண்டு விளம்பர ஏஜன்சிகளை அணுகி ஒரு படம் எடுத்து குடுங்க எஜமான்! என கெஞ்சுகின்றன. இதில் டாப் டக்கர் என சொன்னால் சென்னை சில்க்ஸ் தான்!
"மத்தாப்பு சுட்டு சுட்டு போட தான் வேணும்" என ரீமேக் சாங்க் பாடி, சென்னை சில்க்ஸில் தீபாவளி! என ஒரு தீபாவளியை நம் கண் முன் கொண்டு வந்து விடுகிறார்கள். முக்யமாக, இவர்கள் தேர்ந்தெடுக்கும் மாடல்கள் இருக்கே! ஆஹா! சுப்பரோ சூப்பர்!
இப்போழுது ஸ்ரீதேவி சில்க்ஸ் - கோவை ஒரு விளம்பரம் காட்டுகிறார்கள்.
ஏதோ ஒரு பழைய பாடலை நினைவுபடுத்தும் வகையில் "ஆசை அதற்க்கும் மேலே!" என ஒரு மாடல் தன் தோழியரோடு ஆடுவது அடடா! கண் கொள்ளா காட்சி. அந்த மாடல் நடிகை பத்மப்ரியா தான்! என என் தங்கமணி அடித்து(தரையில தான்) கூற, நான் இல்லை என மறுக்க, இப்படியாக இன்னும் அந்த விளம்பரம் சென்சார் இல்லாமல் எங்கள் வீட்டில் ஓடி கொண்டிருக்கிறது. (இனி என்ன ஆகுமோ?)
சரவணா ஸ்டோர்ஸ்காரர்கள் சினேகாவை தங்கள் விளம்பரங்களுக்கு வருட கான்டிராக்ட் போட்டுவிடுவார்கள் போலும். ஆனால் தீடிர்னு "எல்லோர் கண்களும் எந்தன் மேலே"னு அழகான ஒரு அமீர் கல்யாணி ராகத்தில் அமைந்த ஜிங்கிளுக்கு ஷ்ரேயா ஆடி வருகிறார்.
சரி, டிராக் மாறி விட்டேன்.
இப்போ விளம்பர ஏஜன்சிகளின் லேட்டஸ்ட் டிரண்ட் குழந்தைகளை முன்னிலைபடுத்தி விளம்பரங்களை அமைப்பது.
a) மூணு மாசம் முழுகாம இருக்கேன்!னு தன் கணவனுக்கு ப்ரூ காப்பி குடுத்து புரிய வைக்கிறாள் அவரது தங்கமணி.
b) ஆரோக்யம்னா அது கோல்ட் வின்னர் தான்!னு சமையலே தெரியாத ஒரு குழந்தை அம்மாக்களுக்கு அறிவுறுத்துகிறது.
c) கறை நல்லதாக்கும்!னு ஒரு பாசமலர் அண்ணன் -தங்கை குழந்தைகள் சொல்கின்றன.
d) தாத்தா குடுத்த உண்டியலை, பத்ரமா பாங்க் ஆப் இந்தியாவின் லாக்கரில் வைக்கிறான் அந்த பொடியன்.
e) நூடுல்ஸ் எங்கே?னு வீட்டையே அட்டகாசம் செய்கிறான் ஹார்லிக்ஸ் பொடியன்.
அடிப்படையில் லாஜிக் இல்லை என்றாலும், நம் மனதில் இத்தகைய விளம்பரங்கள் ஒரு மாஜிக் செய்து விடுகின்றன, இல்லையா?
விளம்பரங்கள் காலத்துக்கேற்ப மாறிக்கொண்டே வரனும். இல்லாவிட்டால் மக்களுக்கு போரடித்து விடும்.
அமுல் - டேஸ்ட் ஆஃப் இந்தியா சிறந்த உதாரணம். சென்னையில் பனகல் பார்க், மவுண்ட் ரோடு என நெரிசல் மிகுந்த சிக்னல்களில் பில் போர்டுகள் வைத்து இருப்பார்கள். வாரம் ஒரு முறை, அந்த வாரத்தில் நடந்த ஏதேனும் முக்ய நிகழ்வுகளை ஹைலைட் பண்ணியிருப்பார்கள். கவனித்ததுண்டா?
கற்பனை வளமும், கிரியேட்டிவா திங்க் பண்ண தெரிந்து இருந்தாலும், மக்களின் மனசை பல்ஸ் பிடித்து பார்க்க தெரிந்து இருந்தால், எல்லாவற்றுக்கும் மேலாக நீங்கள் செய்யும் விஷயத்தை ரசித்து, அனுபவித்து செய்ய கூடிய மனபான்மை இருந்தால், விளம்பர துறை உங்களுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருக்கிறது.
வாய்ப்பு கிடைத்தால், கோபிகாவுடனோ, யானா குப்தாவுடனோ மாடலாக நடிக்க நான் கூட தயாராக தான் உள்ளேன். ஒரு பயலும் கூப்ட மாட்டேங்கறான். மீசையை எடுத்து, கோட் சூட் போட்டா நானும் சஞ்சய் ராமசாமி தான்!னு சொன்னா தங்கமணி வாயை மூடிக் கொண்டு சிரிக்கற நிலைமை தான் உள்ளது. ஹும்! ஆசை இருக்கு தாசில் பண்ண! அதிர்ஷடம் இருக்கு பிளாக் எழுத! :)
நாகை சிவா வீட்டுக்கு போய் பல விளம்பரங்களை கண்டு ரசியுங்களேன்.
Monday, October 29, 2007
சும்மா தட்டி பாருங்க!
http://www.google.com/transliterate/indic/tamil
அப்புறம் என்ன காப்பி-பேஸ்ட் டெக்னாலஜி பயன்படுத்தி பதிவுகளை(மொக்கைகளைனு கீதா பாட்டி படிக்கறாங்க பாருங்க) போட்டு தள்ளுங்க.
இதுல என்ன விஷேசம்னா உங்க ஆபிஸ்ல இருக்கும் சப்பாத்தி, ஆந்திர கொங்க்ரா, கன்னட மற்றும் கேரள குத்து விளக்குகளுக்கு அவங்க அவங்க மொழில மெசேஜ் (எவன்டா அது மசாஜ்னு படிக்கறது?) பண்ணலாம். :)
அந்த லிங்குல தமிழுக்கு பதிலா அந்தந்த மொழி பெயரை தட்டச்சினா அதற்க்குரிய லிங்க் வந்து சேரும். உதாரணத்துக்கு, இப்ப நீங்க திருச்சூர் விளக்குக்கு குட் மார்னிங்க் ஜொள்ள நினைச்சா இது தான் லிங்கு:
http://www.google.com/transliterate/indic/malayalam
மேலே சொன்ன பாராவுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது, சும்மா ஒரு உதாரணத்துக்கு, ஹிஹி... (இந்த டிஸ்கி யாருக்கு?னு நான் சொல்லவும் வேணுமா?) :)
எப்படி? கலக்கிட்டார் இல்ல கூகிள் ஆண்டவர். :)
இனிமே தமிழ்தொண்டு செய்ய கலப்பை, கோடாலினு தேடிட்டு இருக்க வேணாம். ஆனா உங்க வீட்டுல நெட் கனக்ஷன் வேணுமே, சரி, விடுங்க சில பேர் மொக்கை போட அவுட் சோர்ஸிங்க் பண்றாங்க, பக்கத்து வீடு எல்லாம் போறாங்க.
.... Type any Hindi/Malayalam/Kannada/Tamil language word in English (same way as we pronounce it) and press "SPACE bar"...it gets translated to that regional language. That too, it is very accurate !!!!!
Friday, October 19, 2007
நவராத்திரி ஸ்பெஷல்!
சுண்டல் எங்கே? சக்கர பொங்கல் எங்கே?னு எல்லாம் கேக்கபடாது. பக்கத்து வீட்டுல வாங்கி சாப்பிட தான் எனக்கு தெரியும். :)
இந்த ஒன்பது என்ற எண்ணுக்கு தான் எத்தனை சிறப்பு!
1) நவ கிரகங்கள் ஒன்பது.
2) நவ ரத்னங்கள் ஒன்பது
3) ஜோதிஷத்தில் நவாம்சம் என்று சொல்வர்கள்.
4) சக்தி உபாசனையில் ஷ்ரி சக்ரத்துக்கு நவாபர்ண பூஜை என்று ஒன்று உண்டு.
5) நவமி திதியில் தானே ராமர் மானிடராக ஜனித்தார்.
6) ஒன்பது ஒளஷதங்களை கொண்டு தான் நவபாஷணம் என்ற அரிய மருந்து தயாரிக்கப் படுகிறது.
7) நவ ரசங்கள் - கோபம், சிருங்காரம், ஹாஸ்யம் என உணர்வுகள் ஒன்பது விதமானதே!
8) பூவுலகில் எம் பெருமாளுக்கு திருப்பதிகள் ஒன்பது.( நவ திருப்பதி)
9) நவராத்திரி - தேவி கொலுவிருந்து ஆட்சி செய்யும் திரு நாட்கள்.
இன்று துர்க்காஷ்டமி. சக்தி சீற்றம் கொண்டு மகிஷனை சம்காரம் செய்த நாள். கருணையே வடிவம் கொண்ட அவளா இவள்? என்று உலகே அதிசயித்த நாள்.
எனக்கு சின்ன குழந்தையிலிருந்தே பாட்டியிடம் கதை கேட்கும் போது அஷ்டபுஜங்களில், சகல விதமான ஆயுதஙளுடனும் சிங்க வாகனத்தில் புயலென நேரில் வருவதை போல உணர்வேன்.
மேலும் சாந்தமான அம்மனை விட, இந்த துர்க்கா, காளி, சண்டி, அபராஜிதா தேவி போன்ற உக்ர தேவிகள் தான் என்னை மிகவும் கவர்ந்தனர்.
சக்தி, இந்த உலகத்துக்கே அவள் தான் ஆதாரம். அந்த சிவனும் இயங்குவதே இந்த சக்தியால் தானே!
துர்க்கை, லக்ஷ்மி, சரஸ்வதி என நாம் அந்த ஆதார சக்தியை பிரித்து அவர்களுக்கு ஒரு உருவமும் குடுத்து வழிபடுகிறோம். ஆனால் இம் மூன்று சக்திகளும் நம்முடனே உள்ளது.
துர்கை (இச்சா சக்தி) - மன உறுதி.
லக்ஷ்மி (க்ரியா சக்தி) - மனம் லயித்த செயல்பாடு.
சரஸ்வதி (க்னான சக்தி) - தெளிந்த ஆறிவு.
நம் உடம்பை கிரியா சக்தியும், புத்தியை இச்சா சக்தியும், ஆத்மாவை க்னான சக்தியும் ஆள்கிறது.
தெளிந்த அறிவுடன் புத்தி சரியாக கட்டளை இட்டால் மனம் லயிகிறது. உடம்பு சொன்னபடி கேட்கிறது. ஒரு வேலையில் உடல், மனம், புத்தி எல்லாம் மன உறுதியுடன் ஈடுபடுகிறது.
நல்ல பழக்கமும், புலன்களை நம் கட்டுக்குள் வைப்பதன் மூலம் லக்ஷ்மி வந்தடைகிறாள். மனதை கட்டுபடுத்துவதன் மூலம் துர்க்கை நம்மை வந்தடைகிறாள்.
உண்மையான, குளிர்ந்த சொற்களை பேசுவதன் மூலம் சரஸ்வதி வருகிறாள்.
இந்த துர்க்காஷ்டமி அன்று தேவியை பார்த்தால் அடுத்த நாள் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற நம்பிக்கை உண்டு. ஏனெனில் துர்க்கை உக்ரமாக தீப்பறக்கும் கண்களுடன், "இனி உனக்கு மன்னிப்பில்லை! தைரியம் இருந்தால் வாடா!"னு அசுரனை அறைகூவல் விடுத்து சம்காரம் முடித்து, குருதி அபிஷேகத்துடன் கோபம் தணியாமல் நின்ற கோலம் அது.

ஆனால் மறுநாள், கருணையே வடிவாக, கையில் மாணிக்க வீணையேந்தி, மதுர மொழிகள் பேசி, அபய முத்திரை காட்டி, தம்மை நாடி வருபவர்களுக்கு அவரவர் தகுதிக்கு ஏற்ப கலைகளை வாரி வழங்கும் சரஸ்வதியாக அருள் பாலிக்கிறாள்.

Pic courtasy: www.starsai.com
போஜ ராஜன் தீவிர லக்ஷ்மி உபாசகன். எனவே, அவனது மெய்யான பக்திக்கு கட்டுபட்டு, அஷ்ட லக்ஷிமிகளும் அவனது தேசத்தில் வாசம் செய்தனர்.

ஒரு நாள், மாஹாலக்ஷ்மி அவன் முன் தோன்றி, "போஜ ராஜனே! உன் நாட்டிலேயே பல காலமாக நாங்கள் தங்கி இருந்தால், மற்ற இடங்களுக்கு நாங்கள் எப்போழுது செல்வது? என முறையிட்டாள்.
போஜனும், சரி அம்மா! ஒரெ ஒரு லக்ஷ்மியை தவிர மீதி எல்லோரும் விடை பெறுங்கள்" என கூற, மஹாலக்ஷ்மியும் சம்மதிதாள்.
போஜன் கேட்டது தைரிய லக்ஷ்மியை தான்!
தைரிய லக்ஷ்மி அவனுடன் இருக்க, மற்ற லக்ஷ்மிகளும் வேறு வழியில்லாமல் மறுபடி அவனிடமே வந்தடைந்தனர்.
இந்த நவராத்திரி - விஜயதசமி நன் நாளில் நம் எல்லோர் மனதிலும் அந்த தைரிய லக்ஷ்மி குடி கொள்ளட்டும். மற்ற எல்லா லக்ஷிமிகளும் தன்னாலே நம்மை வந்தடைவார்களாக!
Monday, October 15, 2007
விளம்பரங்கள்
ஆரம்ப காலங்களில் "இந்தியா, மலேசியா, சிங்கபூர் போன்ற நாடுகளில் மக்கள் தேய்க்கும் ஒரே பற்பொடி கோபால் பற்பொடி" போன்ற விளம்பரங்களை ஆல் இந்தியா ரேடியோ திருனெல்வேலி வானோலியில் கேட்டு அடடா! அந்த ஊர்ல மக்கள் பல்லு தேய்கறதுக்கு காரணம் நம்ம கோபால் பல்பொடி தான்!னு புல்லரித்து போயிருக்கிறேன்.
டிவி பொட்டி வந்தபிறகு விளம்பரங்கள் இன்னும் மெருகேறின.
"தீபாவளிக்கு ஜவுளி வாங்க கைராசியான ஸ்தாபனம் போத்தீஸ்!" என்று பஸ்டாண்ட் முனையில் கூவி விறபது போல ரேடியோவில் சொன்ன நிலை மாறி, "சாமுத்ரிகா பட்டு! சர்வ லட்சணமான பட்டு!"னு மீரா ஜாஸ்மினுக்கு பட்டு புடவை கட்டி தாலி கட்டி கல்யாணம் எல்லாம் பண்ணி வைத்து என் வயிதெறிச்சலை கொட்டி கொண்டனர். புடவையை சொல்றாங்களா? மீரா ஜாஸ்மினை சொல்றாங்களா?னு எனக்கு அடிக்கடி சந்தேகம் வேற வந்து விடும்.
காலத்துக்கேற்ப விளம்பரங்களும் வளர்ச்சியடைந்து நவீன டெக்னாலஜி எல்லாம் பயன்படுத்தி 10- 20 செகண்டுகளில் ஒரு குட்டி கதையே சொல்லி விடுகிறார்கள்.
சிட்டுகுருவி லேகியம் விற்க தெருவோரத்தில் கூவுவது போல, கூவிய நிலை மாறி, ஸ்கிரிப்ட் ரெடி பண்ணி, ஷூட்டிங்க ஸ்பாட் எல்லாம் பாத்து வைத்து, டெக்னிகல் க்ரூ முடிவு செய்து, மாடல்களை தேர்வு செய்து, காப்பி எடிட்டர்களை புழிய புழிய வேலை வாங்கி, எத்திராஜ் போகும் மயில்களை ஜிங்கிள் எல்லாம் பாட வைத்து, மாடல்களை அழகா மிங்கிள் பண்ண வைத்து அர்ஜுன் அம்மா யாரு?னு நம்மை கதற வைத்து விடுகிறார்கள்.
பன்னாட்டு கமபெனிகள் இந்திய சந்தைக்குள் வந்த பிறகு விளம்பர துறைக்கு மவுசு கூடிவிட்டது. லக்ஸ் தேய்ச்சு குளிங்க!னு பாத் டப்புக்குள் ஷாரூகான் இறங்குறார், காட்பரீஸ் சாக்லேட்டுக்கு அமிதாப் ஆலாய் பறக்கிறார், சூர்யா சன் ஃபீஸ்ட் பிஸ்கோத்து விக்கறார், ஜெயசந்திரனில் ஆடை திருவிழா!னு கோபிகா குட்டி குதிக்கறா!
எல்லாம் டப்பு படுத்தற பாடுங்க.
"திரைப்படத்தின் இப்பகுதியை உங்களுக்கு வழங்குபவர்கள்...." என ஆரம்பித்தாலே நம் கைகள் தானாக ரிமோட் பட்டனை அழுத்தும். இல்லையா?
ஆனால் ஒரு சில விளம்பரங்கள் மட்டும் நம் கவனத்தை ஈர்த்து விடும். பத்து அல்லது இருபது செகண்டுகள் நம்மை தன்பால் ஈர்க்க என்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்கு? என்று நினைத்து பாருங்கள். இன்று பல சாடிலைட் சானல்கள் ஓடிகொண்டிருப்பது இந்த மண்டகபடிதாரர்கள் தயவில் தான்.
போதிய விளம்பரதாரர் இல்லையேனில் அவசர அவசரமாக கோலங்கள்-அபிக்கு குண்டடி படும். நடன போட்டியில் சொம்பு அழுது கொண்டு பஞ்ச்(சர்) டயலாக் விடுவார். எல்லாம் செந்தில் சொன்ன மாதிரி "ஒரு விளம்பரதேங்க்"
சரி, ஒரு விளம்பரம் வெற்றியடைய ஏதேனும் வெற்றி பார்முலா உண்டா? என கேட்டால் நிச்சயம் உண்டு என்பேன்.
எப்படி தாலி, குங்குமம், வேப்பிலை, குரங்கு, நாய், பாம்பு, யானை, கிராபிக்ஸ்,தீமிதி, நாட்டாமை, (நிஜமான) சொம்பு எல்லாம் ராம நாராயணன் படத்தின் வெற்றி பார்முலாவோ அதே போல விளம்பரங்களுக்கும் சில நுணுக்கங்கள் உண்டு. அவை என்ன? என அடுத்த பதிவில் பார்ப்போமா?
(அப்ப தானே என் அடுத்த பதிவின் ஹிட் ஏறும்? - இது என்னோட பார்முலா, ஹிஹி)
பி.கு: நேரமும், ஆர்வமும் இருந்தால், நீங்களும் இந்த விளம்பர விளையாட்டில் கலந்து கொள்ளுங்களேன்.
Monday, October 08, 2007
2007 - அல்வா அவார்டுகள்
போட்டியாளர்#1: மாறன் சகோதரர்கள்
கை வீசமா கை வீசு!
டெல்லிக்கு போகலாம் கை வீசு!
மந்திரியாகலாம் கை வீசு!னு ஆசை ஆசையாய் பாலூட்டி, சீராட்டி வளர்த்த தாத்தாவுக்கே சும்மா அரை கிலோ அல்வா கிண்டி குடுத்த பெருமை இந்த சகோதரர்களையே சாரும். கிளிக்கு றெக்கை முளைச்சு பறந்து போயிடுத்து!
போட்டியாளர்#2: முஷரப் - தி பாஸ்
நானே ராஜா!
நானே மந்திரி!
எனக்கொரு கவலையில்ல! என உற்சாகமாக பாடிகொண்டு ஒட்டுமொத்த பாகிஸ்தானுக்கும் அல்வா கொடுத்து கொண்டிருக்கும் முஷரப் இந்த போட்டியில் கலந்து கொள்ளா தகுதியானவரே!
நவாஸ் ஷெரீப் வந்திறங்கிய பிளைட்டுலேயே அவரை திரும்ப ஏத்தி, கராச்சிக்கு போகுது வண்டி!னு சொல்லிட்டு அரேபியாவுக்கு ஒட்டகம் மேய்க்க அனுப்பி, "இந்தா வெச்சுக்க அல்வா!"னு கிண்டி கொடுத்த முஷரப்பின் திறமையை பார்த்து பெரிய அண்ணாச்சி அமெரிக்கவே இன்னும் திறந்த வாயை மூடலையாம்!
போட்டியாளர்#3: தேவ கவுடா & குமாரசாமி
அப்பாவும் பிள்ளையும் கூட்டணி அமைத்து இருபது மாதங்களுக்கு முன்னால் காங்கிரசுக்கு சூப்பரா அல்வா குடுத்து விட்டு, பி.ஜேபியிடம் "உனக்கொரு வாய்! எனக்கொரு வாய்!னு ஆட்சியை பங்கு போட்டுகலாம், என்ன?னு சொல்லிட்டு, இப்ப என்னடானா பங்கா? எந்த பங்கு? எந்த ஆட்சி? "காக்கா தூக்கிண்டு போச்சு!"னு இந்த வருடத்தின் மெகா அல்வா குடுத்த தேவ கவுடா மற்றும் அவரது தவமாய் தவமிருந்து பெத்த பிள்ளை குமாரசாமி ரெண்டு பெரும் இந்த போட்டிக்கு லாயக்கானவர்களே!
போட்டியாளர்#4: சொம்பு மற்றும் பப்லு
விஜய் டிவில ஜோடி நம்பர் ஒன்னு!னு ஒரு புரோகிராம். மெகா சீரியலுல அழுத மூஞ்சிகள் எல்லாம் சோக்கா பவுடர் அடிச்சுண்டு, புது சொக்கா எல்லாம் போட்டுண்டு
"தாம் தக்கா!
தைய தக்க!"னு ஆட்டம் போடறாங்க.
அதுக்கு சொம்புவும் ஒரு நாட்டாமையாம்! (என்ன கொடுமை இது காணாம போன ஏஸ்?)
யப்பா! 9 மாசத்துலேயே நான் டான்ஸ் ஆடி, பிரசவம் பாத்த நர்ஸை கரக்ட் பண்ணினவனாக்கும்!னு சொம்பு விடற பில்டபுக்கு எல்லாம் உச்சகட்டமாக கடந்த வாரம் பப்லுவ பார்த்து என்ன ஆடற நீயி?னு வாய குடுக்க, "நான் ஆடவேயில்லை!னு சொம்பு சொல்லிடுச்சு!னு பப்லு குதிக்க, பாக்கற நாம மண்டைய பிச்சுக்க வெச்சுட்டானுங்க.
இதை பற்றி விரிவாக அறிய மலேசிய மாரியாத்தா சொல்றதை கேளுங்க.
எல்லாம் புரோகிராமை பேமஸ் ஆக்க அவங்க கிண்டி குடுக்கற அல்வா! நீங்க ஒழுங்கா சப்பாத்திக்கு மாவு பிசைங்க!னு தங்கமணி என் தலைல தட்டினதுக்கு அப்புறம் தான் நமக்கு பல்பு எறிய ஆரம்பிச்சது.
அட பாவிகளா! இதை பாக்கற நேரத்துல 10 சப்பாத்தி தோசை கல்லுல போட்டு எடுத்ருப்பேனே!
சரி, இவங்க தான் நம்ம போட்டியாளர்கள். இப்ப நீங்களே இதுல 2007 - மிக சிறந்த அல்வா கொடுத்தவர் யாரு?னு தேர்ந்தெடுங்க பார்க்கலாம்! :)
Monday, October 01, 2007
சட்டம் தெரியுமா உங்களுக்கு?
Date Of Judgment: 23/02/2007 .
Case No.: Appeal (civil) 919 of 2007.
The Supreme Court has ruled that all injured persons especially in the case of road traffic accidents, assaults, etc., when brought to a hospital / medical centre, have to be offered first aid, stabilized and shifted to a higher centre / government centre if required. It is only after this that the hospital can demand payment or complete police formalities. In case you are a bystander and wish to help someone in an accident, please go ahead and do so. Your responsibility ends as soon as you leave the person at the hospital.
The hospital bears the responsibility of informing the police, first aid, etc.
Please do inform your family and friends about these basic rights so that we all know what to expect and what to do in the hour of need. Please not only go ahead and forward, use it too!!!!
பி.கு: பிளாக் யூனியனில் இதை மாதிரி உருப்படியா பதிவு போட்டா ஈ அடிக்குது. அதான் இந்த கடையில் பதிந்தேன். நாலு பேருக்கு நல்ல விஷயங்கள் போய் சேர்ந்தா அதுவே போதும்.
Monday, September 03, 2007
கிருஷ்ண ஜெயந்தி
கிருஷ்ணர் என்னிக்குமே ஸ்பெஷல்.

உப்பு சீடை, வெல்ல சீடை, புழுங்கல் அரிசி முறுக்கு, முள்ளு முறுக்கு,தட்டை, தேங்குழல், அப்பம், அதிரசம்.
ஸ்ஸ்ஸ்ப்பா! இதேல்லாம் கிருஷ்ணர் அமுக்கினாரோ இல்லையோ அவர் பெயரை சொல்லி நாம அமுக்கறோம்.
வீட்டுல இருக்கற நம்ம கீதா பாட்டி மாதிரி பெரியவங்க இதையேல்லாம் செய்யறத்துக்கு ஒரு ரகசிய பார்முலா எல்லாம் வெச்சு இருப்பாங்க.
முறுக்கு கடமுடனு வரணும்னா இவ்ளோ அரிசிக்கு இவ்ளோ தண்ணி, இந்த பததுல அரைக்கனும்னு ஒரு ஜிஸெல்வி ராக்கட் விடற ரேஞ்சுக்கு முந்தைய நாளே கவுன் டவுன் எல்லாம் ஆரம்பிச்சுடும்.
சேட்டை பண்ணூம் குழந்தைகளை அந்த ஏரியாவிலிருந்து அப்புறபடுத்துதல், நடுவில் கவுரவ ஆலோசனை சொல்ல துடிக்கும் ரங்குவை "உப்பு வாங்கிண்டு வாங்க! பெருங்காயம் வாங்கிண்டு வாங்க! வெல்லம் பத்தலை!"னு சாக்கு சொல்லி டிரில்(பழி) வாங்கும் படலம் எல்லாம் இனிதே நிறைவேறும்.
உம்மாச்சி கும்பிட்டு முடிஞ்சதும், பக்கத்து வீடு, எதிர் வீடு, அடுத்த வீடு என டிஸ்ட்ரிபியூஷன் அழகா நடக்கும். எல்லோருக்கும் குடுக்கனும்! என்ற நல்ல எண்ணத்தை விட, "முறுக்குனா இப்படி தான் இருக்கனும்!"னு அந்த பரிமளா தெரிஞ்சுக்கட்டும், பெருசா போன கிருஷ்ண ஜெயந்தில உப்பில்லாத முறுக்கை பண்ணிட்டு என்ன பீத்து பீத்தினா அவ! என பீர்(peer not beer) பிரஷர் எல்லாம் தலைகேறும்.
இதுல தெரியாதனமா, "பரிமளா மாமி வீட்டு அதிரசத்துக்கும் மணமுண்டு!"னு ரங்கு திருவாய் மலர்ந்தருளினால் போச்சு!
அன்னிக்கு கிருஷ்ண ஜெயந்தி ரங்குவுக்கு மட்டும் சிவ ராத்திரியாக மாறி விடிய விடிய லக்க்ஷார்சனை, சகஸ்ர நாமாவளி எல்லாம் ஜோரா நடைபெறும்.
அப்புறம் அந்த ஜென்மத்துக்கு ரங்குவிற்கு அதிரசத்தை பார்த்தாலே அலர்ஜியாகி விடும்.
இப்படி ஏகப்பட்ட கலாட்டாக்கள் நடந்தாலும் பண்டிகைகள் என்றுமே இனிமையானது தானே! (மாரல் ஆஃப் தி பதிவு சொல்லிட்டோம்ல).
happy Birthday krishna! :)))
Wednesday, August 29, 2007
ஒரு அறிவிப்பு
என்னை "நல்லவன்! வல்லவன்! நாலும் தெரிந்தவன்!" என போற்றி புகழ்ந்து அம்மணி எழுதிய பதிவை பாரீர். (போய் பாருங்க, அப்புறம் தெரியும்).
அங்க போனோமா, பதிவை படிச்சோமானு இருக்கனும். ஐடியா குடுக்கற வேலை எல்லாம் வேணாம்! இப்பவே சொல்லிக்கறேன்.
இதேல்லாம் ஒரு பொழப்பா?னு மண்டகபடியை இங்கயும் ஆரம்பிக்கலாம்.
Tuesday, August 28, 2007
ரக்க்ஷா பந்தன் ஒச்சாயினு!
கீழே படத்தில் அல்லாடி கொண்டிருப்பது எனது அருமை தம்பி, குவைத் புகழ், பக்கா திருடன் என செல்லமாக அழைக்கபடும் நமது சச்சின் கோப்ஸ் இல்லை! என நான் உறுதியாக கூறுகிறேன்.
*ahem, இரண்டாம் படத்தில் இருப்பது அம்பி தான்! என சில எதிர் கட்சிகள் புரளியை கிளப்பி விட்டு கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு எல்லாம் நான் ஒன்று சொல்லி கொள்கிறேன்.
ஆயிரம் பூரி கட்டைகளை பார்த்தும் தனது கொள்கையில்(என்னது?) உறுதியாக அஞ்சாமல் இருப்பான் இந்த அம்பி! :)
பிளாஷ் நியூஸ்: நமது மலேசியா மாரியாத்தா! காமடி குயின் "மை ஃபிரண்ட்" 'பாய்ஸ் புகழ்' சித்தார்த்தை தனது உடன் பிறவா சகோதரனாக ஏற்று கொண்டு ஒரு ராக்கி அனுப்பி உள்ளார்.
அதை தம்பி சித்தார்த்தும் தொல்லை விட்டது! என மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று கொண்டு விட்டார்! என்பதை நமது பிமுகவின் தகவல் தொடர்பு துறை உறுதி செய்கிறது. :)))
Monday, August 27, 2007
தங்கத் தேரில் ஓணம் வந்தல்லோ!
நம் அண்டை மாநில கேரள சேட்டன்களுக்கும், சேச்சிகளுக்கும், மற்றும் காவ்யா மாதவன், நவ்யா நாயர், மீரா ஜாஸ்மீன், நயன் தாரா, அசின் அக்கா, ரேணுகா மேனன் எல்லோருக்கு ஒணம் நல்வாழ்த்துக்கள்.
சரி போனா போகுது,
மோகினியாட்டம். (இன்னிக்கு எனக்கு இருக்கு வசமா :)Wednesday, August 22, 2007
சக் தே இந்தியா

Friday, August 17, 2007
வல்லிய கேரளம்!
கேரளா என்றவுடன் உங்களுக்கு சட்டுனு என்ன நினைவுக்கு வருகிறது?
1) God's Own country! India's Venice - என பீட்டர் விட ஆரம்பித்தால் அப்படியே சுண்டல் வாங்கி கொண்டு நடையை கட்டவும்.
2) நேந்ரங்காய் சிப்ஸ் சாம்பார் சாததுக்கு நல்ல சைடு டிஷ் என்று நினைத்தால் நீங்கள் ஒரு பொறுப்பான குடும்ப தலைவி.
3) கதகளி, கப்ப கிழங்கு, குழல் புட்டு, முல்லை பெரியார் அணை, ஆன்டனி என்று நீங்கள் நினைத்து இருந்தால் சினிமா அதிகம் பார்பவராக இருப்பீர்கள்.
4) மீரா ஜாஸ்மின், மஞ்சு வாரியர், கோபிகா குட்டி, காவ்யா மாதவன், நவ்யா நாயர் போன்றவர்கள் அவதரித்த திவ்ய ஷேத்ரம் என நீங்கள் நினைத்து இருந்தால் கையை குடுங்கள் - யூ ஆர் ஸ்டில் யூத்.
5) சபரி மலை, மலையாள பகவதினு நீங்கள் அடுக்கினால் ஹிஹி, பழம் நீயப்பா! உலா வரும் ஒளிகதிர் நடத்த நீங்கள் தான் சரியான ஆள்.
6) களரிப் பயட்டு, வர்ம கலைனு உங்களுக்கு அதிரடியாக தோன்றினால் நீங்கள் தினமும் ஆப்பு வாங்கும் அப்பாவி ரங்கு அல்லது ஆப்படிக்கும் ஒரு தங்கமணி.
டேய்! உனக்கு என்ன தோணிச்சு? அத சொல்லு முதல்லனு நீங்கள் கேட்கலாம்.
என் போன்ற குழந்தைகளுக்கு கிருஷ்ணர் குழந்தை ரூபமாக தவழும் குருவாயூர் தான் நினைவுக்கு வரும்னு நான் சொன்னால் நீங்கள் நம்ப போவதில்லை. :)
சரி, பில்டப் போதும், மேட்டருக்கு வரேன்.
திருமணம் ஆனதும் ஹைனிமூனுக்கு மொரிஷியஸா? மாலத்தீவுகளா? எங்க போக போறோம்?னு தங்கமணி தாக்குதலில் குதிக்க, நாம எல்லாம் இந்தியர்கள், அதனால அன்னிய தேசத்துக்கு எல்லாம் ஹைனிமூன் போனா அப்துல்கலாம் கோச்சுப்பார்.
திருநெல்வேலியில் இல்லாத இடங்களா? அகஸ்த்தியர் அருவி இருக்கு, மணிமுத்தாறு, பாப நாசம் அணைகள் இருக்கு! எங்கூர் ஆத்தங்கரையில் உள்ள பாறையில் அமர்ந்து தாமிரபரணியில் கால் நனைத்து கொண்டே ஹனிமூனை கொண்டாடலாம்னு ஒரு பட்ஜட் பத்மநாபன் பிட்டை போட்டு பார்த்தும் ஒன்னும் நடக்கவில்லை.
நீங்க இப்படி ஏதாவது டகால்டி பண்ணுவீங்கனு எனக்கு தெரியும், அதனால நானே எல்லாம் விசாரிச்சு, கேரளா டிரிப்புக்கு ஆன்லைன்ல அட்வான்ஸ் கட்டியாச்சு. ஒழுங்கா பாக்கி பணத்தை கட்டிடுங்கனு தங்கமணி பதிலடி குடுக்க வாத நாடி அடங்கி போச்சு எனக்கு.
அப்ப மாலதீவு, மொரீஷியஸ்னு சொன்னது எல்லாம்?
ச்சும்மா! அப்படி ஷ்டார்ட் பண்ணா தான் எல்லா ரங்கமணிகளும் இதுக்காவது ஒழுங்கா வழிக்கு வருவாங்கனு என் பிரண்டு சொன்னா!
ஆஹா! தெளிவா தான் இருக்காங்க, அப்ப தான் லூசா?
(அந்த பிரண்டை நான் அவசியம் பாக்கனும். அவளுக்கு இருக்கு தீவாளி. கர்ர்ர்ர்ர்ர்)
மிக சரியா அம்மணி பிறந்த நாள் வேற வந்து சேர்ந்தது. அதனால ஒன்னும் பேச முடியலை. முதலில் குருவாயூர் போனோம்.
திருப்பதி ரேஞ்சுக்கு வரிசை நீன்டு இருந்தாலும் நிற்கும் களைப்பே தெரியலை. ஹிஹி, குருவாயூர் குத்து விளக்குகள் எல்லாம் கையில் விளக்குடன் வரிசையில் நின்னா எப்படிப்பா களைப்பு தெரியும்?
ஆபிஸில் இருக்கும் திருச்சூர் குத்து விளக்கிடம் சம்சரித்து(வறுத்து) டெவலப் பண்ணிய மலையாளம் எல்லாம் நன்னாவே கை குடுத்தது.
ஆனால் தமிழ் படங்களில் கிளைமாக்ஸ் காட்சியில் போலீஸ் வருவது போல "ஹி இஸ் மை ரங்கமணி!"னு அம்மணி சமயம் பார்த்து கோல் போட்டு நமட்டு சிரிப்பு(வில்ல சிரிப்பு) சிரிக்க, அதுவரை நன்னா சம்சரித்து வந்த குத்துவிளக்கு, "என்ட அம்மே அழைக்கினு"! சேனலை மாற்றி, கிளிக்கு இறக்கை முளைச்சு பறந்து போக, கோவில் கடைகளில் பூரிக்கட்டை என்ன விலை?னு அம்மணி விசாரிப்பதை பார்த்து விட்டு அவசரமாக ஒரு உடன்படிக்கை ஏற்படுத்திக் கொண்டோம்.
ஒரு வழியா தரிசனம் முடிந்து(உம்மாச்சி தரிசனம்ப்பா!) அங்கிருந்து எர்ணாகுளம் சென்றடைந்தோம். அங்கே தயராக எங்கள் டிராவல் ஏஜண்ட் காருடன் வந்து எங்களை பிக்கப் செய்து கொண்டார்.
அடுத்த நாள் முழுக்க மூனார் ரவுண்டப் தான்.
அழகிய கேரள படங்களுடன் அடுத்த பதிவில் பார்ப்போமா?
Monday, August 13, 2007
இன்றைய சுதந்திரம்
இந்த தடவையாவது அப்பா லீவுக்கு வருவாரா மா? எனக்கு புது சைக்கிள் கிடைக்குமா?
கண்டிப்பா வருவார் கண்ணா! நேத்து நைட் கூட போன்ல உங்கிட்ட பிராமிஸ் பண்ணாரே?
ஆமா! போன வருஷம் கூட இப்படி தான் சொன்னார், வந்த ரெண்டு நாளுல கிளம்பிட்டார். ராஜேஷ், பிரகாஷ் அப்பா எல்லாம் அவங்க கூடவே இருக்காங்க. ஹோம் வர்க் செய்ய கூட ஹெல்ப் பண்றாங்களாம்.
சரிடா ராஜா! எல்லார் மாதிரியா உங்க அப்பா! அவங்க எல்லாம் மவுண்ட் எவரெஸ்ட் எங்க இருக்கு? எவ்ளோ உயரம்?னு புக்குல தான் படிக்கறாங்க. பாரு உங்க அப்பா அங்க தான் வேலை பண்றாரு.
இதோ பாரு அப்பா எவ்ளோ பெரிய டிரஸ் போட்டுண்டு கைல மெஷின் கன் வெச்சுண்டு ஹெலிகாப்டர் பக்கத்துல நிக்கறார் பாரு!
இடம்: சியாசின், மைனஸ் 52 டிகிரி குளிர், 21537 அடி உயரம்.
ஹலோ மேஜர்! இந்த தடவை நீங்க லீவுக்கு போறீங்க போல, கங்கிராட்ஸ்.
தாங்க்ஸ் ராஜ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒரு வாரம் முன்னடியே நீங்க திருநெல்வேலி போறீங்க இல்லையா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?
நோ பிராப்ளம்! சொல்லுங்க வாட் கேன் ஐ டூ பார் யூ?
என் பையன் புது சைக்கிள் கேட்ருக்கான். நான் ஊருக்கு போற வழில வாங்க முடியுமா?னு தெரில. எனக்காக நீங்க வாங்கி வைக்க முடியுமா? நெல்லை ஸ்டேஷன்ல நான் வாங்கிக்கறேன்.
ஷ்யுர்! இது கூட செய்ய மாட்டேனா உங்களுக்கு?
தாங்க்ஸ் ராஜ்!
இடம்: அகஸ்தியர்பட்டி விமான தளம் - நெல்லை மாவட்டம்
மேஜரின் மனைவி, ராஜ் மற்றும் குழந்தை அர்ஜுன் கையில் புது சைக்கிளுடன் மேஜரின் வரவுக்காக காத்திருந்தனர்.
ராணுவ விமானம் ரன்வேயில் வந்திறங்கியது. மூவர்ண கொடி போர்த்திய பெட்டி வந்திறங்கியது!
"சியாசினில் நடந்த தீவிரவாத ஊடுருவலை நமது இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இதில் நடந்த பயங்கர சண்டையில் அன்னிய நாட்டு கூலிபடைகள் 150 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் ஒரு மேஜர் உட்பட இருபது வீரர்கள் உயிர் நீத்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இத்துடன் செய்திகள் முடிவடைகிறது.
நேயர்களே! சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்:
காலை 7.30க்கு:
தேச பக்தி பாடல்கள் - பாடுபவர் சீர்காழி சிவசிதம்பரம்
9.00 மணிக்கு:
மேடி மாதவனுடன் கல்லூரி மாணவிகள் ஒரு குறும்பு பேட்டி
9.30 க்கு:
சரோஜ்ஜா சாமான் நிக்காலோ - உருவான கதை
10.30க்கு:
உடையணிவதில் ஆண்களுக்கு அதிக சுதந்திரமா? பெண்களுக்கு அதிக சுதந்திரமா? கலகலப்பான பட்டிமன்றம் சாலமன் பாபையா தலைமையில் காண தவறாதீர்.
11.30 க்கு:
நமீதாவுடன் சும்மா நச்சுனு ஒரு பேட்டி.
மாலை 5 மணிக்கு:
உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக இன்னும் திரைக்கே வராத கமலின் தசாவதாரம் - திருட்டு சிடி காண தவறாதீர்.
நேயர்களே! சுந்திர தின நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள், இந்திய சுதந்திரத்தை கொண்டாடுங்கள்" - எங்கோ டிவி பெட்டி அலறிக் கொண்டிருந்தது.
Thursday, August 02, 2007
மாமியார் வீடு
அடுத்த வாரம், சாம்பார், ரசத்தில் உப்பு புளி எல்லாம் குறைய தொடங்கும்(என்ன ஒரு வில்லதனம்?). அப்படியும் புரியாத மாங்கா மண்டைகளுக்கு கடைசியாக ரிவிட்டு தான்.
எப்படா மாப்ள வர போறார்? நம்ம பொண்ண எப்படி பாத்துக்கறார்?னு தங்கமணி சைடுலயும் அவங்க பெரியம்மா, சித்தி, மாமா, மாமினு ஒரு பெரும் படையே ரொம்ப ஆவலா இருக்கும்.
நல்ல வேளை, நானே முந்திக் கொண்டேன். ஒழுங்கா இருபது நாளுக்கு முன்னாடி டிக்கட் எல்லாம் புக் பண்ணி, டேமேஜரிடம் புளுகி லீவு எல்லாம் வாங்கிண்டு, டிரெயின் ஏறியாச்சு. நம்ம கோச்சுல லோயர் பர்த், மிடில் பர்த் யாரு? என்ன வயசு? போன்ற தங்கமணியின் பூரிக் கட்டைக்கு வேலை குடுக்கும் அதி முக்யமான தகவல்களை எல்லாம் கூட சர்வ ஜாக்ரதையாக தவிர்த்து விட்டு குட் நைட் சொல்லி(தங்கமணிக்கு மட்டும் தான் சாமி!) உறங்கி விட்டேன்.
என் தங்கமணி இருக்கும் ஏரியா இருக்கே, அடடா! ஒரு ஆட்டோ பிடிக்கறதுக்கே ஆட்டோல தான் போகனும். போயி இறங்கியதும், நல்ல குளியல் போட்டு டிபனுக்கு உக்காந்தாச்சு. என் புத்தி தெரிஞ்சோ என்னவோ, முதல் ஐட்டமே கேசரி சுட சுட வந்தது. அப்புறம் ஏன் நான் வாய தொறக்க போறேன்? நானுன்டு என் கேசரியுண்டு!னு கர்மமே கண்ணாக இருந்தேன்.
கல்யாணம் ஆகி முதல் முறையாக மாமியார் வீட்டுக்கு போனால் சில விசாரிப்புக்கள் கண்டிப்பாக இருக்கும்.
முதலில், பிளாடில் இருக்கும் ஒரு பாட்டி தான் தொண்டையை செருமி கொண்டு பஞ்சாயத்தை ஆரம்பிப்பார். என்ன? வீட்டுல ஏதும் விஷேசம் வருதா?னு ஒரு பிட்டு போட்டு விட்டு நம்மை உற்று நோக்குவார்.
இல்லாவிட்டால், தங்குவின் வாயை கிண்டுவார்கள். என்னமா? மாப்ள நன்னா கவனிசுக்கறாரா? அப்புறம், என்ன விஷயம்...? முகம் மலர்ச்சியா இருக்கே! குழந்தைகள் சந்தோஷமா இருந்தா சரி! மாப்ள! என்ன வாயவே தொறக்க மாட்டீங்கறீங்க?
- யப்பா! சிபிஐ, சிபிஸிஐடி எல்லாம் பிச்சை வாங்கனும் இவா கிட்ட.
ஒரு வழியாக இவர்களிடமிருந்து எஸ்கேப் ஆகி வந்தால் அடுத்த ஆப்பு தயாராக இருக்கும். மங்கையர் மலர், அவள் விகடன் போன்ற புத்தகங்களில் வந்திருக்கும் சமையல் ஐட்டங்களை மாப்ளை மீது டெஸ்ட் பண்ணியே தீருவது! என கங்கணம் கட்டிக் கொண்டு வந்திருக்கும் தங்குவின் சாதி சனங்கள் அவரவர் ரெஸிப்பிப்புக்கு தகுந்தவாறு நமது டைம் டேபிளை முடிவு செய்து விடுவார்காள்.
காலை சித்தி வீட்டில் புதினா பொங்கல், கத்ரிக்கா கொச்சு
மதியம் பெரியம்மா வீட்டில் அரைக்கீரை வடை கடலை மாவு பாயசத்துடன் சாப்பாடு
மாலை மாமா வீட்டில் முந்திரி கேக், முள்ளங்கி போண்டா
இரவு ஸ்ஸ்ஸ்ப்ப்பா முடியல! ஜி3 அக்ககிட்ட அடுத்த தடவ டியூசன் எடுத்துக்கனும்.
இதுல எல்லாம் எஸ்கேப் ஆகி வந்தா அடுத்தது, நகர்வலம் செய்யும் கோரிக்கை வந்து சேரும். ரங்குக்களின் பர்ஸ்களுக்கு எதிரிகளான உஸ்மான் ரோடு, டி. நகர், பனகல் பார்க், பாண்டி பஜார், லஸ் கார்னர் போன்ற ஏரியாக்களை கவனமாக தவிர்த்து பார்த்தும் ஸ்பென்ஸரை தவிர்க்க முடியலை.
அதுக்கும் காரணம் இருக்கு. ஏற்கனவே பேசியபடி எஸ்கேஎம் அக்காவை அங்க தான் சந்திக்க முடிவானது.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இருக்கும் எல்லை தகராறு, ரூபாய்க்கு எதிராக டாலரின் மதிப்பு சரிவு, நடந்து முடிந்த குடியரசு தேர்தல் போன்ற விஷயங்களை பற்றியெல்லாம் ஒன்னும் நானும் அக்காவும் விவாதிக்கலைனு தான் சொல்ல வந்தேன். அதுக்குள்ள எதுக்கு டென்ஷன் ஆறீங்க? எதுனாலும் பேசி தீத்துக்கலாம்.
இட்டிலிக்கு சரியான மேட்ச் தேங்காய் சட்னியா தக்காளி சட்னியா? மாவாட்டினதுக்கு அப்புறமா எவ்ளோ உப்பு போடனும்? தயிரை புளிக்க வைப்பது எப்படி? போன்ற அதிமுக்யமான விஷயங்களில் அக்காவின் ஆலோசனை கோரப்பட்டது. போகிற போக்கில், எனக்கு எப்படியெல்லாம் ஆப்பு வைக்கலாம்? என்னென்ன ஷாபிங்க் செய்யலாம்? என கொசுறாக அக்கா தங்குவிடம் கொளுத்தி விட்டு வந்த வேலையை செவ்வனே செய்து விட்ட திருப்தியில் நடையை கட்டினார்.
இப்படியாகத் தானே மாமியார் வீட்டின் விஜயத்தை வெற்றிகரமாக முடித்து, மறக்காமல் சாம்பார் பொடி, ரச பொடி, பருப்பு பொடி, புண்ணாக்கு பொடி, மூக்கு பொடி எல்லாம் பொட்டலம் கட்டிக் கொண்டு உங்கள் அம்பி பெங்களுர் வந்து சேர்ந்தான்.
Tuesday, July 31, 2007
அடிச்சுட்டோம் இல்ல செஞ்சுரி!
கிட்டதட்ட சாப்பாடே தங்கமணி எனக்கு ஊட்டி விடற நிலமை ஆயிடுச்சு. கையை தூக்கவே முடியலை. ஒரே பொசிஷன்ல கையை வெச்சு பழகியதுல, விரல்கள் எல்லாம் வீங்கிடுச்சு(யாருப்ப அது? அடி வாங்கினா அப்படி தான் வீங்கும்னு சவுண்டு விடறது?).
சரி, விடுங்க, இப்ப பிசியோதெரப்பி பண்ணிட்டு இருக்கேன், நல்ல யோசனைகள் வரவேற்க்கப்படுகின்றன. காப்பாத்த உம்மாச்சி இருக்கார்.
"சிங்கத்தின் கால்கள் பழுதுபட்டாலும்"னு பாடினா தங்கமணி நக்கல சிரிக்கறாங்க. நம்ம ராசி அப்படி!
டென்டுல்கர் மதிரி கரேக்ட்டா நூறு அடிக்க மட்டும் ரொம்ப டைம் எடுத்துக்க வேண்டியதா போச்சு. போன பதிவே(கதையே) நூறாவது பதிவு தான்!னு பிளாக்கர் சொன்னது. சரி, நூத்தியோன்னா ரவுண்டா மொய் மாதிரி இருகட்டும்!னு தான் இந்த மொக்கை.
மீண்டும் பழைய உற்சாகத்துடன்
மீண்டு வருவேன் பீனீக்ஸ் பறவையாய்!


Monday, July 02, 2007
மீண்டும் ஒரு காதல் கதை!
********************************************************************************
இதுவரை:
"ஹலோ....ஆமாங்க, அவன் அம்மா தான் பேசுறேன்
......"அப்டியா..
"...."பையன் எங்ககிட்ட சொல்லல..
அவங்க அப்பா வந்ததுக்குஅப்பறம் பேசிட்டு சொல்றோங்க..
".."
நானும் நல்லதே நடக்கணும்னு விரும்பறேன். கடவுள் சித்தம்."
ஃபோன் கட் பண்ணிட்டு.. "டேய், எத்தன நாளாடா இது நடக்குது..
" "அம்மா.. அது.. வந்து..."
***********************************************************************************
இதோ நம்ம மியூஜிக்:
என்ன வந்து? போயி... சிகரட் பிடிக்கறத விட்டுடேன்!னு போன மாசமே சொன்ன, அதனால இப்போ சார் சொக்கலால் பீடிக்கு மாறிட்டீங்களோ? மனசுல என்ன மம்முட்டினு நினைப்பா? கீழே கிடந்த பீடி பாக்கட் நொடியில் அம்மாவை பத்ரகளியாய் மாற்றியது.
யம்மா! என்னமா நீயி! இது டெலிபோன் சர்வீஸ் பண்ண வந்த ஆளு பாக்கட்டுல இருந்து விழுந்தது! நீ கூட வீடு முழுக்க ஒரே பீடி வாடை அடிக்குதுனு கத்தினியே!
அடடா ஆமா, சாரிடா கார்த்தி!
சரி, சரி, போன்ல யாருமா? ஏதோ ஜாதகம் மோதகம்னு சொன்னியே, ஹிஹி, எனக்கேதுக்குமா இப்பவே கல்யாணம்?
நீ படிகற லட்சணத்துக்கு ஒரு கம்பனிகாரன் உன்னை நம்பி பிராஜக்ட் குடுக்கறதே பெரிசு. அதுக்கப்புறம் உனக்கு ஒரு வேலை கிடைக்கனும். அது மட்டுமா? இந்த காலத்து பொண்ணுங்க எல்லாம் ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், எம்.எஸ்னு மாங்கு மாங்குனு படிச்சு அமெரிக்கவிலிருந்து வாழ்வு குடுக்கறதுக்குனே(பன்னு திங்கறதுக்குனும் வாசிக்கலாம்) க்ரீன் கார்டோட வர அப்பாவி ரங்குஸ் தான் வேணும்!னு தெளிவா இருக்காங்க. இன்னும் உன் பேரை ரேஷன் கார்டுலயே சேர்க்க முடியலை. சாமியே சைக்கிள்ள போகுதாம்! பூசாரி புல்லட் கேட்டானாம்! அம்மா காந்திமதியாய் மாறி விட்டார்.
ஏன்மா இப்டி டோட்டலா டேமேஜ் பண்ற? அப்ப போன்ல யாரு?னு சொல்லேன்.
உன் பெரிப்பா பையன் சூர்யா, அவன் அப்பா இறந்ததுக்கு அப்புறம் நம்ம வீட்ல தானே தங்கி படிச்சான், அவனுக்கு ஒரு வரன் வந்து இருக்கு, அது சம்பந்தமா தான் போன். போதுமா?
போதும் தாயே! போதும். ஆள விடுங்க.
டிவி ரிமோட்டை எடுத்து சன் மியூசிக் மாற்ற 'காதல்' சந்தியா நெஞ்சாங்கூட்டில் நீயே நிற்கிறாய்!னு ஜீவாவுடன் டூயட் பாடி கொண்டிருந்தாள். பதறியடித்து சன் டிவி மாற்ற, அங்கு "பஞ்சாப்பில் பாங்ரா திருவிழா!" - சந்தியா ராஜகோபால் செய்தி வாசிக்க, "என்னாங்கடா! சொல்லி வெச்சு கடுப்பேத்றீங்களா?
டிவியை ஆஃப் செய்து குளிக்க கிளம்பினான் கார்த்திக்
.~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இடம்: சந்தியாவின் வீடு
சந்தியா, "யப்பா! நைசா அம்மகிட்ட பேச்ச ஆரம்பிங்கப்பா!"
இருமா! உங்க அம்மா நல்ல மூட்ல இருக்காளானு பார்ப்போம்.
கோதாவரி, இன்னிக்கு வானம் மூடாப்பா இருக்குல்ல?
அய்யோ! என் பேரு காவேரி, நீங்க என்னிக்கு தான் திருந்த போறீங்களோ? ஒரு படம் பார்த்தா உடனே அதுல வர பெயரை வெச்சு என்னை ஒரு வாரம் கூப்ட வேண்டியது. நேத்திக்கு என்ன சம்சாரம் அது மின்சாரமா?
நான் கூட தான் முந்தானேத்து பதினாறு வயதினிலே பார்த்தேன், உங்கள ஒரு வாரம் பரட்டை!னு கூப்டவா? இல்லாட்டி சப்பாணினு கூப்டவா? - சந்தியாவின் அம்மாவாச்சே!சும்மாவா சொல்லி இருக்கா, தஞ்சாவூர் காராளுக்கு வாய் நீளம்னு!
சே! ஆரம்பமே சொதப்பல் இந்த அப்பாவால! இன்னிக்கு இவர் மேட்டரை ஓப்பன் பண்ணின மாதிரி தான்! இதுக்கு நானே சொல்லி இருக்கலாம்.
அம்மா! ஒரு முக்கியமான விஷயம் உங்கிட்ட பேசனும்.
சொல்லுமா!
நான் பிராஜக்ட் பண்ண டெல்லி போயிருந்த போது என் சம்மதம் கேக்காம நீ நிச்சயம் பண்ணியது எனக்கு சுத்தமா பிடிக்கலை.
தீர்க்கமான முகத்துடன் அம்மா, இதோ பாரு சந்தியா! உனக்கு எது நல்லது?னு எங்களுக்கு தெரியும். உன் தலைல தடவர ஹேர் ஆயிலுல இருந்து காலுல போடற கொலுசு வரைக்கும் இந்த அம்மா தான்மா பாத்து பாத்து செலக்ட் செஞ்சேன். உனக்கேத்தவர் யாருனு? எங்களுக்கு தெரியாதா?
அம்மா! நீ சொல்றது எல்லாம் சரி. ஆனா, என் கருத்தையும் நீ கேட்டு இருக்கலாமே! ஒரு ஹேர் ஆயில் பிடிக்கலைனா இன்னொன்னு வாங்கிட்டு வந்துடலாம். ஆனா இது அப்படியில்லையே! காலம் முழுக்க நான் தானே வாழ போறேன்?
சந்தியா, உன்ன கேக்காம, நீ இல்லாத நேரத்துல நிச்சயம் வரைக்கும் போனது தப்பு தான். சரி, யாரந்த பையன்..?
அம்மா! அது வந்து காலேஜ்ல...
உன் தயக்கம் புரியுது, நாளைக்கு உனக்கு நிச்சயம் பண்ணிய பையன் யூஸ்லேருந்து உன்னை பாக்க வரான்.
பையனை பாரு! பேசு! அப்புறம் ஒரு முடிவுக்கு வா! இப்ப நான் உனக்கு ஹிட்லரா தெரியலாம். ஆனா நீ தான் எனக்கு எப்பவுமே ஜெர்மனி. நீ காலேஜுக்கு கிளம்பு. சாயந்தரம் வீட்டுக்கு வந்துடுவ இல்ல?
நான் உங்க பொண்ணு மா!
அம்மா எப்பவுமே வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு தான்!
மறு நாள் சந்தியாவின் வீடு பரபரப்பாக இயங்கியது. கிச்சனில் கேசரி ஆவின் நெய் புண்ணியத்தில் கமகமத்தது. போதா குறைக்கு முந்திரி பக்கோடா, வெங்காய பக்கோடா என ரெண்டு காரங்கள் வேறு.
பையன் வீட்டு காரங்க வந்தவுடன் ஏலக்காய் டீ கலந்துக்கலாம், சூடு ஆறிடும்! அம்மா ஏறக்குறைய விஜய சாந்தி ஐபிஸ்ஸாக மாறி கட்டளையிட்டு கொண்டிருக்க, அப்பா வழக்கமான ரங்கமணிகள் போல உத்தரவு எஜமான்! போட்டு கொண்டிருந்தார்.
பதவிசாக ஸ்கார்பியோ கார் அப்பார்ட்மெண்ட் கேட்டை வழுக்கி நின்றது.
இந்த அப்பார்ட்மென்டில் தானே சந்தியா குட்டி இருக்கா, எந்த ஃப்ளோர்னு தான் தெரியலை - வாட்ச்மேன் தடியன் ஒரு வில்ஸ் பாக்கேட்டையும் வாங்கிண்டு கவுத்திட்டான் - கார்த்தி யோசனையில் ஆழ்ந்தான்.
லிப்ட்டில் மூணாவது ஃப்ளோர் வந்து நின்றது.
வாங்கோ! வாங்கோ! வாயேல்லாம் பல் செட்டாக அப்பா வரவேற்றார்.
கார்த்தியின் பெரியப்பா பையன் சூர்யா ஜீன்ஸ் படத்து கதாநாயகி பிரசாந்த் போல அனியாயத்துக்கு வெக்கப்பட்டான்.
எல்லோரும் ஒரு வழியாக அவரவர் சீட்டில் செட்டில் ஆனதும், முதல்ல டிபன் சாப்டுடலாமா? இல்லாட்டி பொண்ண வர சொல்லட்டுமா? கேசரி ஆறிடும், அதான்! - அப்பா பஞ்சாயத்தை ஆரம்பித்தார். அவர் கவலை அவருக்கு.
முதல்ல பொண்ணை வர சொல்லுங்கோ! - எதிர் பாட்டு பாடியது பையன் வீடு.
சரி! அரை மனசாக தலையசைத்து விட்டு, அப்பா (இந்த தடவை சொதப்பாமல்) காவேரி!னு சவுண்டு விட,
மயில் கழுத்து கலர் மெட்டல் ஷிபான் சரசரக்க, அதற்கு மேட்சிங்கா சந்தன கலர் பிளவுஸ், சிறிது லூஸாக பின்னிய பின்னலில் ஒரு முழம் மட்டும் முல்லைப்பூ சூடி, குட்டியாக ஒரு ஜிமிக்கி அசைந்தாட, லேசாக ஐ லைனரும், லேக்மே நேச்சுரல் கலர் லிப்ஸ்டிக்கும் போட்டு, கழுத்தில் ஹைத்ராபாத் வெண்முத்தில் கட்டிய நீளமான மாலையில் வந்த சந்தியாவை பார்த்ததும் (ஸ்ஸ்ஸ்ப்பா, இருங்க நான் முதல்ல கொஞ்சம் தண்ணிய குடிச்சுகறேன்) சூர்யா, கார்த்தி இரண்டு இதயங்களும் டமால்னு வெடித்தன.
அட இது என்ன? சந்தியாவின் ஜெராக்ஸ் உருவமாய் இன்னோரு சந்தியா.
இல்லை! இல்லை! அது தான் சந்தியாவா?
கார்த்தியின் கண்கள் சொருகின....
*************************************************************************************
ஹையா! ஹோம்வர்க் முடிச்சாச்சு!
சாரி பரணி, மூணு நாளுல டேக் எழுத முடியலை.
உனக்கேன்னப்பா! பசிச்சா ஹோட்டலுல போயி ஆர்டர் பண்ணி சாப்டுட்டு அப்படியே பக்கத்து சீட்டுக்காரன் பில்லையும் செட்டில் பண்ணிட்டு வந்துடுவ. நாங்க அப்படியா?
இன்னிக்கு அரிசிய ஊற போட்டு மாவாட்டினா தான்(கிரைண்டர்ல தான்) நாளைக்கு இட்டிலி. தெரிஞ்சுக்கோ!
அதனால இப்படி இரண்டு நாளுல எழுது! மூணு நாளுல எழுது!னு எல்லாம் ரூல்ஸ் போடப்படாது!
இந்த கதையை அடுத்து கலக்க போவது யாரு?
வேற யாரு நம்ம மலேசிய புயல் ஃமை பிரண்ட் தான்!


வ.வா சங்க போட்டிக்காக தான் இதேல்லாம்.