Monday, August 13, 2007

இன்றைய சுதந்திரம்

இடம்: திருநெல்வேலி
இந்த தடவையாவது அப்பா லீவுக்கு வருவாரா மா? எனக்கு புது சைக்கிள் கிடைக்குமா?

கண்டிப்பா வருவார் கண்ணா! நேத்து நைட் கூட போன்ல உங்கிட்ட பிராமிஸ் பண்ணாரே?

ஆமா! போன வருஷம் கூட இப்படி தான் சொன்னார், வந்த ரெண்டு நாளுல கிளம்பிட்டார். ராஜேஷ், பிரகாஷ் அப்பா எல்லாம் அவங்க கூடவே இருக்காங்க. ஹோம் வர்க் செய்ய கூட ஹெல்ப் பண்றாங்களாம்.

சரிடா ராஜா! எல்லார் மாதிரியா உங்க அப்பா! அவங்க எல்லாம் மவுண்ட் எவரெஸ்ட் எங்க இருக்கு? எவ்ளோ உயரம்?னு புக்குல தான் படிக்கறாங்க. பாரு உங்க அப்பா அங்க தான் வேலை பண்றாரு.
இதோ பாரு அப்பா எவ்ளோ பெரிய டிரஸ் போட்டுண்டு கைல மெஷின் கன் வெச்சுண்டு ஹெலிகாப்டர் பக்கத்துல நிக்கறார் பாரு!

இடம்: சியாசின், மைனஸ் 52 டிகிரி குளிர், 21537 அடி உயரம்.

ஹலோ மேஜர்! இந்த தடவை நீங்க லீவுக்கு போறீங்க போல, கங்கிராட்ஸ்.

தாங்க்ஸ் ராஜ்! ரொம்ப சந்தோஷமா இருக்கு. எனக்கு ஒரு வாரம் முன்னடியே நீங்க திருநெல்வேலி போறீங்க இல்லையா, ஒரு சின்ன ஹெல்ப் பண்ண முடியுமா?

நோ பிராப்ளம்! சொல்லுங்க வாட் கேன் ஐ டூ பார் யூ?

என் பையன் புது சைக்கிள் கேட்ருக்கான். நான் ஊருக்கு போற வழில வாங்க முடியுமா?னு தெரில. எனக்காக நீங்க வாங்கி வைக்க முடியுமா? நெல்லை ஸ்டேஷன்ல நான் வாங்கிக்கறேன்.

ஷ்யுர்! இது கூட செய்ய மாட்டேனா உங்களுக்கு?

தாங்க்ஸ் ராஜ்!

இடம்: அகஸ்தியர்பட்டி விமான தளம் - நெல்லை மாவட்டம்

மேஜரின் மனைவி, ராஜ் மற்றும் குழந்தை அர்ஜுன் கையில் புது சைக்கிளுடன் மேஜரின் வரவுக்காக காத்திருந்தனர்.

ராணுவ விமானம் ரன்வேயில் வந்திறங்கியது. மூவர்ண கொடி போர்த்திய பெட்டி வந்திறங்கியது!

"சியாசினில் நடந்த தீவிரவாத ஊடுருவலை நமது இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. இதில் நடந்த பயங்கர சண்டையில் அன்னிய நாட்டு கூலிபடைகள் 150 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் ஒரு மேஜர் உட்பட இருபது வீரர்கள் உயிர் நீத்தனர். இறந்தவர் குடும்பங்களுக்கு பிரதமர் தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார். இத்துடன் செய்திகள் முடிவடைகிறது.

நேயர்களே! சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்:
காலை 7.30க்கு:
தேச பக்தி பாடல்கள் - பாடுபவர் சீர்காழி சிவசிதம்பரம்

9.00 மணிக்கு:
மேடி மாதவனுடன் கல்லூரி மாணவிகள் ஒரு குறும்பு பேட்டி

9.30 க்கு:
சரோஜ்ஜா சாமான் நிக்காலோ - உருவான கதை

10.30க்கு:
உடையணிவதில் ஆண்களுக்கு அதிக சுதந்திரமா? பெண்களுக்கு அதிக சுதந்திரமா? கலகலப்பான பட்டிமன்றம் சாலமன் பாபையா தலைமையில் காண தவறாதீர்.

11.30 க்கு:
நமீதாவுடன் சும்மா நச்சுனு ஒரு பேட்டி.

மாலை 5 மணிக்கு:
உலக தொலைக்காட்சிகளில் முதன்முறையாக இன்னும் திரைக்கே வராத கமலின் தசாவதாரம் - திருட்டு சிடி காண தவறாதீர்.

நேயர்களே! சுந்திர தின நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள், இந்திய சுதந்திரத்தை கொண்டாடுங்கள்" - எங்கோ டிவி பெட்டி அலறிக் கொண்டிருந்தது.

30 comments:

வெட்டிப்பயல் said...

படித்து மனம் கனமானது :-(

கோபிநாத் said...

;-(

இலவசக்கொத்தனார் said...

என்ன செய்ய அதுவும் தேவைப்படுதே..என்ன செய்ய?

இந்த பின்னூட்டத்தினால் நம் நாட்டைக் காக்கும் வீரர்களுக்குத் தர வேண்டிய மரியாதையைக் குறைக்கவில்லை.

நாம் நார்மலாக இருக்க வேண்டியதற்காகத்தானே அவர்கள் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.

CVR said...

hmmm!!
enna pannalaam??
padhivu padicchittu 1 hr mood out aayittu thirumbavum normal aagidalaama???
appadi panna andha major aathma santhi adainjiruma??

Unknown said...

Very well written Ambi.

Dreamzz said...

சுதந்திர மாயையை கிழிக்காதீங்க! நம்ம மக்கள் பாவம்!

Dreamzz said...

நல்லா நச்சுனு சொன்னீங்க!

Dreamzz said...

// நார்மலாக இருக்க வேண்டியதற்காகத்தானே அவர்கள் அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். //

நார்மலா இருக்கலாங்க! கடமைய மறக்க கூடாதுல!

Anonymous said...

சரிடா ராஜா! எல்லார் மாதிரியா உங்க அப்பா! அவங்க எல்லாம் மவுண்ட் எவரெஸ்ட் எங்க இருக்கு? எவ்ளோ உயரம்?னு புக்குல தான் படிக்கறாங்க. பாரு உங்க அப்பா அங்க தான் வேலை பண்றாரு.
இதோ பாரு அப்பா எவ்ளோ பெரிய டிரஸ் போட்டுண்டு கைல மெஷின் கன் வெச்சுண்டு ஹெலிகாப்டர் பக்கத்துல நிக்கறார் பாரு!

Dear ambi,
Oru camera angle la miga simple aga oru unmai nilaiyai solliteenga....

Unamiyil solla ponal, Village il

padithu irukum.
pona generation
varaikum nichayam Freedom patri therindhu irukum.School padipil, Scout and NCC oru part aga irundhu irukiradhu.....

Aduthavar kashtathai unarvadhu - idahi naam purindhu kondu irundhal,

Eppodhum nam manadhil = Indha Veerargal dhan irupargal. suyanalam varadhu.....

NAMMUDAIYA MANAMARNDHA ANBAIYUM, NANRIYAIYUM - SUDHANDHIRA PORATA VEERARGALUKU SELUTHUVOM............

UYIR THURANDHA VEERARGALUKU NAMMUDIAYA KANNIRR ANjALIYAI SELUTHUVOM.........

Ennudaiya Enngalai pagindhu kolla vaippu alitha ungaluku ennudaiya Nanri Dear Ambi..

With Love,
Usha Sankar.

G3 said...

:-(((

mgnithi said...

It happens in india.. This does not mean our people are not patriotic. There is no leader whio cares for the nation.. Arasan evvazhiyo makkal avvazhi....

Anonymous said...

romba ganamana post,its true that we tend to forget what our great soldiers are doing for the country and the sacrifices of the martyrs in the process of maintaining peace and tranquility in the country.
nivi.

Anonymous said...

enna poruthhha varaiyulum neengal sonna madhiri namithavaiyum mallikavayum konjaneramavadhu marandhuttu vavuciyum kumaranum enna thyagam seinjanngannu yosikallam.
atleast namma passangallukku ivanga yarrunnu theriyattum.
nivi.

Anonymous said...

siachen, drass, kargil ellam pathi padichu parkannanga.romba mosamana thatpa veppa nilai.namma siruchiitu enjoy pannitrikkum ovvuru nimiditharikkagavum namma veerargal uyira panayam vekiiranga.yosikka vendamaa?atleast 2 minutes daily????
nivi.

Anonymous said...

idha padicha pothu kannile thaneer vandhadu.nichayam nammale enna seiya mudiyum namma pirandha thai nattirkku enru indha nalla nallile yosikkkalan illaya?
nivi.

Anonymous said...

Padichapparam manasuku romba kashtama irundhuchu :(

Sumathi. said...

ஹாய் அம்பி,

அவங்கல்லாம் அத்தனை கஷ்டப் பட்டாதான் இந்த "நமீதாவும், மேடியும்" டிவியில பாக்க முடியுது னு
எத்தனை பேருக்கு புரியும் னு நினைக்கறீங்க..

Sumathi. said...

ஹாய் அம்பி,

//கமலின் தசாவதாரம் - திருட்டு சிடி காண தவறாதீர்.///

ஹா ஹா ஹா ஹா.... சரியான நச்..

Balaji S Rajan said...

Ambi,

Through this post, you have shown that you can mix humor with serious topic.

Felt like watching Mani Rathinam film. Very true. Look deep into the nature of human being. 'Conquer' others. Instead of this, if love prevails among everyone and if everyone lives according to their heart's content ( Kidaithathu Podhum) why should each one spend huge amount on army, protection. Saying this is my border and our rule implies with it will help a lot. Imagine borders without army and people behaving to their conscious. Am I talking too much... One day it will happen. Probably we may not be alive.

Well written.

manipayal said...

எல்லாரும் பீல் பண்ற அளவுக்கு இதுல என்ன இருக்குன்னு எனக்கு புரியல்லை.

ப்ரசன்னா said...

:-(

ஆனா இந்த ஒரு நாள் மட்டும் TV-ல் கஷ்டப்படும் வீரர்களை பற்றி சொன்னால் போதுமா? தெரியலை.. இதுக்கு வேற ஏதாவது செய்யணுமுன்னு தோணுது ஆனா அது என்னான்னு தெரியலை

Anonymous said...

nalla soli irukeenga..ganamaana unmai than.
sudhandhira dhinathaik kondaadi magizha thiraippadangalum athani saarnthavaikalum than podhuvaana
pozhudhupokkaaga irukiradhu...aanal adhai paarka veandum endra kattayam illaiye namaku...we are free to do whatever we want. is it that not freedom? or is freedom just to crib about the lack of patriotic spirits?

தி. ரா. ச.(T.R.C.) said...

புது முயற்சி நல்ல பதிவு

Geetha Sambasivam said...

வருஷத்திலே ஒரு நாள் லீவ் கொடுக்க்கிறதுக்காக வந்து போகும் "சுதந்திர தின வாழ்த்துக்கள்"!

Arunkumar said...

ஏதாவது செய்யனும்...

shree said...

"nenju porukkudhillaye indha nilai ketta maanidarai ninaithu vittaal"

Syam said...

aniyaayathukku ulkuthu...aana naatu nadappu ipdi thaan irukku...

Harish said...

Ettani kaalam daan emmaruvaar inda naatile....

Avial said...

Konjam serious ana post . Nalla post .
But one thing , namballa ethana peru would be interested in Major's death ? Arent we more interested in Saroja Samannikalo ?
Ennayum serthu daan solrean .

dubukudisciple said...

edavathy seiyanam..
Arun sollunga.. naama thaan union form panni irukome.. edavathu seiyalam