நீங்கள் ஒரு மிகச் சிறந்த பாத்ரூம் சிங்கரா? அப்ப இந்த குவிஜு உங்களுக்கு தான். இது ரொம்ப சிம்பிள் (அத நாங்க சொல்லனும்). உங்களுக்கு நல்லா தெரிஞ்ச சில பாடல்களின் முதல் வரியை அதாவது பல்லவியை( நடிகை இல்லப்பா) சில படங்களாய் இங்க குடுத்ருக்கேன். படங்களை வெச்சு முதல் வரியை கண்டுபிடிக்கனும். அவ்ளோ தான்.
உதாரணமா இந்த படத்தை பாருங்க:
பல்லாங்குழி இருக்கு, ஒரு ரூபாய் நாணயம் இருக்கு. என்ன பாட்டு? பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்.இப்ப புரிஞ்சதா?
நீங்க அந்த பாடலின் பல்லவியை மட்டும் சொன்னா போதுமானது. படம் பேரு தெரிஞ்சா சொல்லலாம் ஆனா அவசியமில்லை. சமீபத்தில் 1965ல வந்தது, அப்ப நான் வால் டிராயர் அணிந்து அந்த படத்தை பார்த்தேன்! அப்படின்னு கொசுவர்த்தியும் சுத்தலாம் தப்பில்லை.

படங்கள் க்ளூ போதவில்லைன்னு நீங்க பீல் பண்ணிணா உங்களுக்கு எக்ஸ்ட்ரா குறிப்புகள்:
1) ஜே.கே ரீத்தீஷ் கூட என்ன பாட்டுனு சொல்லிடுவாரு.

2) இந்த குவிஜுல மொத்தம் அஞ்சு கேள்வி இருக்கு. ஆனா பதி நாலு படங்கள் இருக்கு. இந்த பதிவுல மொத்தம் 156 வார்த்தைகள் இருக்கு.
3) க்ளூ கிடையாது. அதான் படமே பாட்டு பாடுதே!
4) டாக்டர்களுக்கு பிடிக்காத படத்திலிருந்து ஒரு பாடல்.

5) ரெண்டு வரிகளுக்கு நாலு படம் குடுத்து இருக்கேன், ஆகவே நோ குறிப்பு. தெரியலைன்னா ஏடிஎம் போய் பணம் எடுத்து எனக்கு அனுப்புங்க.