Tuesday, September 28, 2010

NRI மாமி

Part-1

பொதுவாக கல்யாணம் ஆன ஆண்களுக்கு தமது மாமியார் வீடுகளில் தங்கமணியின் தூரத்து சொந்த பந்தங்களிடமிருந்து சிலபல சோதனைகள் வந்து வாய்க்கும். அதையெல்லாம் எடுத்தோம் கவிழ்த்தோம்னு டீல் பண்ண முடியாது, பண்ணவும் கூடாது. அப்படி செய்தால் செய்கூலியும் சேதாரமும் ஜாஸ்தியா இருக்கும். வள்ளுவர் சொன்ன மாதிரி அகலாது அணுகாது, நாலு பேரையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் ஒரு முடிவுக்கு வரனும். சரி, நேரே விஷயத்துக்கு வரேன்.

ஒரு தரம் குடும்ப சகிதமாய் நங்கநல்லூர் அனுமார் கோவிலுக்கு போய்விட்டு அக்கடானு வந்த நேரம் தங்க்ஸின் தூரத்து சொந்த பந்தம் வந்து சேர்ந்தனர்.
ஒரு எழுபது வயது மதிக்க தக்க ஒரு என்.ஆர்.ஐ மாமா, மாமி. அவங்களும் பெண்களூர்ல தான் இருக்காங்களாம். கர்ணனுக்கு கவச குண்டலம் போல என்ஆர்ஐ மாமிகளுக்குன்னு சில பொதுவான விஷயங்கள் உண்டு.

காதில் எட்டு கல் வைத்து வைர தோடு(கலிபோர்னியாவில் வாங்கியது) தான் போட்டு இருப்பார்கள்.

தர்மாவரமோ ஆரணியோ அல்லது காட்டன் சில்கோ(ஆழ்வார்பேட்டை பிரசாந்தினியில் நல்ல வெரைட்டி இருக்கு தெரியுமா?) தான் உடுத்தி இருப்பார்கள்.

"திஸ் ஓல்ட் மேன் இஸ் ஆல்வேஸ் லைக் தேட்!" என அவர்களது ரங்க்ஸை அன்பாக கடிந்து கொள்வார்கள்.

போன டிசம்பர் சீசன்ல சீனி(மான்டலீன் ஸ்ரீனிவாஸ்) சிகாகோ வந்ருந்தான், பின்னிட்டான் தெரியுமா! என ஒரு பிட்டை போடுவார்கள்.

மேற்படி விஷயங்களில் வைரத் தோடு, ஆரணி நீங்கலாக எந்த பந்தாவும் இல்லை இந்த மாமியிடம். பரஸ்பர ஷேமம் உபயஷேமம் முடிந்த பின் இவர் தான் எங்க வீட்டு மாப்ளை என நான் அறிமுகம் செய்து வைக்கப்பட்டேன்.

பெண்களுர்ல நீங்க எங்க இருக்கீங்க..?

சொன்னேன்.

அவர்கள் யெலஹங்காவில் இருக்காங்களாம். ஒரு தரம் ஆத்துக்கு கண்டிப்பா வரனும் என அன்பு கட்டளை. பெண்களூரில் இருந்து யெலஹங்கா போற நேரத்துல ஸ்ரீலங்காவுக்கே போயிட்டு வந்துடலாம். :)

அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள் அமெரிக்காவில் ஐந்து வேவ்வேறு மாநிலங்களில் இருக்காங்க. சான் ஜோஸ் கிளைமேட் தான் எனக்கு ஒத்துக்கும்! அதுனால் அந்த பிள்ளை வீட்ல தான் தங்குவோம்! என்றார்.

நயாகராவை ரெண்டு பக்கத்துல இருந்தும் பாத்தாச்சாம். நயந்தாராவை எதுக்கு இவங்க ரெண்டு பக்கத்துல இருந்தும் பாக்கனும்? எந்த பக்கம் பாத்தாலும் அழகா தானே தெரியும்?னு தங்கஸிடம் கிசுகிசுத்தேன். நறுக்குனு ஒரு கிள்ளு மட்டும் பதிலாக வந்தது. எப்போதும் அப்பாவிகளை தான் இந்த உலகம் தண்டிக்கிறது.

எந்த கம்பெனியில் வேலை..?

சொன்னேன்.

இங்க தான் ஒரு சூட்சமம் இருக்கு. மூன்றேழுத்து, நாலேழுத்துன்னு அவங்க ஒரு கம்பெனி பட்டியல் வைத்திருப்பார்கள். அந்த லிஸ்டுகுள்ள நம்மது இருந்தா தப்பிச்சது. நம்மது ஒரு மன்னார் அன்ட் மன்னாராகவோ இல்ல ஒரு கெக்ரான் மோக்ரானாகவோ இருந்து தொலச்சா மேலும் சில குறுக்கு விசாரணைகள் தொடரும். இது கூட பரவாயில்லை, நம்ம நேரம், போன வருடமோ, போன மாசமோ நம்ம கம்பெனிய வேற ஒருத்தன் சல்லிசா இருக்கேன்னு வாங்கி இருப்பான். இல்ல, நம்ம கம்பெனி, நமக்கு குடுக்க வேண்டிய சம்பளத்துல ஒரு பக்கோடா கம்பெனிய வாங்கி இருப்பான். உடனே மாத்துடா கம்பெனி போர்டை!னு ரீபிராண்ட் செய்து இருப்பார்கள். இதை புரிய வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும்.

உங்கள நம்பி தான் எங்க பொண்ணை தந்ருக்கோம், கண்ண கசக்காம இருந்தா சரி! என முடிவுரை எழுதி விடுவார்கள்.

அந்த கம்பெனில நீங்க என்ன பண்றீங்க..?

கால் கிலோ ரவைய வறுத்து முக்கா கிலோ சீனி, 200 கிராம் நெய்யும் விட்டு கேசரி கிண்டிட்டு இருக்கேன்னா சொல்ல முடியும்..? ரொம்ப எளிமையா நான் செய்யறதை சொல்லி புரிய வைத்தேன். ஒரு வழியாக சமாதானம் ஆகி மறுபடியும் ஸ்ரீலங்காவுக்கு, சே யெலஹங்காவுக்கு எங்களை அழைத்து விட்டு பின்கோடு உட்பட அவர்கள் முகவரியை எழுதி குடுத்து விட்டு சென்றனர். :)

42 comments:

எல் கே said...

அப்பு ,எனக்கு இந்தத் தொல்லை இல்லை.. ஆனா வேற தொல்லை. அது இங்க வேண்

திவாண்ணா said...

//நறுக்குனு ஒரு கிள்ளு மட்டும் பதிலாக வந்தது.//
அவ்வளொ ஈஸியா தப்பிச்சாச்சா? பரவாயில்லையே!
//யெலஹங்கா போற நேரத்துல ஸ்ரீலங்காவுக்கே போயிட்டு வந்துடலாம். :)//
யெலஹங்காவிலே சண்டை எல்லாம் முடிஞ்சாச்சி இல்லே?
//இதை புரிய வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும்.//
இந்த மாதிரி சமயத்திலே கேசரியை நினைச்சுக்கணும்.
//அந்த கம்பெனில நீங்க என்ன பண்றீங்க..?//
சுலபமா பொட்டி தட்ரேன்னு சொல்லறதுதானே?

கடவுளே இது பார்ட் 1? அப்ப இன்னும் இருக்கு? வெய்டிங்.....

அபி அப்பா said...

கிளாசிக் அம்பி கிளாசிக்... எனக்கு நேர்ந்ததையும் எழுத கை பரபரங்குது

Vidhoosh said...

:))

அப்புறம் ஆச்சானுக்கு பீச்சாண் மதானிக்கு உடப்பொறந்தான் உறவெல்லாம் தேடிக்கலையா... என்ன கோத்ரம் நீங்க...

வல்லிசிம்ஹன் said...

ஒரு மாதிரி ஷாக் அடிச்சது:)
சேச்சே அம்பி நம்மைப் பத்தியெல்லாம் எழுத மாட்டார்னு நானே தேத்திக் கொண்டேன்:)
நல்லவேளை எனக்கு ஒரு கம்பெனி பெயரும் தெரியாது.நான் கேட்கவும் மாட்டேன்.

Vidhya Chandrasekaran said...

ஒருவேளை அவங்க லிஸ்ட்ல இருக்க கம்பெனி பேர் சொல்லிருந்தோம்னா ஒரு பெயரைக் குறிப்பிட்டு தெரியுமான்னு கேட்பாங்க. தெரியாதுன்னு மட்டும் சொல்லிட்டோம் அவ்வளவுதான். அந்தாள் காலேஜ்ல வாங்கின மார்க் கொண்டு இப்ப வாங்கிருக்கிற ஃப்ளாட் வரை ஒரு ரத்த சரித்தரத்தை கேட்கும்படியாகிவிடும்.

பதிவு வழக்கம்போல் சூப்பர்ண்ணா.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\போன மாசமோ நம்ம கம்பெனிய வேற ஒருத்தன் சல்லிசா இருக்கேன்னு வாங்கி இருப்பான். இல்ல, நம்ம கம்பெனி, நமக்கு குடுக்க வேண்டிய சம்பளத்துல ஒரு பக்கோடா கம்பெனிய வாங்கி இருப்பான். உடனே மாத்துடா கம்பெனி போர்டை!னு ரீபிராண்ட் செய்து இருப்பார்கள். இதை புரிய வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும்.//
அட்டகாசம் அம்பி..

எங்க வீட்டுல அவங்க அதிகம் பேசமாட்டார்ன்னு எல்லாரும் என்னைய்த்தான் கேப்பாங்க.. எனக்கு இதெல்லாம் விளக்கறதுக்கு பதில்
சும்மா தான் வீட்டுல இருக்காங்கன்னு
சொல்ற லெவலுக்கு தல சுத்திப்போகும்..

My days(Gops) said...

neenga y avanga kovil pona neram paarthu poneeenga? ..

sriram said...

அம்பி
அது சானோஸே, சான் ஜோஸ் அல்ல.
(San Jose ஐ அப்படித்தான் சொல்லணுமாம்)

அப்புறம், சீக்கிரமே இந்த கொசுக்கடியிலிருந்து விடுதலை பெற வாழ்த்துக்கள்.

என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்

இலவசக்கொத்தனார் said...

அம்பி

RSS feed குடுக்கும் பொழுது Full feed தரக்கூடாதா? ஆபீசில் படிக்க கஷ்டமா இருக்குப்போய்.

அப்புறம் சான் ஜோஸ் இல்லை சான் ஹோசே!! இந்த ஊருக்கு வந்துட்டுப் போன மாமிகள் எல்லாம் அதை கரெக்டா சொல்லுவா. உன்னை மாதிரி தப்பாச் சொன்னா அட அபிஷ்டுன்னு ஒரு பார்வை பார்த்துட்டு நமுட்டுச் சிரிப்போட கரெக்ட் பண்ணுவா.

Meena Sankaran said...

ஹா ஹா ஹா......ஆத்துக்கு வாங்கோன்னு அன்பா கூப்பிட்ட எங்கூர் மாமியை இப்படி அரிசிப்பொரி அவல் மாதிரி மென்னு துப்பலாமா அம்பி?

Anonymous said...

San Jose==J is silent, to be pronounced as San 'ose. Next time you try to educate NRI mama and he won't trouble you further!!
thyaga

Anonymous said...

aarani is not the inthing , it is kangeevaram with location copyright,

anyway now a days Newdelhi, Bombay, Calcutta Maamis are replaced by Foreign (NRI) mamamis.

old is not gold it is DIAMONDs for ever...

Vijay said...

Very Interesting :)

"When I was in US"ன்னு ஒரு நுறு தடவை சொல்லியிருப்பாங்களே :)

Sri said...

சான் ஜோஸ் அல்ல சான் ஓசே அப்படின்னு கரெக்ட் பண்ற அமெரிக்க அம்பிக்களே (or) எதிர்கால NRI மாமா/மாமிக்களே - அம்பி விரிச்ச வலைல வீணா வந்து மாட்றீங்களே :-)

Srini

ஷைலஜா said...

//கர்ணனுக்கு கவச குண்டலம் போல என்ஆர்ஐ மாமிகளுக்குன்னு சில பொதுவான விஷயங்கள் உண்டு.

காதில் எட்டு கல் வைத்து வைர தோடு(கலிபோர்னியாவில் வாங்கியது) தான் போட்டு இருப்பார்கள்////

ஐயோ கஷ்டம்ப்பா இந்த அம்பியோட...வைரவிஷயம்லாம் ஒழுங்கா தெரியுதா? கலிபோர்னியா வைரமாம்! கலிஃபோர்னியால பெண்கள்தான் வைரமா அழகா ஜொலிப்பாங்க! ஏழுகல்லதான் வைரத்தோடு செய்வாங்க பொதுவா.. கேசரிதாஸுக்கு இதுல விவரம் பத்தல:)

ஷைலஜா said...

//அவர்கள் யெலஹங்காவில் இருக்காங்களாம். ஒரு தரம் ஆத்துக்கு கண்டிப்பா வரனும் என அன்பு கட்டளை. பெண்களூரில் இருந்து யெலஹங்கா போற நேரத்துல ஸ்ரீலங்காவுக்கே போயிட்டு வந்துடலாம். :)
///
ஹ்ஹஹா! இது அம்பிமுத்திரை:)

ஷைலஜா said...

.// எப்போதும் அப்பாவிகளை தான் இந்த உலகம் தண்டிக்கிறது.

////அடப்பாவி இப்படி ஒரு நினைபப அம்பி?:)

//இல்ல, நம்ம கம்பெனி, நமக்கு குடுக்க வேண்டிய சம்பளத்துல ஒரு பக்கோடா கம்பெனிய வாங்கி இருப்பான். உடனே மாத்துடா கம்பெனி போர்டை!னு ரீபிராண்ட் செய்து இருப்பார்கள். இதை புரிய வைப்பதற்குள் நமக்கு நாக்கு தள்ளி விடும்.
////


மகாகுறும்பு இது!

//கால் கிலோ ரவைய வறுத்து முக்கா கிலோ சீனி, 200 கிராம் நெய்யும் விட்டு கேசரி கிண்டிட்டு இருக்கேன்னா சொல்ல முடியும்?’’’’
//

அம்பி! சிரிச்சிசிரிச்சி ......தாங்கல:)

Anonymous said...

Ippadithaan, oru mini maami gumbal rag pannadha doshama neenga Pilani yaa, evarai therinju irukkume avarai therinju irukkumennu blade pottutu neenga enna course padichelnu kettathum BE in Dismantling nu sonnadum, without a blink they moved on to asking the next set of questions to show of their royal backgound in amrikaaa

subbulakshmi said...

USille irukkira Mamis mathramthaan ippadiyellam behave panra! Uk ilo allathu vera contrilo irundhu varava ippadi pesuvathilli enpathu ennoda apiprayam. enna, sarithane, ambi?

ராம்ஜி_யாஹூ said...

I thought its about NRI MAMI BLOG.

பவள சங்கரி said...

அருமை.....அருமை.......நல்ல காமெடி போங்க....சிரிச்சி சிரிச்சி வயிரே வலிக்குது அம்பி.......வாழ்த்துக்கள்.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//காதில் எட்டு கல் வைத்து வைர தோடு(கலிபோர்னியாவில் வாங்கியது) தான் போட்டு இருப்பார்கள்//
கலிபோர்னியாவில் தோடா? ஹா ஹா ஹா

//எந்த பக்கம் பாத்தாலும் அழகா தானே தெரியும்?//
அது அப்படி இல்லிங்க... அமெரிக்கால இருந்து பாத்தா full view இருக்காது... ஓரமா எட்டி பாக்கராப்ல தான் இருக்கும்... கனடா சைடு வந்து பாத்தா தான் நல்ல view இருக்கும்.. .அங்க வர்றவங்க இதுக்கே இந்த பக்கம் விசா எடுத்து வர்றதுண்டு...

//கால் கிலோ ரவைய வறுத்து முக்கா கிலோ சீனி, 200 கிராம் நெய்யும் விட்டு கேசரி கிண்டிட்டு இருக்கேன்னா சொல்ல முடியும்..?//
இதுக்கும் கேசரியா... நான் கூட இன்னிக்கி தான் கேசரி போஸ்ட் போட்டேன்... இருந்தாலும் உங்க அளவுக்கு கேசரிக்கு கொ.பா.செ செய்ய முடியாது யாராலையும்... ஹா ஹா ஹா

NRI மாமாக்கள் மட்டும் ஒண்ணும் பேசறதில்லையோ... ம்ம்ம்

கௌதமன் said...

நன்றாக எழுதியுள்ளீர்கள். பொருளுடன் கூடிய நகைச்சுவை எழுத்துகள் அபூர்வம். வாழ்த்துகள்.

SKM said...

San Jose_ idhil "J" is silent, to be pronounced as San "osae".
Unga lollu koraiyavae illi. yepdi dhan thangs thangurangalo!! Rangs_gaL thollai thaangamal appapo ippdi yellam virundhaligalai varavazhaichu yengalalae mudija ubacharam ungalai pola rangs_ku.

Kalakku ambi kalakku.

Anonymous said...

lol post.....ellathukum thorayama thalai aati vayinga...andha nri maamikku ungala romba pidichu pogum.
nivi.

Shree said...

romba nakkal adichirukke, enna stomach burningaa??

ambi said...

எல்கே, உன் தொல்லை என்னனு எனக்கு புரியுது. :)

திவாண்ணா, இது பார்ட் டூ, பார்ட் ஒன் லிங் இருக்கு பாருங்க. :)

எழுதுங்க அபி அப்பா எழுதுங்க. அதர் சைட் ஆஃப் தி காயினையும் படிக்கனும் இல்ல. :))

விதூஷ், அவ்ளோ டீடெயிலா போகலை, பேச்சுலரா இருந்தா உங்க கேள்விகள் எல்லாம் எழுந்து இருக்கலாம். ம்ஹும்... :))

நன்றி Drபாலா. :)

வல்லிமா, அடடா! நோ அப்ஃபன்ஸ். நீங்க டவுன் டு எர்த் பெர்ஸன் ஆச்சே!. உங்க நம்பர் தொலஞ்சு போச்சு, தக்குடு கிட்ட வாங்கி போன் பண்றேன். :)

வித்யா, அங்கயும் சேம் பிளட் போல வலை சர ஆசிரியருக்கு. நன்றி ஜிஸ்டர். :)

முத்தக்கா, உங்க பின்னூட்டம் பாத்து ரொம்ப நேரம் சிரிச்சேன். உங்க ரங்கு பேச மாட்டார்னா நீங்க ஹிஹி.. ஆண்டவன் எப்படி கோர்த்து விடறான் பாருங்க.. :)))

கோப்ஸ், அவங்க பக்கத்து வீட்டுக்கு போயிட்டு அப்ப தான் வந்தாங்க, நாங்க கோவிலுக்கு போயிட்டு அதே நேரம் வந்து சேர்ந்தோம். நான் சரியா பேசறேனா..? :))

My days(Gops) said...

ennamo sollureeenganu ketkudhu, but enna sollureeenganu thaaan puria maatengudhu....

( naatamai goundamani ishtyle'la padinga :) )

ambi said...

பாஸ்டன், தகவலுக்கு நன்றிண்ணே. இங்க்லீஸ்ல நீங்க சொன்ன மாதிரி சொல்லலாம், தமிழ்ல நான் சொன்ன மாதிரி சொல்லலாம். (எப்பூடி?) :))

முழு Feed குடுத்தா உங்க பின்னூட்டம் வர பாக்யம் எனக்கு கிடைக்காதே கொத்ஸ்..? :P

மீனா சங்கரன், அவங்க நல்லவங்கன்னு தான் சொல்லி இருக்கேன், :)

தியாகா, சரிங்க. :)

அனானி, நூறு தரத்துக்கு உண்மை.

விஜய், இல்ல, இவங்க அப்படியெல்லாம் சொல்லலை. :)

ஸ்ரீனி, ஹிஹி, கரக்ட்டா பாயிண்டை புடிச்சீங்க பாஸ். :)

ஷைலஜா, அடடா, கலிபோர்னியாவுக்கு கண்டிப்பா ஒரு ட்ரிப் அடிக்கனும் போல. :P

அனானி, இந்த பிலானி காலேஜ் பல பேரை படுத்தி இருக்கு போல. :)உங்க பேரை சின்னதா போட கூடாதா..?

சுப்புலக்ஷ்மி, ஆமா US தான் இப்படி. நல்ல ஷார்ப்பா கவனிச்சு இருக்கீங்க. :))

ராம்ஜி யாஹூ, இல்லீங்க. (நல்லா கோர்த்து விடறாங்க பா.) :))

நித்திலம், என்ன ஒரு கவித்துவமான பெயர். ரொம்ப நன்றிங்க. :)

வாங்க இட்லி மாமி, ஆம நயாகராவுக்கு மட்டும் அப்படி ஒரு ஈர்ப்பு. :))

கவுதமன், வருகைக்கு நன்றி சார், உங்களை இட்லி வடைல பாத்து இருக்கேன். :)

வாங்க எஸ்கேஎம் அக்கா, கலிபோர்னியானவுடனே அடிச்சு பிடிச்சு வந்துட்டீங்க போல. :p
எங்க..? நான் தான் பாவம்.

ஆமா நிவி, அவங்களுக்கு பிடிச்சு போச்சு. போன் எல்லாம் பண்ணாங்க. :))

ஸ்ரீ, பொறாமை எல்லாம் ஒன்னும் இல்லீங்க. :)

Vidhya Chandrasekaran said...

தங்கள் இடுகையை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.
http://blogintamil.blogspot.com/2010/10/blog-post_08.html

மங்குனி அமைச்சர் said...

சார் NRI மாமின்னா N பாஃர் நடு , R பாஃர் ரோடு , I பாஃர் இன்ட்லிகடை அப்படின்னா ,
சார் NRI மாமி = நடு ரோட்டு இட்லிகடை மாமி சரியா சார்

ISR Selvakumar said...

அமர்க்களமான நடை...
கலகலவென்று இருக்கிறது.

ஸ்ரீராம். said...

சுவாரஸ்யம். எதிரில் நின்று பேசுவது போல..

Try said...

Nice post ambi sir :)
//ஒருவேளை அவங்க லிஸ்ட்ல இருக்க கம்பெனி பேர் சொல்லிருந்தோம்னா ஒரு பெயரைக் குறிப்பிட்டு தெரியுமான்னு கேட்பாங்க. தெரியாதுன்னு மட்டும் சொல்லிட்டோம் அவ்வளவுதான்//

சரியாய் சொன்னீங்க வித்யா... அதுவும் நாம அவங்க சொன்ன ஆள தெரியாது அப்டின்னு சொன்ன அடுத்த நிமிஷம் நம்மள ஒரு பார்வை பாப்பாங்க பாருங்க.... ஹய்யோ :)

ambi said...

நன்றி வலைச்சர ஆசிரியரே! :)

மங்குனி அமைச்சரே, ஸ்ஸ்ஸ்பா முடியல. :D

தன்யனானேன் இளா. :)

உங்கள் பாராட்டுக்கு நன்றி திரு.செல்வகுமார், ஸ்ரீராம் and லதா. :))

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

எலஹங்கா..எலஹங்கா ந்யூ டவுனா?


ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/

RajmiArun said...

இந்த வலை பதிவு மட்டும் அல்ல அதன் பின்னூட்டங்களையும் படித்து வயிறு வலிக்க சிரித்தேன்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

ஸ்ரீலங்காக்குக் கூட போயிட்டு வந்துடலாம்..எலகங்கா..போறதுக்கிள்ள உயிரே போயிடும்..சத்தியமான வார்த்தை!
மெஜெஸ்டிக்கிலிருந்து போனாத் தான் தெரியும்...
இதில அடியேன் சென்ற இடம் எலகங்கா நியூ டவுன்!

Ranjani Narayanan said...

திருமதி கீதா சாம்பசிவம் அவர்களின் பதிவு மூலம் உங்கள் பதிவுகளைப் படிக்க வந்தேன்.

இப்போது எழுதுவதில்லையா? உங்கள் நடை மிகவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. மறுபடியும் எழுத ஆரம்பியுங்கள்.

இந்த விஷயத்தை வைத்து சுஜாதா 'கார்த்திகைத் தெரியுமா' என்று ஒரு கதை எழுதியிருக்கிறார், படித்திருக்கிறீர்களா?

SAMBU said...

Dear Ambi, visiting your blog after a gap of almost 10 years - even my own blog for that matter. NRI mami post was excellent.

SAMBU said...

BTW, where are you now??? send me you email ID so that I can be in touch with you. ( If you are ok with it)