Friday, February 20, 2009

மானேஜர்கள் S/W இஞ்சினியர்களிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்
1) அது எப்படி கண்ணா, ஒரு மெயின்டன்ஸ் பிராஜக்டை கூட இப்படி ஜவ்வா இழுத்து, இழுத்து உன்னால வேலை செய்ய முடியுது?

2) காலையில வந்தவுடனே தமிழ்மணம், ஜிடாக்குல போஸ்ட் போட்ருக்கேன், பாருங்க!னு அறைகூவல், போதாகுறைக்கு யாஹு மெயில், ஹாட்மெயில். ஆனா நாங்க வரது தெரிஞ்ச உடனே பிராஜக்டுல மூழ்கி முத்தெடுக்கற மாதிரி ஒரு சீன் எப்படி ராசா உன்னால போட முடியுது?

3) அப்ரைஸல் டையத்துல மட்டும் ஒரு நாளைக்கு பத்து தடவ என்னை பாத்து சிரிக்கிறியே ஏம்பா?

4) அப்ரைஸலுல குறைவா ரேட்டிங்க் குடுத்தா உடனே நவுக்ரில ரெஸ்யூம் அப்டேட் பண்றியே அது ஏன் ராசா? டாப் மேனேஜ்மெண்ட் சொல்றதை தானே நாங்க செய்றோம், என்ன, வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்?

5) யாராவது உன் செல்லுக்கு கூப்டா உடனே கட் பண்ணிட்டு டக்குனு ஆபிஸ் போனை தேடறீயே, இதோட பில்லை உன் சம்பளத்துல கழிச்சுடலாமா?

6) மானேஜர்னாலே டெக்னிக்கலா ஒன்னும் தெரியாது!னு நீயே எப்படிபா முடிவு செஞ்சுக்கற? நாளைக்கு நீயும் மேனேஜர் ஆனபிறகு உனக்கும் இது பொருந்துமா?

7) வார நாட்கள்ல குடுத்த வேலைய ஜவ்வா இழுத்து வெள்ளிகிழமை வரை வெச்ருந்தா நாங்க எப்படிபா அதுக்கு பொறுப்பாளி ஆக முடியும்? உனக்கு சம்பளம் என்ன தமிழ்மணமா குடுக்குது?

8) ஆன் சைட் போயிட்டு வந்தபுறம் ஒரு வாரத்துக்கு கால் கீழ படாம நடக்கறீயே அது ஏன்பா?

9) டீம்ல ஒரு நல்ல பிகரோட ஜகஜமா நாங்க பேசினா அது கடலை! அதையே நீங்க பேசினா டெக்னிகல் டிஸ்கஷனா? எந்த ஊர் நியாயம்பா இது? :)

10) யாரோ கஷ்டப்பட்டு அடிச்சு வெச்ச கோடை சும்மா அல்வாவாட்டும் கூகிள் ஆண்டவரிடம் வாங்கி ஒரு கட்டிங்க் ஒரு ஒட்டிங்க் போட்டு நீயே டெவலப் பண்ணின மாதிரி அத ஒழுங்கா டெஸ்ட் கூட பண்ணாம,எப்படிபா உன்னால சீன் போட முடியுது? டெஸ்டிங்க் டீம்னு ஒன்னு இருக்கு, நியாபகம் இருக்கா?

வெட்டியின் பதிவை பாத்ததும் டக்குனு தோணிச்சு. இதுல ஏதும் மனம் புண்படும்படி எழுதி இருந்தா சொல்லுங்க, தூக்கிடறேன்.

டிஸ்கி: நான் மேனேஜர் இல்லை. :)

53 comments:

கோவி.கண்ணன் said...

அம்பி,

ஐயையோ ஐயையோ......

வலையில் பல தற்கொலைகள் நடக்கப் போவுது !

ambi said...

கொலை விழாம இருந்தா போதும்னு நான் கடவுளை வேண்டிட்டு இருக்கேன் கோவி அண்ணா. :))

ஷங்கர் Shankar said...

// டிஸ்கி: நான் மேனேஜர் இல்லை ///

நீங்க மட்டும் மேனேஜர் ஆனா அவ்வளவுதான்!

அருண் said...

ஜூப்பர். நல்ல எதிர் பதிவு.

அபி அப்பா said...

அய்யோ அம்பி! இன்னாது இதல்லாம்! வேண்டாம் நாம எல்லாம் பத்து கேள்வி கேட்ட பத்து பேரும் உக்காந்து பேசுவோம். ஒரு மௌடிவுக்கு வருவோம், என்ன டீல் ஓக்கேவா?:-))

மெளலி (மதுரையம்பதி) said...

மிக அருமை அம்பி....பாலாஜியின் பதிவினைப் பார்க்கல்ல...பார்த்துட்டு வரேன் :-)

கைப்புள்ள said...

உங்க பதிவுகளைப் படிக்கிறவங்க பல பேரு மேனஜர் அல்லாதவர்களாக இருக்கறதுனால இந்த பதிவுக்கு எதிர்வினைகளும் தனிமனிதத் தாக்குதல்களையும் நான் அதிகமா எதிர் பாக்கறேன்.

ஆக்ரமன்...சாரி...

தாக்குங்கள்...அம்பின்னு ஒரு ஆள் இங்கே தனியா சிக்கிருக்காப்பல.
:)

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

தமிழ்மணம் ஜி டாக் மாதிரி ஒன்னு ரெண்டு விஷயம் மட்டும்தான் புரிஞ்சுது. ஆமாம், S/W இஞ்சினியர்னா யாருங்க? :)

G3 said...

idhellam ungala paathu unga manager ketta kelviya ???

badhil solliteengala??? :)))))))))

பரிசல்காரன் said...

ROFTL!!!!!!!!!!!!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

pudugaithendral said...

aaha neengaluma??

sari


ennikayila onnu koodiyachu

ரமேஷ் வைத்யா said...

பிரமாதம் போங்க‌

ambi said...

ஷங்கர், நான் கொஞ்சம் கொஞ்சம் நல்லவன் தான். நம்புங்க ப்ளீஸ். :))

நன்னி அருண். :)

ஹிஹி, என்ன அபி அப்பா? ரொம்பவே பதறீங்க? என் அப்பன் குதிருக்குள்ள இல்லை? :))

ambi said...

மதுரை அண்ணா, நீங்க ஒரு மேனேஜர்னு இப்படியா அப்பட்டமா காட்டிக்கறது? :))

வாங்க கைப்பு, ஏதேது, விட்டா ஆட்டோவும் குடுத்து, கைச் செலவுக்கு பணமும் குடுத்து என் வீட்டு அட்ரஸுக்கு அனுப்பி வைப்பீங்க போல. :))

சுந்தர், மன்னிக்கவும். எல்லாருக்கும் பொதுவா எழுதனும்னு தான் நினைப்பேன். சில சமயம் தப்பாயிடுது. S/W = Software.

நீங்க ஏன் லாஜிஸ்டிக்ஸ் பத்தி ஒரு தொடர் போடக் கூடாது? நானும் தலைய சொறிவேன் இல்ல? :))

ஜி3 அக்கா, இதெல்லாம் டூ மச். சில சமயம் தன்னெஞ்சே தன்னைச் சுடும். :))

நன்றி பரிசல். :))

ambi said...

நன்றி வலைப்பூக்கள்.

// தமிழ்ஜங்ஷன்//

இதுக்கு தமிழ்ல என்ன அர்த்தம்னு சொல்லுங்க, சேரலாமா?ன்னு யோசிக்கறேன். :))

குழுவிநர்= குழுவினர்

புதுகை அக்கா, இதுக்கு என்ன நாலு சாத்து சாத்தி இருக்கலாம்.

மிக்க நன்னி ரனேஷ் வைத்யா.

மணிகண்டன் said...

***
இதுல ஏதும் மனம் புண்படும்படி எழுதி இருந்தா சொல்லுங்க, தூக்கிடறேன்.
***

இது தான் டாப் நக்கல் அம்பி.

ambi said...

//இது தான் டாப் நக்கல் அம்பி.
//


@மணிகன்டன், மெய்யாலுமே பீல் பண்ணி அந்த வரிகளை எழுதினா இப்படியா நக்கல் அடிக்கறது? :))

நல்லா கோத்து விடறாங்க பா. :))

அறிவிலி said...

வெட்டிப்பயல் தான் இதுக்கு பதில் சொல்லனும்.

G3 said...

//ஜி3 அக்கா, இதெல்லாம் டூ மச். சில சமயம் தன்னெஞ்சே தன்னைச் சுடும். :))//

Aaha.. appadina unga idhayatha neenga innum unga thangamanikitta kudukaliya???

** vandha vela mudinjudhupa :))) **

மாசற்ற கொடி said...

அந்த "ONSITE" கேள்வி சூப்பர் !!

அன்புடன்
மாசற்ற கொடி

சந்தனமுல்லை said...

//யாராவது உன் செல்லுக்கு கூப்டா உடனே கட் பண்ணிட்டு டக்குனு ஆபிஸ் போனை தேடறீயே, இதோட பில்லை உன் சம்பளத்துல கழிச்சுடலாமா?//

lol!


//உனக்கு சம்பளம் என்ன தமிழ்மணமா குடுக்குது?
//

:-))

வெட்டிப்பயல் said...

சூப்பர்...

இன்னுமே நிறைய கேள்வி கேக்கலாமே ;)

நான் வேணா தனியா ஒரு பதிவு போடவா?

மங்களூர் சிவா said...

டிஸ்கி சூப்பர்!!!!

Anonymous said...

பிரமாதமான பதிவு அம்பி.

Anonymous said...

பிரமாதமான பதிவு அம்பி........

தி. ரா. ச.(T.R.C.) said...

நான் மானேஜர் இல்லை. இந்த மாதிரி பதிவு போட்ட அப்பறம் அந்த ஆசை வேறே இருக்கா?

பழூர் கார்த்தி said...

ஏங்க இவ்ளோ ஃபீல் பண்ணி கேள்வி கேட்ருக்கிங்களே, இதுக்கெல்லாம் அப்படியே பதில் எழுதி அடுத்த பதிவை போடுங்களேன் :-)
ஹிஹிஹி

ஸ்ரீதர்கண்ணன் said...

3) அப்ரைஸல் டையத்துல மட்டும் ஒரு நாளைக்கு பத்து தடவ என்னை பாத்து சிரிக்கிறியே ஏம்பா?

அந்த மூஞ்சிய ஒரு நாளைக்கு ஒரு தடவ பாத்தாவே night தூக்கம் வர மாட்டேங்குது இதுல பத்து தடவ பாத்து சிரிக்கிர்ராங்கன்னு வேற :)

டிஸ்கி: நான் S/W Engineer இல்லை. :)

நல்ல நகைச்சுவை பதிவு ..

rapp said...

//இதுல ஏதும் மனம் புண்படும்படி எழுதி இருந்தா சொல்லுங்க, தூக்கிடறேன்.//

அப்டி புண்படும்படியா இதுல என்னா இருக்குன்னும் சொல்லிருக்கலாம் :):):)

//வார நாட்கள்ல குடுத்த வேலைய ஜவ்வா இழுத்து வெள்ளிகிழமை வரை வெச்ருந்தா நாங்க எப்படிபா அதுக்கு பொறுப்பாளி ஆக முடியும்? உனக்கு சம்பளம் என்ன தமிழ்மணமா குடுக்குது?//


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.......எப்போலருந்து சம்பளம் கொடுக்கறவங்களுக்கு வேல செஞ்சு கொடுக்கணும்னு புது சட்டம் அமுலுக்கு(அமுலுவுக்கு இல்ல:):):)) வந்தது?????????:):):)

//ஆன் சைட் போயிட்டு வந்தபுறம் ஒரு வாரத்துக்கு கால் கீழ படாம நடக்கறீயே அது ஏன்பா? //இப்போ எதுக்கு அண்ணியை தேவையில்லாம வம்புக்கு இழுக்கறீங்க, அதுவும் அது முடிஞ்சு ரெண்டு வருஷம் ஆனப்புறம்:):):)

(எப்புடி:):):))

திவாண்ணா said...

:-))
அடுத்த 10 கேள்வி யாருப்பா?

ராமலக்ஷ்மி said...

அபி அப்பா பதிவில் ஒன்பதாவது பாயிண்டுக்கு அகமகிழ்ந்து அதன் எதிரொலியாய்...:))! சீக்கிரமே மேனஜர் ஆக வாழ்த்துகிறேன்:))!

மேவி... said...

;-))

மேவி... said...

ஐயோ ....
மானேஜர்கள் S/W இஞ்சினியர் அஹ ......
அப்ப
என் அண்ணனுக்கு இந்த லிங்க்யை அனுப்பி ....
அவரை வந்து பின்னோட்டம் போட சொல்ல்கிறேன்.....

மேவி... said...

"1) அது எப்படி கண்ணா, ஒரு மெயின்டன்ஸ் பிராஜக்டை கூட இப்படி ஜவ்வா இழுத்து, இழுத்து உன்னால வேலை செய்ய முடியுது?"
அண்ணா உனிவேர்சிட்டி ல படிச்சவங்களை வேலைக்கு வைத்தால் ...
இப்படி தான்....
எக்ஸாம் பேப்பர் ல எழுதுற மாதிரியே எல்லாத்தையும் பண்ணுவாங்க...
ஹி ஹி ஹி

மேவி... said...

"2) காலையில வந்தவுடனே தமிழ்மணம், ஜிடாக்குல போஸ்ட் போட்ருக்கேன், பாருங்க!னு அறைகூவல், போதாகுறைக்கு யாஹு மெயில், ஹாட்மெயில். ஆனா நாங்க வரது தெரிஞ்ச உடனே பிராஜக்டுல மூழ்கி முத்தெடுக்கற மாதிரி ஒரு சீன் எப்படி ராசா உன்னால போட முடியுது?"
எல்லாம் பழக்க தோஷம் தான்

மேவி... said...

"3) அப்ரைஸல் டையத்துல மட்டும் ஒரு நாளைக்கு பத்து தடவ என்னை பாத்து சிரிக்கிறியே ஏம்பா?"
அப்பவாது உங்களை பார்த்து smile பண்ணுறேன்ன்னு சந்தோஷ படுங்க

மேவி... said...

"4) அப்ரைஸலுல குறைவா ரேட்டிங்க் குடுத்தா உடனே நவுக்ரில ரெஸ்யூம் அப்டேட் பண்றியே அது ஏன் ராசா? டாப் மேனேஜ்மெண்ட் சொல்றதை தானே நாங்க செய்றோம், என்ன, வெச்சுகிட்டா வஞ்சனை பண்றோம்?"
போட்டு கொடுக்கறதும் நீங்க தானே

மேவி... said...

"5) யாராவது உன் செல்லுக்கு கூப்டா உடனே கட் பண்ணிட்டு டக்குனு ஆபிஸ் போனை தேடறீயே, இதோட பில்லை உன் சம்பளத்துல கழிச்சுடலாமா?"
எல்லாம் ஆபீஸ் பெயரை promote பண்ண நான் எடுக்கும் முயற்சி தான்....
உள்ள நோக்கம் எதுவும் இல்லைங்க

மேவி... said...

"6) மானேஜர்னாலே டெக்னிக்கலா ஒன்னும் தெரியாது!னு நீயே எப்படிபா முடிவு செஞ்சுக்கற? நாளைக்கு நீயும் மேனேஜர் ஆனபிறகு உனக்கும் இது பொருந்துமா?"
அதை அப்புறம் பார்த்துக்கலாம் .....

மேவி... said...

"7) வார நாட்கள்ல குடுத்த வேலைய ஜவ்வா இழுத்து வெள்ளிகிழமை வரை வெச்ருந்தா நாங்க எப்படிபா அதுக்கு பொறுப்பாளி ஆக முடியும்? உனக்கு சம்பளம் என்ன தமிழ்மணமா குடுக்குது?"
நீங்க வேலை தருவதுனால் தானே அது லேட் ஆகுது .........
இதுக்கு நாங்க பொறுப்பா.....

மேவி... said...

"8) ஆன் சைட் போயிட்டு வந்தபுறம் ஒரு வாரத்துக்கு கால் கீழ படாம நடக்கறீயே அது ஏன்பா?"
girl friend கிட்ட இருந்து ஒரு வாரம் எஸ்கேப் ல .... அதனால் தான்

மேவி... said...

"9) டீம்ல ஒரு நல்ல பிகரோட ஜகஜமா நாங்க பேசினா அது கடலை! அதையே நீங்க பேசினா டெக்னிகல் டிஸ்கஷனா? எந்த ஊர் நியாயம்பா இது? :)"
நாங்க எல்லாம் யூத் சார்...
நீங்க அங்கிள் ஆகியாச்சு ல ....
சும்மா இருங்க ....

மேவி... said...

"10) யாரோ கஷ்டப்பட்டு அடிச்சு வெச்ச கோடை சும்மா அல்வாவாட்டும் கூகிள் ஆண்டவரிடம் வாங்கி ஒரு கட்டிங்க் ஒரு ஒட்டிங்க் போட்டு நீயே டெவலப் பண்ணின மாதிரி அத ஒழுங்கா டெஸ்ட் கூட பண்ணாம,எப்படிபா உன்னால சீன் போட முடியுது? டெஸ்டிங்க் டீம்னு ஒன்னு இருக்கு, நியாபகம் இருக்கா?"
அதுக்கு என்ன இப்போ ....

மேவி... said...

"டிஸ்கி: நான் மேனேஜர் இல்லை. :)"
நம்பிட்டேன்.......

Karthikeyan Ganesan said...

super-na

Thanks,
Karthikeyan G

தாரணி பிரியா said...

எல்லாமே சூப்பர். நீங்க இப்படித்தான் உங்க டீம்ல இருக்கறவங்களை எல்லாம் கேட்கறீங்க சொன்னங்களே ?

Anonymous said...

வருகைக்கு நன்னி அறிவிலி.

@ஜி3 அக்கா, ஏன்? ஏன் இப்படி...? :))

மாசற்ற கொடி & சந்தன முல்லை, வருகைக்கு மிக்க நன்னி.

பாராட்டுக்கு நன்னி பாலாஜி. பத்து கேள்விகள் தானே ரூல்ஸ்? தனிப் பதிவா? சூப்பர். படிக்க காத்ருக்கோம். :))

நன்னி ம-சிவா, வடகரை வேலன் & அனானி.

வாங்க TRC சார், உங்களை சொல்வேனா? நீங்க கூட ஏதோ டெபுடி டைரக்டரா இருந்தீங்க இல்ல? :p

Anonymous said...

பழூர் கார்த்தி, நல்லா கோர்த்து விடறீங்க பா. கேள்வி கேக்கறது தான் நம்ம வேலை.

ஸ்ரீதர் கண்ணன், ஹிஹி, சரியா சொன்னீங்க. ஒரு தரமே கஷ்டம் தான். :))

ராப், நீ என்ன அண்ணி கிட்ட என்னை போட்டு குடுக்கறதுலயே குறியா இருக்க? எதுனாலும் பேசிக்கலாம். முடியல. :))

வருகைக்கு நன்னி திவாண்ணா.

@ரா ல, இத பாத்தா வாழ்த்து மாதிரி தெரியலையே? :))

மேவீ, அடித்து ஆடிய மேவீ அண்ணனுக்கு மிக்க நன்னி. நம்புங்க பா, நான் அவரில்லை. :))

தாரணி ப்ரியா, அது எவரோ கெளப்பி விடற புரளி, நம்பாதீங்க. :))

மேவி... said...

"மேவீ, அடித்து ஆடிய மேவீ அண்ணனுக்கு மிக்க நன்னி. நம்புங்க பா, நான் அவரில்லை. :))"


ennathu mayvee annana....
sir naan youth thaan...
enna six packs than illai...
nambunga thala naan youth thaan....

Anonymous said...

neenga manager illanu solratha naanga nambittom!!!ivvalvu anubavichu ezhdarda paartha ungalla yaaro kelvi kettu adhukku neenga bathil solla theriyama samalichha madhiriilla thonudhu.panchatantram dialogue nyapagam varudhu...kelvi kekkardhu romba sulabam.....
nivi.

Anonymous said...

மேவீ, அண்ணன் என்பது ஒரு பட்டம், அஞ்சா நெஞ்சன், அண்ணன் அழகிரி அத மாதிரி, அதனால தைரியமா ஏத்துகுங்க. :))

நிவி, சில சமயம் என் மனசாட்சி பதிவு எழுதிடும். அதான் இப்படி ஆயிடுச்சு. வேற ஒன்னும் இல்ல. :))

மேவி... said...

" ambi said...
மேவீ, அண்ணன் என்பது ஒரு பட்டம், அஞ்சா நெஞ்சன், அண்ணன் அழகிரி அத மாதிரி, அதனால தைரியமா ஏத்துகுங்க. :))"ஏத்துக்கிறேன் ....
அண்ணன் என்ற பட்டத்தை.... :-))

okva