Wednesday, April 30, 2008

ரங்கமணி Vs கிச்சன்

இந்த பெண்கள் மத்த விஷயங்களில் 33 சதவித இட ஒதுக்கீடு கேட்டாலும், கிச்சன் சமாசாரங்களில் ஆண்களை ஒதுக்கியே வைத்து நூறு சதவிதத்தையும் தம்மிடமே வைத்துள்ளனர். இரண்டு நாள் தங்கமணிகள் பிறந்த வீட்டுக்கு போவதாக இருந்தாலும், நீங்க ஓட்டலில் பாத்து கொள்ளுங்கள்! தேவையில்லாம கிச்சன்ல நுழைய வேணாம்!னு ஒரு அபாய எச்சரிக்கை செய்து விட்டு தான் பெட்டியை தூக்குவார்கள். நாமளும், அவங்க சொன்ன சொல்லை மீறாம திக்கற்ற ரங்குகளுக்கு தெருவோர ஓட்டலே கதி!னு சரணடைவோம்.

சமையல் ஒன்னும் பெரிய கம்ப சூத்திரம் இல்லை!னு முதலில் நாம் நம்ப வேணும். மனுஷனுக்கு நம்பிக்கை தான் முக்யம். சாதரணமா நாம காலையில் எழுந்தவுடன் ஒரு காப்பி, அப்புறமா ஏதேனும் ஒரு டிபன், மதியம் லஞ்சுக்கு என்ன பெரிசா இருக்க போவுது, ஒரு காய், சாம்பார் அல்லது ரசம், தயிர், முடிந்தால் ஒரு அப்பளம்/வடகம் இவ்ளோ தான் மேட்டர். இதுக்கு போய் பயப்படனுமா என்ன?

இதோ நானும் கோதாவுல குதிச்சாச்சு. காலை எழுந்து பல் தேய்த்தவுடன் அடுத்தது காப்பி தானே. அடடா! காப்பி வேணும்னா முந்தய நாளே பால் கூப்பன் வெச்சு இருக்கனும். ஐபிஎல் மேட்சுல கிரிக்கெட்டை (மட்டும்) ஆ!னு வாய் பிளந்து இரவு பதினோரு மணி வரை பாத்ததில் பால் கூப்பன் வைக்க மறந்தாச்சு. சரி விடுங்க, காப்பி குடிக்காதவங்க எவ்ளோ பேர் உலகத்துல இருக்காங்க.

டிபன் கடைக்கு போவோம். நேத்திக்கே மாவாட்டி வெச்சதுனால தோசை ரெடி பண்ணிடலாம். குடுகுடுனு போய் தோசைக்கல்லை கேஸ் அடுப்புல வெச்சதுக்கு அப்புறம் தான் நினைவுக்கு வருது, மாவு இன்னும் பிரிஜ்ஜுல தான் இருக்கு, அதை ஒரு பத்து நிமிஷம் வெளில எடுத்து வைக்கனுமே! சரி அதுவும் பண்ணியாச்சு.

தோசை வார்க்க எண்ணெய் வேணுமில்ல. நல்லெண்னையா? ரீபைண்ட் ஆயிலா? ஒரு மனுஷனுக்கு என்னவெல்லாம் சந்தேகம் வருது? நல்லெண்னையா தான் இருக்கும். ஆமா! ஜோதிகா கூட தோசைக்கு ஒரு கப் இதயம் நல்லெண்ணை தானே விடறாங்க. அடடா அம்பி! என்னே ஒன் பொதுஅறிவு! ஆமா! நம்மை நாம் தான் முதலில் மெச்சிக்கனும். சமைக்கும் போது அது ரொம்ப முக்யம்.

அட, தோசை வாக்க சட்டுவம் வேணுமில்ல. (ம்ஹும், மறக்க கூடிய பொருளா அது?)
பொதுவாக எல்லோர் வீட்டு கிச்சனும் ஒரு அலிபாபா குகை மாதிரி தான். தங்கமணி "திறந்திடு சீசேம்!னு சொன்னா தான் எல்லா பொருளும் நம் கண் முன்னால் வரும் போலிருக்கு. அது எப்படிங்க தங்கமணிகள் அவங்களுக்கு மட்டும் தெரியும்படியா ரசபொடியிலிருந்து, பெருங்காயம் வரைக்கும் மறைச்சு வெக்கறாங்க. நம்ம கண்ணுக்கு ஒன்னுமே தெரிய மாட்டேங்குது. எல்லாம் காலகாலமா ஆண்களுக்கு எதிரா நடந்துட்டு வர கூட்டு சதி.

கிச்சனையே ஒரு புரட்டு புரட்டி, ஒரு வழியா சட்டுவத்தை பார்த்ததும், "கண்டேன் சட்டுவத்தை!"னு துள்ளி குதிக்காத குறை தான்.
ஒரு வழியா கல்லுல தோசை விட்டாச்சு. அட! காலைல சன் மியூசிக்குல வர அந்த மஹாலட்சுமிய( நிஜ பெயரும் அது தான்) பாக்கலைனா இந்த நாள் எப்படி இனிய நாளாகும்? அடடா! அடடா! என்ன நளினம், என்ன தமிழ் உச்சரிப்பு!

தோசைய திருப்பி போடனுமில்ல? திரும்பி வந்து பாத்தா தோசை கலரும், தோசகல்லு கலரும் ஒன்னா இருக்கு. சே! அடுத்த தோசைல கவனமா இருக்கனும். காலைல சன் மியூசிக்குல இனிமே கந்த சஷ்டி கவசம் மட்டும் தான் ஒலிபரப்பனும்!னு சட்டம் கொண்டு வரனும். ரெண்டாவது தோசை கல்லை விட்டு வர சண்டிதனம் பண்ணியதில் கொத்து பரோட்டாவாக மாறி இருந்தது.

சரி, இப்ப என்ன ஆகி போச்சு? எல்லாரும் என்ன ஒரு முழு தோசைய ஹார்லிக்ஸ் மாதிரி, அப்படியேவா சாப்டறாங்க? பிச்சு பிச்சு சாப்டற வேலை மிச்சம்.

இனிமே லஞ்சுக்கு போவோம்.
கேஸ் அடுப்புல ஒரு சைடு குக்கர வெச்சு, இன்னொரு சைடுல பீன்ஸை வதக்கி, கொஞ்ச நேரம் கழிச்சு பருப்பை கரச்சு ஊற வெச்ச புளியோட கொதிக்க விட்டா சாம்பார் ரெடி. முடிஞ்சது சமையல்! அப்படினு நான் இங்க ஒரு பாராவில எழுதற மேட்டர் இல்லைனு பிறகு தான் புரிஞ்சது.

பீன்சை முந்தின நாளே நறுக்க வேண்டி இருக்கு, புளிய முன்னாடியே ஊற போடனும் போல, குக்கருக்கு மறக்காம காஸ்கட் போட வேண்டி இருக்கு. ஒரு நாள் அரிசிக்கு தண்ணிய குறைச்சா சரியா வரலைனு, மறு நாள் தண்ணிய கூட்டி வெச்சா சுட சுட பொங்கல் வருது. ஸ்ஸ்ப்ப்பா!
வருஷ கணக்குல இத எல்லாம் பொறுமையா செஞ்சு, நாம குடுக்கற பின்னூட்டத்தையும் வாங்கிட்டு, எப்படி தான் பெண்கள் பொறுமையா இருக்காங்களோ?

இங்க அம்பி! அம்பினு ஒரு மானஸ்தன் இருந்தானே? எங்கப்பா அவன்?னு நீங்க கேக்கறது நல்லா காதுல விழுது.
*************************************************
இந்த இடுகையும் இரண்டு போட்டிக்கு தான்!

26 comments:

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

=))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

:) வாழ்த்துக்கள்.

Sumathi. said...

ஹாய் அம்பி,

ஹலோஓஓஒ இதுல்லாம் உங்களுக்கே ஓவரா இல்ல? தினமும் நீங்க செய்யற வேலயை என்னமோ புதுசா கல்யாணம் செஞ்ச பொண்ணு சொல்ற மாதிரி......

ஓஓஓஓஓஓஒ.... இன்னும் கொஞ்ச நாளுக்கு உங்க வசமா சமையல் ரூம்..நடத்துங்க.

வல்லிசிம்ஹன் said...

ஐபிஎல் மேட்சுல கிரிக்கெட்டை (மட்டும்//
இதை நம்பணுமா:00)


தோசை வார்க்க சட்டுவம் ஒண்ணு மட்டும் போறாதே. மாவு எடுக்கக் கரண்டி??
இத்தனைக்கும் வ்வ்வேற இருத்தர்தான் சமையல்னு வேற கேள்விப்பட்டேன்.
ம்ம். பரவாயில்லை. இப்படியாவது கத்துக்கிட்டா பின்னாட்களில் உபயோகமா இருக்கும்.

அபி அப்பா said...

முத்துலெஷ்மி எதுக்கு வாழ்த்து சொன்னாங்கன்னு புரிஞ்சு போச்சுங்க புரிஞ்சு போச்சு!நானும் வாழ்"தித்திக்கிறேன்":-)))

சுமதி சொல்வதும் சரிதான். இந்த பதிவிலே தங்கமணி என்று வரும் இடங்களில் ரங்கமணி என்றும் ரங்கமணி க்கு பதிலாக தங்கமணின்னும் போட்டு படிச்சேன் நான்:-)))

G3 said...

Eppadi adhu first time kitchenla nozhayara maadhiriyae scenea maintain panni irukkeenga???

Kalyaanamaana modhal naalla irundhae neenga dhaan samayalnu ulavuthurai thagaval munnadiyae vandhaachu :P

G3 said...

//இந்த பதிவிலே தங்கமணி என்று வரும் இடங்களில் ரங்கமணி என்றும் ரங்கமணி க்கு பதிலாக தங்கமணின்னும் போட்டு படிச்சேன் நான்:-)))//

Indha idea supera irukkae :))

மெளலி (மதுரையம்பதி) said...

கலக்கிட்டீங்க அம்பி....காலைல பேசினோம் மத்யானம் பதிவு அதுவும் (நகைச்சுவைப்பதிவு) ரெடி....சூப்ப்ர்.

@வல்லியம்மா, கரெக்டா பிடிச்சீங்க பாயிண்டை...ஏதேது உங்க வீட்டு சிங்கம் கிச்சன் பக்கம் வரமாட்டாரு போல?, உங்களுக்கு இம்புட்டு தெரிஞ்சிருக்கு? :)

பினாத்தல் சுரேஷ் said...

//அவங்களுக்கு மட்டும் தெரியும்படியா ரசபொடியிலிருந்து, பெருங்காயம் வரைக்கும் மறைச்சு வெக்கறாங்க.//

தங்கமணி திரும்பி வரதுக்கு ரெண்டு நாள் முன்னால, எல்லாத்தையும் இண்டர்சேஞ்ச் பண்ணி வச்சுடுங்க.
செம காமெடியா இருக்கும். இன்னிக்கு நீங்க படற அத்தனை பாடும் அன்னிக்கு அவங்க படுவாங்க பாருங்க - கண்கொள்ளாக்காட்சிங்க அது!

அடி வாங்கினா என்ன? ஆதிக்கத்தை ஒழிக்கறதுதானே முக்கியம்?

இலவசக்கொத்தனார் said...

இப்படி எல்லாம் எழுதி உம்ம வீட்டில் தங்கமணி சமைப்பதாகவும், உமக்குக் கிச்சன் இருக்கும் திசையே தெரியாத மாதிரி எல்லாம் படம் காட்டும் அம்பியின் 'சாமர்தியத்தைப்' பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.

இப்படிக்கு
திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனவன்.

திவாண்ணா said...

scrambled தோசை நீங்களும் போடறீங்களா?
நல்லது!
:-))

Anonymous said...

/சரி, இப்ப என்ன ஆகி போச்சு? எல்லாரும் என்ன ஒரு முழு தோசைய ஹார்லிக்ஸ் மாதிரி, அப்படியேவா சாப்டறாங்க? பிச்சு பிச்சு சாப்டற வேலை மிச்சம்./

How true.
I like your writing style very much. I really enjoyed it. Keep it up.

Ravi

My days(Gops) said...

13 la aaajar

My days(Gops) said...

//கிச்சன் சமாசாரங்களில் ஆண்களை ஒதுக்கியே வைத்து நூறு சதவிதத்தையும் தம்மிடமே வைத்துள்ளனர் //

ஹி ஹி ஹி எத்தனை வீட்டில இப்படி'னு தான் தெரியல.. :)


//ஒரு முழு தோசைய ஹார்லிக்ஸ் மாதிரி, அப்படியேவா சாப்டறாங்க?//
rotfl.... அண்ணாத்தே, ஹார்லிக்ஸ அப்படியே சாப்ட முடியுமா? :P

My days(Gops) said...

//வருஷ கணக்குல இத எல்லாம் பொறுமையா செஞ்சு, நாம குடுக்கற பின்னூட்டத்தையும் வாங்கிட்டு, எப்படி தான் பெண்கள் பொறுமையா இருக்காங்களோ?
//


சரி சரி.... எல்லாரும் நம்புன மாதிரி நானும் நம்பவா? :P

Geetha Sambasivam said...

//ஆமா! ஜோதிகா கூட தோசைக்கு ஒரு கப் இதயம் நல்லெண்ணை தானே விடறாங்க. அடடா அம்பி! என்னே ஒன் பொதுஅறிவு! //

எதை மறந்தாலும் இதை "ஜொள்"ளறதை நாம மறக்க மாட்டோமே! :P

Ramya Ramani said...

//இந்த பதிவிலே தங்கமணி என்று வரும் இடங்களில் ரங்கமணி என்றும் ரங்கமணி க்கு பதிலாக தங்கமணின்னும் போட்டு படிச்சேன் நான்:-))) //

ரிப்பீட்டு!

//அடடா அம்பி! என்னே ஒன் பொதுஅறிவு! ஆமா! நம்மை நாம் தான் முதலில் மெச்சிக்கனும். சமைக்கும் போது அது ரொம்ப முக்யம்.//

அம்பி அண்ணா உங்க Self-Confidence புல்லரிக்குது!

தி. ரா. ச.(T.R.C.) said...

அம்பி இதைத்தான் நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்றார்களோ. இதை நான் எழுதுமிடம் வேலுர் 110 டிகிரி வெய்யில்.

Radha Sriram said...

ஆஹா இன்னொண்ணு கண்டு பிடிச்சிட்டேன்...

திருநெல்வேலி

சட்டுவம்

தஞாவூர்

தோசை திருப்பி..

ILA (a) இளா said...

ஆக மொத்தம் அன்னிக்கு சாப்பிடலைதானே.....

ambi said...

நன்றி சாமான்யன்.

உங்களுக்கு கற்பூர புத்தி முத்தக்கா. :))

சுமதிக்கா, என்ன சொன்னாலும் நம்ப மாட்டீங்க போலிருக்கே. :))

ஆமா, தம்பியுடையான் கிச்சனுக்கு அஞ்சான். பின்னாட்களிலா? :p

ambi said...

அபி யப்பா! இனிமே எல்லா ரகசியங்களையும் உங்க கிட்ட தான்பா சொல்லி வைக்கனும்.

//தங்கமணி என்று வரும் இடங்களில் ரங்கமணி என்றும் ரங்கமணி க்கு பதிலாக தங்கமணின்னும் போட்டு படிச்சேன் நான்//

வேணாம் அழுதுடுவேன். :))

ஜி3 அக்கா, என்ன அதிசயமா இந்த பக்கம்?

எல்லாம் நீங்க குடுத்த ஊக்கம் தான் மதுரையம்பதி அண்ணா.
அப்படியே அவங்க வீட்டு சிங்கம் கிச்சன் பக்கம் வந்தாலும், வல்லிம்மா சொல்வாங்களா என்ன? :p

ambi said...

//ரெண்டு நாள் முன்னால, எல்லாத்தையும் இண்டர்சேஞ்ச் பண்ணி வச்சுடுங்க.
//

@suresh, நல்ல ஐடியாவா இருக்கே! (மனசாட்சி: வேணாம் வலய விரிக்கிறான், வலய விரிக்கிறான்) :))

//அடி வாங்கினா என்ன? ஆதிக்கத்தை ஒழிக்கறதுதானே முக்கியம்?
//

இது தான் வைப்பாலஜியின் கொள்கையா? :p

//கிச்சன் இருக்கும் திசையே தெரியாத மாதிரி எல்லாம் படம் காட்டும் அம்பியின் 'சாமர்தியத்தைப்' பார்த்தால் //

@koths, கரக்ட்டா பாயிண்ட புடிக்கறான்யா நம்மாளு.
வாங்கண்ணே வாங்க! டயபர் மாத்தியாச்சா? :p

@ravi, thanx for the comment ravi. :)

//எல்லாரும் நம்புன மாதிரி நானும் நம்பவா?//

வாப்பா கோப்ஸ். நம்பித்தான் ஆகனும். :)

//scrambled தோசை நீங்களும் போடறீங்களா?
//
@diva sir, ஆமா, புரியுது, புரியுது.

//எதை மறந்தாலும் இதை "ஜொள்"ளறதை நாம மறக்க மாட்டோமே!//

@geetha madam, இப்படியா பூதகண்ணாடி வெச்சு பாக்கறது? :p

//அம்பி அண்ணா உங்க Self-Confidence புல்லரிக்குது!
//

அவ்வ்வ்வ்வ்வ், பேச்சே வரலை, நன்னி ரம்யா தங்கச்சிக்கா! :))

//நிழலின் அருமை வெய்யிலில் தெரியும் என்றார்களோ//

ஒரு மாசத்துக்கு முன்னாடி மேடம் மும்பை போன போது கூட இதே கதை தான்னு கேள்விபட்டேன். :))

//திருநெல்வேலி

சட்டுவம்

தஞாவூர்

தோசை திருப்பி..
//

சூப்பர், உங்களுக்கு அப்படியே உங்க அம்மா மாதிரி கற்பூர புத்தி ராதாக்கா. :)))

//ஆக மொத்தம் அன்னிக்கு சாப்பிடலைதானே//

@ila, ஆபிஸ்ல கேன்டீன்னு ஒன்னு இருக்குண்ணா. :))

PPattian said...

நான் படிச்ச ரெண்டு பதிவிலயே காமடி பொங்குது இதுலதான்.. ஆனாலும் என் ஓட்டு உங்களுக்கு இல்ல.. என் ஓட்டு எனக்குதான் :)

ராமலக்ஷ்மி said...

:))))))))))))))))!

புதுகைத் தென்றல் அனுப்பிய வயிற்று வலி மருந்து பார்ஸல் இன்றுதான் கிடைத்தது. கையில் வைத்துக் கொண்டு தைரியமா வந்தேன்.

Unknown said...

新女性徵信
外遇調查站
鴻海徵信
亞洲徵信
非凡徵信社
鳳凰徵信社
中華新女性徵信社
全國新女性徵信社
全省女人徵信有限公司
私家偵探超優網
女人感情會館-婚姻感情挽回徵信
女子偵探徵信網
女子國際徵信
外遇抓姦偵探社
女子徵信社
女人國際徵信
女子徵信社
台中縣徵信商業同業公會
成功科技器材
女人國際徵信社
女人國際徵信
三立徵信社-外遇
女人國際徵信
女人國際徵信
大同女人徵信聯盟
晚晴徵信