Monday, August 14, 2006

50) எந்தரோ மஹானுபாவுலு!.....



"எந்தரோ மஹானுபாவுலு!
அந்தரிக்கி வந்தனமு!!"

- இந்த லோகத்தில் வாழும் எத்தனையோ கோடானுகோடி புண்ணியவான்களை நான் நமஸ்கரிகிறேன்!
- நாதப் பிரம்மம் தியாராஜ ஸ்வாமிகள்.

தாமிர பரணி நதிக்கரையாம் ஆழ்வார்குறிச்சியை மையமாக வைத்து சத்தமில்லாமல் ஒரு பசுமைப் புரட்சி நடந்து வருகிறது. அங்கு உள்ள பரமகல்யாணி கல்லூரியில் பயோ டெக்னாலஜி துறையில் பணி புரியும் இளம் புரபஸர் திரு.விஷ்வநாதன் அவர்கள் The Tree என்று ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தை தொடங்கி ஓசைப் படாமல் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அதை பற்றி என் உடன்பிறப்பு மூலம் கேள்விப்பட்டு, சரி, நமது 50-வது பதிவாக போட்டு உலகுக்கு தெரியபடுத்தலாம்னு ஒரு சின்ன ஆசை.

"தனி மரம் தோப்பாகாது!" என்பது போல தனக்கு மட்டும் ஆர்வம் இருந்து பயன் இல்லை, ஒரு சொந்த லாபமற்ற நிறுவனமாக மாற்றினால் தான் முடியும் என உணர்ந்து கொண்ட நமது புரபஸர், அரும்பாடு பட்டு இதை தொடங்கினார்.

இந்த நிறுவனத்தின் சில நோக்கங்கள்:
1) மக்களிடையே மரங்களை பற்றியும், பசுமையாக நமது சுற்றுபுறத்தை வைக்க என்ன செய்ய வேண்டும்? என பல நல்ல விஷயஙளை எடுத்து கூறுவது.

2) சொன்னால் மட்டும் போதாது! காரியத்திலும் இறங்கி, மரக் கன்றுகளை தந்து உதவி அதை பரமாரிக்கவும் உதவி செய்வது.

இலவசமாக அட்வைஸ் சொல்ல ஆயிரம் பேர் வருவா! ஆர்வத்தை கெடுக்க பத்தாயிரம் பேர் வருவா! பர்ஸை திறந்து பத்து ரூபாய் தர பத்து பேர் கூட வர மாட்டா நம்ம ஊருல!

அது போல, "இந்தாப்பா, விச்சு! உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை எல்லாம்? லோகத்தை நம்மால மாத்த முடியாது! எல்லாம் விதி படி தான் நடக்கும்!னு சில Old Monks(அய்! இது என் பிராண்டு பேர் ஆச்சே!னு ஷ்யாம் குதிக்கறான் பாரு!) சொன்னதை எல்லாம் கேட்டு சோர்ந்து விடாமல், "உன்னால் முடியும் தம்பி!" சத்யமூர்த்தி மாதிரி உற்சாகத்துடனும், ரமணா விஜயகாந்த் ரேஞ்சுக்கு ஒரு மாணவர் படை அமைத்து உண்மையிலேயே களப்பணி ஆற்றி வருகிறார்.
சில பேர் வயசான காலத்துல ஊர், ஊரா சுத்திட்டு களப்பணி ஆற்றுகிறேன்!னு பீலா விடுகிறார்களே, அது மாதிரி எல்லாம் இல்லை, இவருடைய களப்பணி.

சில தனியார் தொண்டு நிறுவனங்கள், மற்றும் தமிழக அரசாங்கத்தின் குறிப்பிட்ட ஒரு பிரிவின் நிதி உதவி யானை பசிக்கு சோள பொரி மாதிரி வருகிறது.

மத்திய அரசின் நிதி கிடைக்க அளித்த பைல்கள், வழக்கம் போல கோடு வைத்து கோவிந்தா சட்டை போட்ட கொட்டாவி விடும் ஆபிஸர்கள் மேஜையில், அவர்கள் பிஸி! என காட்ட சாட்சியாக உள்ளது. இந்தியன் தாத்தா மாதிரி, நமது பிளாக் உலக அம்மையார்(பாட்டி!னு யாராவது வாசித்தால் அதுக்கு நான் பொறுப்பில்லை)
திருமதி கீதா அவர்கள் போய் குத்தினால் தான் வேலை நடக்குமோ என்னவோ?.(ஹி, ஹி, இது எப்படி இருக்கு மேடம்?)

கோவிலில் ஒரு டியூப் லைட் போட்டாலே "மாவு.வேவு.சேவு.முனா.பானா"னு தனது பாட்டன், மாமன், மச்சினி பேர்களை அந்த டியூப் லைட்டில் எழுதி விட்டு, "ஒரு விளம்பரந்தேங்க்"னு பல்லை காட்டும் இந்த காலத்தில் தனது பேர் வெளியே தெரியாமல் இவர் ஆற்றும் சேவைகள் ஏராளம்! ஏராளம்!

தினமும் ஒரு ரூபாய்! ஒரே ஒரு ரூபாய் வீதம் நீங்கள் ஒரு வருடம் சேமித்து தந்தால் உங்கள் பெயரில் அல்லது உங்கள் பெற்றோர் பெயரிலோ மரம் நட்டு அதை பராமரிக்கும் பொறுப்பையும் இந்த நிறுவனம் ஏற்று கொள்கிறது.

எத்தனை காலத்துக்கு தான் அசோகர் மரம் நட்டார்!னு படிப்பது?
உங்கள் பெயரும் வரலாற்றில் இடம் பெறட்டுமே!

"இந்த பாட்டை யாருக்கு டெடிகேட் பண்ண விரும்பறீங்க?"னு சன் மியூசிக்கில் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்ன கிளி கேட்டால் நம்ம ஆளுங்க ஒரு பெரிய லிஸ்டே குடுப்பாங்க. இந்த மரத்தை அக்கா அசினுக்கு டெடிகேட் பண்றேன்! அண்ணன் சூர்யாவுக்கு டெடிகேட் பண்றேன்! ஹி,ஹி மச்சினி கோபிகாவுக்கு டெடிகேட் பண்றேன்!னு ஸ்டைலா சொல்லிக்கலாம் இல்ல? என்ன நான் சொல்றது?

"சோறு போட்ட கோவிந்தசாமிக்கு மொய் பணம் நூறு ரூபாய்ய்ய்ய்!"னு செந்தில் மாதிரி ஏலம் விடும் இந்த காலத்தில், தன் சொந்த அக்கா வீட்டு கிரகபிரேவேசத்துக்கு கூட ஆயிரம் ரூபாய்க்கு மர கன்றுகளாய் வாங்கி நட்டு விட்டார் இந்த புரபஸர்.

இவரது தளராத முயற்சிகளை பார்க்கும் போது
இந்த பாட்டில் வரும் வரிகளான "அந்த வாசுதேவன், இவன் தான்!" என பாட தோன்றுகிறது.

இந்த நிறுவனத்தை பற்றி மேலும் தகவல் அறியவோ அல்லது நாலு வார்தை பாரட்ட வேண்டும்! போல தோன்றினால் இந்த greenvishu@rediffmail.com ஈ.மெயில் முகவரிக்கு மெயில் அனுப்பலாமே! (இவரது புகைப்படம் எனக்கு வந்து சேர்ந்ததும் எனது பதிவில் போட்டு விடுகிறேன்!)

பி.கு: அடுத்த போஸ்ட் "மாபெரும் வெற்றி பெற்ற அம்பியின் நெல்லை மாநாடு!"(அம்பியின் அரிய புகைபடங்களுடன்)

37 comments:

Paavai said...

In my ex company we used to have this concept called power of one - i was reminded of that - as MK Gandhi said - if all of us can become the change we want to see .... sigh - nediya peru moochu

on another note, what happened to thadipasanga .. onnum seidi illa romba naala

rnatesan said...

அம்பி,
நான் உடன் அவருடன் தொடர்பு கொள்ள விரும்புகிறேன்.நான் என்னால் முடிந்த அளவு கடலூரில் போதை ஒழிப்பு பணியில் ஓய்வு நேரங்களில் ஈடுபட்டு உள்ளேன்!!அவருடனும் இணைந்தும் பணியாற்ற விரும்புகிறேன்!!
கீதா அவர்கள் மூலமாக தங்கள் வலைப் பதிவுக்கு நான் வந்ததை மறக்காமல் என் பதிவிற்கு (பதிவா அது!!)வந்து பின்னூட்டம் இட்ட நல்ல குணத்தைப் பாராட்டுகிறேன்.ஆனால் எல்லோரும் அப்படி செய்வது இல்லை!!!
மீண்டும் வருவேன் உங்களின் தரமான நகைச்சுவையைப் பார்க்க படிக்க ரசிக்க சமயத்தல் குட்ட!!

Syam said...

எது எப்படியோ இந்த ஒரு உருப்படியான போஸ்ட்ட போட்டு கர்ம வீரன் போஸ்ட்டுக்கு விமோசனம் தேடிக்கிட்ட...nice job by that prof

Syam said...

//Old Monks(அய்! இது என் பிராண்டு பேர் ஆச்சே//

இதுதான வேண்டாம்கறது...அந்த **** pub ல ரெண்டு பேரும் தான அடிச்சோம்... :-)

நடேசன் வேற பயமுறுத்தராரு போதை ஒழிப்புனு... :-)

Syam said...

//சில பேர் வயசான காலத்துல ஊர், ஊரா சுத்திட்டு களப்பணி ஆற்றுகிறேன்!னு பீலா விடுகிறார்களே//

தலைவி கீதாவ தான சொல்ற...எனக்கு தெரியும் இருந்தாலும் மத்தவங்களுக்கு கன்பீசன் இருக்க கூடாது இல்ல :-)

Kanya said...

ambi...

ennappa raasa... nalla vishayam pesum poothukooda yaaraaivaathu nayyandi vidanumaa??

geetha madatha intha ootu ootureenga... enna pengal kootani pooda vechuduveenga poola irukke???

aama athu enna kovilukku kodutha tubelight'la paatan muppatan peru pooduvaanga theriyum.. machini pera?? enna anubavama?? :P pathaathathukku akka asin'a??

steady'a irukkum poothu thene intha post pooteenga... oru santhegam thaan... adakki vaasikanum rasaa.... public watching!! :P

mathapadi oru nalla nabara introduce panni vechathukku danksngnaa

Kanya

Prasanna Parameswaran said...

arumai nalla vishaytha thodangki vecchurukeenga வாழ்த்துக்கள்!

Geetha Sambasivam said...

grrrrrrr, ambi, ithu nallaavee illai.தேவை இல்லாமல் நான் ஆற்றிய களப்பணியை இந்தப்பதிவில் இழுத்ததற்கு உங்களை வன்மையாகக் கண்டிக்கிறேன். இதிலே எதுக்கு என்னோட வயசே திரும்பத் திரும்ப வருது? வேறே ஒண்ணும் தெரியலியே? நான் பாருங்க எப்படி எல்லாம் இழுக்கிறேன். பாவம் பயம்.

Ponnarasi Kothandaraman said...

Hehehe... Unga post'ey diffrnt thaan

Balaji S Rajan said...

Ambi,

Oh... vandhacha... Nellaila... makkal thopittangalonnu ninaichene.. Addressey canomey...yennadannu ninaichane... BTW how was your meeting. Good to know about this person who is doing this job. We shall definitely do our best. Thanks for writing about it. Eagerly waiting for your next post...

Syam said...

வேதா சொல்றத பார்த்தா தலைவிய பத்தி அவளவுதானா...அவங்க அருமை(!!!) பெருமை(???) விளக்கி தனியா ஒரு போஸ்ட் கிடையாதா :-)

My days(Gops) said...

thala asathiteeenga thala....namma side'la irrundhu oru ujepullu message koduthuteeenga...
vaalthugirom...
50th post'ku congrats...
nice info..

namma bloggers meet'la , blog saaarpa oru 'tree'a nattruvom...enna sollureeenga..

நாகை சிவா said...

அம்பி!
மிகவும் பயனுள்ள பதிவு. நானும் கல்லூரியில் படித்த(????) போது எக்ஸ்னோராவில களப்பணி ஆற்றி உள்ளேன். நம்ம ஏரியாவில் நம் நண்பர் இதை திறம்பட செய்து கொண்டு உள்ளார். அது இன்னும் விரிவடைய வேண்டும். அவருக்கு விரைவில் தனி அஞ்சல் அனுப்பி விபரங்கள் பெறுகின்றேன். தகவலுக்கு நன்றி.

Ram said...

ippo namakku ore mahanubaavulu "Geetha Saambasivam" thaan thriyiraanga...!!!

ambi said...

@paavai, ohh! is it? great to know the details. pls do continue. :)
//what happened to thadipasanga .. onnum seidi illa romba naala //

unable to understand. enna sollreenga?

@rnateshan, i'm really happy that the purpose of this post is attained. surely will give U his cell no and address. Also you can drop a mail to him. i read your all posts. Me too like The Mother very much. :)
//மீண்டும் வருவேன் உங்களின் தரமான நகைச்சுவையைப் பார்க்க படிக்க ரசிக்க சமயத்தல் குட்ட!! //
mothira kaiyala kuttu vaanga readyaa irukken. :)

@syam, danks, pubaa? thoda! neeyum koluthara velaiya aarambichutiyaa? :)

@kanya, danks, danks, vaama minnal, nayaandi ellam genela iruku, naan enna seyyatum? (with innocent looku).
geetha madama pathi ungalukku theriyaathu. inime than kacheri kalai katta poguthu. :)
//machini pera?? enna anubavama?? :P pathaathathukku akka asin'a?? //

he hee, i've no machini as well as no wife. i'm shtill youngku! :)

@iIndianangel, danks alot. :)

@veda, he hee, danks, danks dheyvamee!
//இதோட நிறுத்தினா போதுமா, இத விட பெரிசா எதிர்பார்த்தேன்//
irukku, ithu chumma trailer thaan, inimee thaan main picture. thani post abt our bnglre meet irukku. appa irukku avangalukku Aapu. :)

@geetha, he hee,
//இதிலே எதுக்கு என்னோட வயசே திரும்பத் திரும்ப வருது? //
inimee thaan irukku kacheri, wait and see. :)

@ponnarasi, danks, romba naala Aaleye kanoom? bulbu companyla senthaachaa? :)

@Balaji, danks alot, yes met my brother. surely will post in a kalakkal style. he is also planning to post a similar one. so double treat to the readers. :)

@syam, pls read my replies toveda's & geetha madam.

@mydays, he hee, dank U pa! kandippa tree natruvoom, nee sonna athuku objectionee kidayathu pa! :)

@nagai siva, danks sudan puli. i know that U'll initiate. :)
//நானும் கல்லூரியில் படித்த(????) போது //
appo padikalaiyaa? Ahaaa! Avanaaa neeyee? :)

@ram, ahaaa! madam ungalukku something kuduthutaangalaa? visaarikanumee! :)

@veda, apdiyaa? irungka pathutu thakka bathil adi kudukaren. romba thaan Aatam podraanga. :)

தி. ரா. ச.(T.R.C.) said...

enna ambi ithukku than adikati mokkai pathivu sollakkutathu,mokkai pathivukkum poka kutathu athan effect ippati. aana oru nalla vishyathi patri snnathukku nandri.katcheri eppa aarampam yaru pakka vathyam.nalla பககாvathiyama pottukko.

Pavithra said...

It was good on your friend's part. With your humour combined ..congrats on your half century.

Kanya said...

thooda... cycle gaap'la santro ootiveengannu paatha... bull dozer oootureenga...

wife illa athunaala machini illa... othukuren... romba vaasthavamaana logic thaan.... youth'a athu yaaru?????

chinna pulla thanamma illa irukku??? :P

Gnana Kirukan said...

Ambi - congratulations on ur 50th post :)..

I didnt have an internet conn at home for the past week..so couldnt comment earlier - romba sry pa :)

Geetha Sambasivam said...

அம்பி, கூட்டணி சேர்ந்து விட்ட மகிழ்ச்சியிலே எகிறிக் குதிக்க வேண்டாம் தம்பி, நான் தனி ஒரு ஆளாகவே சமாளிப்பேன் என்னை நம்பி, வெற்றி வேல், வீர வேல்,

"அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பது இல்லையே!
உச்சி மீது அம்பி வந்து குட்டினாலும் அச்சமென்பது இல்லையே! "
@வேதா, நீங்க ஒரு சாதா
போனாப்போகுதுனு விடறேன் தோதா!

Geetha Sambasivam said...

அம்பாசமுத்திரம் சமையல் அறையிலும், கல்லிடைக்குறிச்சி சமையல் அறையிலும் நீங்க மூணு பேர் மட்டும் வம்பு அளந்துட்டு மஹாநாடா? மஹாநாடா? விஷயம் வெளியே வரட்டும், சரியான பதில் வரும்.

Geetha Sambasivam said...

@ச்யாம்,
இது நல்லாவே இல்லை. உங்க பாசமலரை நான் போட்டுக் கொடுத்ததுக்காகவா? இப்படி? சீக்கிரம் பதிவு எழுதுங்க மறுபடி, வச்சுக்கறேன்.

smiley said...

ambi, good on ur part to spread the news :)

Unknown said...

ambiyin aimbadhaavadhu postku en paaraatugal....nalla vishayam solli irukeenga, muyarchippom....

ambi said...

@TRC sir, he hee, danks sir, kavalaiyee padaatheenga, kacheri balamaa thaan irukkum. neenga ellam kooda irukeenga, aprom enna kavalai. :)

@pavithra, danks, danks :)

@kanya, he hee, buldozer enna mudinja container lorrye odiduvoom illa! naaga thaan youthu! :)

@arjuna, romba thanks nanba, neeye oru nadamaadum google. unakku ethukku pa net connection ellam? :) LOL

@geetha, romba, romba pesiteegna, ini porukka mudiyaathu.

//நீங்க மூணு பேர் மட்டும் வம்பு அளந்துட்டு மஹாநாடா? மஹாநாடா? விஷயம் வெளியே வரட்டும், சரியான பதில் வரும். //
athukku thaan with pic's i'm going to post. Ullathu ullapadi! :)

@smiley, ohh, this is a small thing i did. danks dude.

//நான் சாதா தான், எனக்கு எப்பவுமே தன்னடக்கம் அதிகம்//
@veda, correctta sonnenga dheyvamee! ungalai sonnathum enakku nenju kothikkuthu. ayaagoo! ithukku thakka bathiladi oru thani pathivaa neenga potte aaganum. (narayana! narayana!) :)

@bala.g, danks pa! ellam unga vazhi thaan. :)

Geetha Sambasivam said...

நாரதர் வேலை நடக்காது, படமா போடப் போறீங்க? படம்? பார்க்கலாம் அதையும், ரொம்ப நான் பேசறேனா?

வேதா தெய்வமா? நாரதர் பேசறாரா? நானா? தன்னடக்கம் எப்படினு பார்க்கறேன், Grrrrrrrrrrrrrrr

KC! said...

adhellam ok, nee 1 re/- subscription serndhaya? Adhai sollu..illa oorukudhan ubadesam kadhaiya? ;-) And indha ariya pictures...nee zoo-la vazhndha podhu yaravadhu edutha photos-a?? Pls release, I am eager to know your past life - ROTFL

Indha vishwa madhiri ooruku oruthar varanum namma TN-la, it would be damn good!

கைப்புள்ள said...

அம்பி! 50ஆவது பதிவு பயனுள்ள பதிவு. (மத்தப் பதிவுகளும் பயனுள்ள பதிவு தான்...இது கொஞ்சம் எக்ஸ்ட்ரா பயனுள்ள பதிவு)

(அம்பி! நம்ம ஒப்பந்தம் ஞாபகம் இருக்கில்ல?)
:)

Harish said...

Paravaala..naatula idu maadhiri naalu peru irukiradhunaala thaan mazhai peyudu...

Butterflies said...

mm nalla vishyama potrukkinga gud gud...approm...sithar pathi poda poringannu soneengaa...enna aachu?

ambi said...

@geetha,ரொம்ப உறும்பாதீங்க, வயசான காலதுல உடம்புக்கு ஆகாது! :)

@usha, cha! yen imagea damage pannanumnee oru creature ulagathula irukkuna athu nee thaan! grrrr..
//indha ariya pictures...nee zoo-la vazhndha podhu yaravadhu edutha photos-a?? Pls release, I am eager to know your past life //
he hee, singam ellam zoo la thaan irukum.

//பயனுள்ள பதிவு.//
@kaipulla, nandri thala!
//அம்பி! நம்ம ஒப்பந்தம் ஞாபகம் இருக்கில்ல?)//
ஹி, ஹி ஒப்பந்தம் நினைவில் உள்ளது. சத்தம் போட்டு சொல்லாதீங்க, உங்க சங்கத்து தலைவலிக்கு கேட்டுற போகுது! :)

@harish, correcttaa sonna pa! danks.

@subha, danks thangachi! sithargal pathi details collect panniaachu! thoguthu ezhutha neram illa, ennaiyum velai ellam seyya solraanga! :) will try by best. danks for the reminder.

Geetha Sambasivam said...

@கைப்புள்ள,
நீங்க கைப்புள்ளனு நினைச்சா அம்பியோட ஒப்பந்தமா? இது என்ன புதுக்கரடி?
@அம்பி, ஒவ்வொரு ஆளா உங்க பக்கம் இழுத்தாலும் தனி ஒரு ஆளாப் போராடுவேன், புள்ளி விவரத்தோட! தைரியம் இருந்தா வாங்க தனியா கூட்டணி வைக்காம!Grrrrrrrrrrrrrrrrrrrrrrr

Viji said...

Ambi- Congrats for the 50th post... athisayama nalla vishayam ellam solla aarambichuttinga... :D

Vicky Goes Crazy... said...

good one dude ..so i assume u have started saving one rs daily ..

do u have website of tat organisation ..let me have a look :) ...

மு.கார்த்திகேயன் said...

unmayile romba urupadiyana postu ambi..appo "yaar intha karma veeran"nu kettathu nalla post illiyannu ketka kudathu...

viswanaathukku oru J.. avar parri ellorukkum solli, oru mun utharanam sonna ambi (vera vazhi illama) oru J!!!

ambi said...

//தைரியம் இருந்தா வாங்க தனியா கூட்டணி வைக்காம//

@geetha, நான் கூட்டம் சேர்க்க வில்லை மேடம், இது அன்பால் சேர்ந்த கூட்டம். :)

@viji, danks, kindallu..? irukaatum, irukkatum! :)

@vicky, thanks for the support,Tree has no website vicky.

@karthik, US ellam epdi irukku pa? danks, danks. athu enna vera vazhi illamaa? unmaiyaa othukanum. :)

gils said...

ada paavam geetha madam...en avangala potu intha vaatu vaatreenga...ungalukaga aasaiya aapu ambinu thedi pudichu pattamlam kdutuhurukaanga..2 bad :)...but nice post..nalla nakkal vidreenga :) usha ketta oru roova maeruku sound kaanum..n ver r the fotos...subramnyam swmy amthiri foto podren video udren..manadu supernu poster adichitenga..papom enna than varuthunu :)